நிறைமாத நிலவே வா வா… நடை போடு மெதுவா மெதுவா.. பூஜா ராமச்சந்திரனின் க்யூட் போட்டோஸ்!

சென்னை : நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் பூஜா ராமச்சந்திரனின் புகைப்படத்தைப் பார்த்து ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

விஜேவாக தனது வாழ்க்கை பயணத்தை தொடங்கிய பூஜா ராமச்சந்திரன், தமிழ், தெலுங்கு, மலையாளப் படங்களில் நடித்துள்ளார்.

இவர் தமிழில், காதலில் சொதப்புவது எப்படி, பீட்சா, காஞ்சனா 2, நண்பேன்டா, அந்தகாரம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

பூஜா ராமச்சந்திரன்

பூஜா ராமச்சந்திரன்

நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் பூஜா ராமச்சந்திரன் சார்பட்டா படத்தில் வேம்புலி கதாபாத்திரத்தில் நடித்த மலையாள நடிகர் ஜான் கொக்கைனை 2019ம் ஆண்டு இரண்டாவதாக காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு, கணவன் மனைவி இவரும் சும்மா ரொமான்ஸ் சொட்ட சொட்ட கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வந்தனர்.

கணவருடன் கடற்கரையில் ஆட்டம்

கணவருடன் கடற்கரையில் ஆட்டம்

கர்ப்பமாக இருக்கும் போதே பூஜா, சுக பிரசவத்திற்காக தலை கீழாக யோகாசனம் செய்து ரசிகர்களை பதறவிட்டார். அது மட்டும் இல்லாமல், பேபி பம்ப் வயிற்றை காட்டிக் கொண்டு கணவன் மனைவி இருவரும் கடற்கரை மணலில் பிகினியில் ஆட்டம் போட்டனர். இந்த போட்டோவைப் பார்த்த ரசிகர்கள், இவங்களை யாராவது கண்ட்ரோல் பண்ணுங்கப்பா என்று பதறிப் போய் கருத்து கூறி வந்தனர்.

நிறைமாத நிலவே வா வா

நிறைமாத நிலவே வா வா

இதையடுத்து, கடந்த வாரம் நடிகை பூஜா ராமச்சந்திரனுக்கு வளைக்காப்பு கோலாகலமாக நடைபெற்றது. அந்த விழாவில் அவரின் நெருங்கிய உறவினர்கள் மட்டும் கலந்து கொண்டனர். தற்போது, பூஜா பிங்க் நிற பட்டு புடவையில் இருக்கும் போட்டோவை பகிர்ந்துள்ளார். அந்த போட்டோவில் புடவைக்கு மேட்சாக மேக்கப் மற்றும் ஆபரணங்களுடன் பூஜா ராமச்சந்திரன் முன்பை விட அழகாக இருக்கிறார். இந்த போட்டோவை பார்த்த ரசிகர்கள் நிறைமாத நிலவே வா வா... நடை போடு மெதுவா மெதுவா.. என பாட்டுப்பாடி வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இரண்டாவது திருமணம்

இரண்டாவது திருமணம்

பூஜா ராமச்சந்திரனின் கணவர் ஜான் கொக்கன் பாகுபலி திரைப்படத்தில் காலகேயர்களில் ஒருவராக நடித்திருந்தார். அதன் பின் கேஜிஎஃப் திரைப்படத்தில் கேங்ஸ்டர் கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானார். அஜித் நடிப்பில் சமீபத்தில் வெளியான துணிவு படத்திலும், கேப்டன் மில்லர் திரைப்படத்திலும் மிக முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். ஜான் கொக்கன ஏற்கனவே நடிகை மீரா வாசு தேவனை முதலில் திருமணம் செய்த நிலையில், இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்து பிரிந்தனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X