திருமண வாழ்க்கையை ஒதுங்க காரணம் என்ன? நெகிழ வைத்த ரச்சிதாவின் பதில்!
சென்னை: கன்னடத் தொலைக்காட்சிகள் மூலம் தனது நடிப்புப் பயணத்தைத் தொடங்கி, பின் விஜய் டிவியில் சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் ஒட்டுமொத்த தமிழக மக்களின் செல்லப் பிள்ளையாக மாறியவர் தான் நடிகை ரச்சிதா மகாலட்சுமி. சின்னத்திரை மட்டுமின்றி தற்போது வெள்ளித்திரையிலும் தனக்கேற்ற அழுத்தமான கதாபாத்திரங்களைத் தேர்வு செய்து நடித்து வரும் இவருக்கு, மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது.
ரச்சிதா மகாலட்சுமி பிரிவோம் சந்திப்போம் என்ற சீரியலில் நடித்தபோது தன்னுடன் நடித்த நடிகர் தினேஷ் என்பவரைக் காதலித்துத் திருமணம் செய்து கொண்டார். ஆனால், இவர்களது திருமண வாழ்க்கை நீண்ட நாட்கள் நீடிக்கவில்லை. இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாகக் கடந்த 2021-ஆம் ஆண்டு முதல் இருவரும் பிரிந்து தனித்தனியாக வாழ்ந்து வருகின்றனர். சில ஆண்டுகளுக்கு முன்பு ரச்சிதா, தனது கணவர் தினேஷ் தன்னை மிரட்டுவதாகவும், ஆபாசமாக மெசேஜ் அனுப்புவதாகவும் காவல் நிலையத்தில் அதிரடியாகப் புகார் அளித்திருந்தார்.

ரச்சிதாவின் பளிச் பதில்: கணவரைப் பிரிந்து ரச்சிதா தனியாக வாழ்ந்து வருவதால், சோசியல் மீடியாவில் அவர் மீது பல விமர்சனங்கள் வைக்கப்படுகின்றன. சமீபத்தில் செய்தியாளர் ஒருவர் அவரிடம், உங்களுக்கு ஜாலியாக இருக்க வேண்டும், சுதந்திரமாக ஊர் சுத்த வேண்டும் என்பதற்காகத்தான் திருமண வாழ்க்கையில் இருந்து ஒதுங்கி இருக்கிறீர்கள் எனப் பல கருத்துகள் வருகிறதே என நேரடியாகக் கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த ரச்சிதா, என்னுடைய உலகத்தை நானே உருவாக்க நினைக்கிறேன். எனக்குப் பலருக்கு உதவி செய்வதற்கு மிகவும் பிடிக்கும். நிறையப் பரிசுகளை மற்றவர்களுக்குக் கொடுப்பது பிடிக்கும், எல்லாவற்றிற்கும் மேலாகக் குழந்தைகளைத் தத்தெடுத்து வளர்க்க வேண்டும், அவர்களைப் படிக்க வைக்க வேண்டும் என்ற பெரிய ஆசை இருக்கிறது. ஜாலியாக ஊர் சுற்றிக்கொண்டிருக்கும் இந்த ரச்சிதாவிற்குள் இப்படியொரு ஆசையும் இருக்கிறது. இதையெல்லாம் நான் சுதந்திரமாகச் செய்ய வேண்டும் என்றால் நான் தனியாகத்தான் இருக்க வேண்டும். இவை அனைத்திற்காகவும் தான் நான் எனக்கெனத் தனியாக ஒரு உலகத்தை உருவாக்கி வாழ்ந்து கொண்டிருக்கிறேன் என்று பதில் அளித்துள்ளார்.


Click it and Unblock the Notifications