Bigg boss tamil 8: விஜய் சேதுபதிக்குத்தான் மொட்டை கடுதாசி தேவைப்படுது.. விளாசிய நடிகை பிரியா ராமன்!

சென்னை: நடிகர் ரஞ்சித் நடிப்பையும் இயக்கத்தையும் சிறப்பாக கையாண்டு வருகிறார். அவரது கவுண்டம்பாளையம் படம் சமீபத்தில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தது. விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலில் நடித்துவந்த ரஞ்சித், தற்போது அந்த சேனலின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக செயல்பட்டு வருகிறார்.

பிக்பாஸ் 8 நிகழ்ச்சி ஒருமாதத்தை கடந்து நடைபோட்டுவருகிறது. இந்த நிகழ்ச்சியின் துவக்க போட்டியாளராக கமிறங்கிய ரஞ்சித், நிகழ்ச்சியின் முக்கியமான போட்டியாளராக மாறியுள்ளார். அடுத்தடுத்து சிறப்பான கன்டன்ட்களை கொடுத்து வருகிறார். அவரது மனைவி பிரியா ராமன் அவருக்கு வெளியிலிருந்தபடி சப்போர்ட் செய்து வருகிறார்.

television bigg boss tamil 8 vijay sethupathi

பிக்பாஸ் தமிழ் 8 ஷோ: விஜய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சி அடுத்தடுத்து ரசிகர்களை கவர்ந்து வருகிறது. இந்த நிகழ்ச்சியின் அடுத்தடுத்த ப்ரோமோக்களும் நிகழ்ச்சிக்கான எதிர்பார்ப்பை ரசிகர்களிடையே அதிகரித்து வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்த நிகழ்ச்சியில் தீபாவளி கொண்டாட்டமாக வைல்ட் கார்ட் போட்டியாளர்களாக 6 பேர் நிகழ்ச்சியின் என்ட்ரி கொடுத்திருந்தனர். கடந்த வாரத்தில் இதுகுறித்து பேசிய விஜய் சேதுபதி வைல்ட் கார்ட் என்ட்ரி போட்டியாளர்களால் நிகழ்ச்சியில் எந்தவிதமான மாற்றமும் தென்படவில்லை என்று சாட்டை அடித்தார். தொடர்ந்து ஒவ்வொரு போட்டியாளர்களுக்கும் மொட்டை கடுதாசி தேவை என்றும் அவர் கூறியிருந்தார்.

விஜய் சேதுபதிக்கு மொட்டை கடுதாசி: இந்நிலையில் அதையொட்டிய சம்பவங்கள் நிகழ்ச்சியில் கடந்த வாரத்தில் நடந்தது. தற்போது ஸ்கூல் யூனிபார்மில் போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் நடைபோட்டு வருகின்றனர். இந்நிலையில் இந்த நிகழ்ச்சி குறித்து பேசிய நடிகர் ரஞ்சித்தின் மனைவியும் பிரபல நடிகைமான பிரியா ராமன் நிகழ்ச்சி குறித்து அடுத்தடுத்த விஷயங்களை பகிர்ந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் நடிகர் விஜய் சேதுபதி தான் சேஃபான கேமை ஆடி வருவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். மேலும் அவருக்கு தான் மொட்ட கடுதாசி தேவைப்படுவதாகவும் அவர் விலாசியுள்ளார். விஜய் சேதுபதியின் ஹோஸ்டிங்கை தான் ரசிக்கவும் செய்துள்ளதாக கூறியுள்ள பிரியா ராமன், ஆனால் சொல்ல வேண்டிய விஷயங்களை சொல்லித்தான் ஆகவேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட ரஞ்சித் மகன்: முன்னதாக பிக்பாஸ் 8 நிகழ்ச்சியில் பேசிய நடிகர் ரஞ்சித், தன்னுடைய மூத்த மகன் ஆதித்யா ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறியிருந்தார். இது அவர் மீதான பார்வையை மாற்றியுள்ளது. இதுகுறித்து பேசிய பிரியா ராமன் தங்களின் மூத்த மகன் குறித்த விஷயங்களை பகிர்ந்து கொண்டார். ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட எனது மூத்த மகனை நடிகர் ரஞ்சித் மற்றும் தான் இருவரும் சேர்ந்து மிகச் சிறப்பாக பார்த்து வருவதாக கூறியுள்ளார். அவரை வெளியுலகத்தினர் எப்படி எதிர்கொள்வார்கள் என்பதற்காக தான் அவரை வெளியில் காட்டவில்லை என்றும் பிரியா ராமன் கூறியுள்ளார்.

ரஞ்சித்தின் மூன்று குழந்தைகள்: ஆதித்யா மீது ஒன்று கரிசனப்படுவார்கள் அல்லது கேலி செய்வார்கள் என்று பிரியா ராமன் கூறியுள்ளார். நடிகர் ரஞ்சித் ஆதித்யாவையும் இளையமகன் ஆகாஷையும் மிகவும் பொறுமையுடன் அணுகுவார் என்றும் குறிப்பிட்டுள்ளார். தனக்கு மொத்தம் மூன்று குழந்தைகள் என்று ரஞ்சித் எப்போதும் கூறுவார் என்றும் முதல் குழந்தையாக தன்னை தான் அவர் சுட்டிக் காட்டுவார் என்றும் பிரியா ராமன் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X