“குழந்தை பெற்றுக் கொள்வது குறித்து திட்டமிட”.. கணவருடன் பிக் பாஸ் வீட்டில் நுழையும் நடிகை!

இந்தி பிக் பாஸ் சீசன் 12ன் முதல் போட்டியாளராக அறிவிக்கப்பட்டுள்ளார் நடிகை பாரதி சிங்.

சென்னை: பிக் பாஸ் வீட்டில் வைத்து தான் தங்களது வாழ்க்கையின் அடுத்த கட்டம் குறித்து யோசிக்க வேண்டும் என அதிரடியாக பேட்டியளித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் நடிகை பாரதி சிங்.

தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு, இந்தி என இந்தியா முழுவதும் பிக்பாஸ் நிகழ்ச்சி வெவ்வேறு மொழிகளில் வெவ்வேறு சேனல்களில் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சிக்கென்று மிக அதிக அளவில் ரசிகர்கள் உள்ளனர்.

இந்நிலையில், இந்தியில் சல்மான் கான் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 12வது சீசன் வரும் 16-ம் தேதி தொடங்க உள்ளது.

விசித்திர ஜோடி:

விசித்திர ஜோடி:

வழக்கமாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் தனிநபர்கள் மட்டுமே இருக்கும் நிலையில், இந்த முறை விசித்திர ஜோடி என்ற தலைப்பில் உண்மையான ஜோடிகள் பிக் பாஸ் வீட்டில் தங்க உள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. உண்மையான சினிமா பிரபலங்கள் ஜோடி வீட்டில் அடுத்த 100 நாட்கள் வசிக்க உள்ளதால், ஒவ்வொரு நாளும் வித்தியாசமான திருப்பங்கள் கொண்டதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முதல் போட்டியாளர்கள் ஜோடி:

முதல் போட்டியாளர்கள் ஜோடி:

இதன் அறிமுக விழா கடந்த சில நாட்களுக்கு முன்னர் கோவாவில் நடைபெற்றது. அதில், முதல் போட்டியாளர்கள் ஜோடியாக நகைச்சுவை நடிகை பாரதி சிங் மற்றும் அவரது கணவர் ஹர்ஷ் லிம்பாச்சியா ஆகியோரை நடிகர் சல்மான்கான் அறிமுகப்படுத்தினார்.

நிச்சயம் ஜெயிப்பேன்:

நிச்சயம் ஜெயிப்பேன்:

அப்போது மேடையில் பேசிய பாரதி சிங் "நான் பணத்திற்காகத்தான் இந்த பிக்பாஸ் போட்டியில் கலந்து கொண்டேன். கண்டிப்பாக நான் ஜெயிப்பேன்" எனக் கூறி அனைவருக்கும் மேடையிலேயே அதிர்ச்சி கொடுத்தார். மேலும் நிகழ்ச்சியில் இருந்து என கணவர் வெளியேறினாலும் எனக்கு கவலையில்லை, நான் போராடியாவது இந்த போட்டியில் ஜெயிப்பேன்'' என்றார் அவர்.

பிக் பாஸ் வாய்ப்பு:

பிக் பாஸ் வாய்ப்பு:

இது ஒருபுறம் இருக்க, முன்னதாக ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில் அவர், ‘திருமணத்திற்குப் பிறகு நீண்ட ஹனிமூன் சென்ற நாங்கள், பின்னர் காட்ரோன் கே கிலாடி படத்திற்காக அர்ஜெண்டினா சென்று விட்டோம். அங்கிருந்த போது தான் பிக் பாஸ் தரப்பில் இருந்து எங்களிடம் பேச்சுவார்த்தை நடைபெற்றது. படப்பிடிப்பு முடிந்து வந்ததும் பேசிக் கொள்ளலாம் எனக் கூறி விட்டோம்.

திட்டம்:

திட்டம்:

தொடர்ந்து பட வேலைகளில் ஈடுபட்டிருந்ததால், திருமண வாழ்க்கையில் எங்களது அடுத்த கட்டம் குறித்து ஆற அமர எங்களால் பேச இயலவில்லை. எனவே பிக் பாஸ் வீடு எங்களுக்கு மிகவும் உதவும் என நம்புகிறோம். இந்த ஷோவில் வைத்து தான் குழந்தைப் பெற்றுக் கொள்வது குறித்து நாங்கள் திட்டமிட வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார் பாரதி.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X