சீரியல் நடிகையின் பிறந்த நாள் பார்ட்டியில் கும்மாளம்.. கட்டிப்பிடித்து செய்யும் அட்டகாசத்தை பாருங்க!

சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி இல்லத்தரசிகளின் மனதை வென்ற சீரியல்களில் ஒன்று தான் ரோஜா. இந்த தொடர் காதல், துரோகம், வன்மம் என அனைத்தும் கலந்த ஒரு விறுவிறுப்பாக தொடராகும். இந்த சீரியலுக்கு என்று தனி ரசிகர்கள் கூட்டமே உண்டு. இந்த தொடரில் முக்கிய கதாபாத்திரமான ரோஜா கதாபாத்திரத்தில் நடித்தவர் தான் பிரியங்கா நல்காரி, தனது 31வது பிறந்த நாளை தோழிகளுக்கு பார்ட்டி வைத்து கொண்டாடி உள்ளார். அந்த போட்டோ இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.

ஆந்திர மாநிலத்தில் உள்ள விசாகப்பட்டினத்தில் பிறந்து வளர்ந்த நடிகை பிரியங்கா நல்காரி, விசாகப்பட்டினத்திலேயே தனது பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை முடித்தார். மாடலிங்கில் ஆர்வம் கொண்ட இவர், மாடல் அழகியாக, ஒரு சில விளம்பரத்திலும் நடித்திருந்தார். அந்த விளம்பரத்தின் மூலமாக பிரியங்காவிற்கு தெலுங்கு தொலைக்காட்சியில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதன் பின், கன்னட தொடரில் நடித்தார். சீரியலைத் தொடர்ந்து, ஒருசில படங்களில் சின்ன ரோலில் நடிக்கும் வாய்ப்பும் இவருக்கு கிடைத்தது. பின் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ரோஜா சீரியலில் லீட் ரோலில் நடித்தார். 2018ஆம் ஆண்டு ஒளிபரப்பான இந்த சீரியல் கிட்டத்தட்ட 5 வருடத்திற்கு பிறகு 2022ம் ஆண்டு முடிவந்தது. இதில் சிபு சூர்யன், நியாஷ் கான் ஆகியோர் நடித்திருந்தனர்.

Priyanka Nalkari Sun tv Roja serial

பிரியங்கா நல்காரி: இந்த சீரியல் முடிவடைந்த நிலையில், பிரியங்கா நல்காரி ஜீ தமிழ் தொலைக்காட்சியில் சீதாராமன் சீரியலில் நாயகியாக நடித்து வந்தார். இந்த சீரியலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. ஆனால், திடீரென அந்த சீரியலில் இருந்து தனிப்பட்ட விஷயம் காரணமாக விலகினார். அதன் பின், காதும் காதும் வைத்தது போல, பிரியங்கா நல்காரி தனது காதலரும், தொழிலதிபருமான வர்மாவை திருமணம் செய்து கொண்டு மலேசியாவில் செட்டில் ஆனார். அவரது திருமண புகைப்படத்தை பார்த்த இவரின் தீவிர ரசிகர்கள், அதிர்ச்சி அடைந்தனர். திருமணத்திற்கு பின் சீரியலில் நடிக்காமல் விலகி இருந்த பிரியங்கா நல்காரி, மலேசியாவில் தனது கணவரோடு சேர்ந்து ஓட்டல் பிஸ்னஸ் ஒன்றை தொடங்கி அதை கவனித்து வந்த நிலையில், மீண்டும், ஜீ தமிழ் தொலைக்காட்சியில் நள தமயந்தி என்ற தொடரில் நடித்து வந்தார். ஒரு கட்டத்தில் இந்த சீரியலும் முடிவுக்கு வந்தது.

Priyanka Nalkari Sun tv Roja serial

பிறந்த நாள் பார்ட்டி: இந்நிலையில் இணையத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் பிரியங்கா நல்காரி, தனது 31வது பிறந்தநாளை தனது நண்பர்களுக்கு பார்ட்டி வைத்து கொண்டாடி உள்ளார். அந்த போட்டோவை பிரியங்கா நல்காரி தனது இன்ஸ்டாகிராமில் ஷேர் செய்துள்ளார். அந்த போட்டோவை பார்த்த ரசிகர்கள் பலர் அவருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் மாரி தொடரில் இருந்து, ஆஷிகா விலகியதைத் தொடர்ந்த அந்த கதாபாத்திரத்தில் யார் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த ரோலில் பிரியங்கா நல்காரி நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அந்த ரோலில் அவர் நடிக்கவில்லை. தற்போது, பிரியங்கா நல்காரி, ரோஜா 2 சீரியலில் நடித்து வருகிறார். ஆனால், இந்த சீரியல் ஓடிடி தளத்தில் மட்டும் ஒளிபரப்பாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X