சீரியலை விட்டு விலகிய ராதிகா..! பேத்தி ஸ்கூலில் சொன்ன கதை? சரத்குமார் ரியாக்ஷனை பாருங்க!
சென்னை: நடிகை ராதிகா சரத்குமார் வெள்ளித்திரையில் பிசியான நடிகையாக நடித்துக் கொண்டிருந்தாலும் சின்ன திரையிலும் ஒரு சில சீரியல்களில் நடித்தது கொண்டிருக்கிறார். அதிலும் கலைஞர் டிவியில் சமீபத்தில் ஒளிபரப்பாகி வரும் தாயம்மா சீரியலில் தாயம்மாவாக நடித்து பலருடைய மனதை கவர்ந்து கொண்டிருக்கிறார்.
ஆனால் இப்போது ராதிகா சரத்குமார் அரசியலிலும் கவனம் செலுத்தி வருவதால் தாயம்மா சீரியலில் இருந்து விலகி விட்டதாக செய்திகள் வெளியாகி இருக்கிறது. அதே நேரத்தில் என்னதான் தான் பிசியாக இருந்தாலும் தன்னுடைய குடும்பத்திற்கு தான் எப்போதும் முக்கியத்துவம் கொடுப்பேன் என்று சொல்லிக் கொண்டிருக்கும் ராதிகா தன்னுடைய பேத்தியின் பள்ளிக்கு சென்று கதை வாசித்து இருக்கிறார்.

நடிகை ராதிகா சரத்குமாருக்கு பெரிய அளவில் அறிமுகம் தேவை இல்லை. நடிகையாகவும், ராடான் நிறுவனத்தின் தலைவராகவும் அரசியல் கட்சி தலைவராகவும் பல்வேறு முகங்களை கொண்ட ராதிகா சின்னத்திரையிலும் வெள்ளி திரையிலும் பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார். அதே நேரத்தில் தன்னுடைய குடும்பத்தின் மீதும் அளவு கடந்த அன்பை செலுத்தி வருகிறார்.
அதுபோல நடிகை ராதிகாவின் முதல் கணவரின் மகள் தான் ரேயன். இவர் இங்கிலாந்தில் உள்ள லீட்ஸ் பல்கலைக்கழகத்தில் விளையாட்டு நிறுவனத்தில் முதுகலை பட்டம் பெற்றவர். அதுபோல ரேயன் சமூக வலைதளத்தில் எப்போதும் ஆக்டிவாக இருந்து வருகிறார். தன்னுடைய குழந்தை பருவ போட்டோஸ்கள், குடும்பத்தினருடன் இருக்கும் புகைப்படங்கள் என பலவற்றையும் பகிர்ந்து கொண்டிருக்கிறார்.
அதுபோல ரேயனின் கணவர் அபினவ் ஒரு கிரிக்கெட் வீரர். இந்த தம்பதிக்கு தாராக் என்கிற மகனும் ராத்யா என்ற மகளும் உள்ளனர். அதே நேரத்தில் ராதிகா தன்னுடைய பேரன் பேத்திகள் மீது அளவு கடந்த அன்பு வைத்திருக்கிறார். அடிக்கடி அவர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்து கொண்டிருக்கிறார். அந்த வீடியோக்களையும் ரேயன் தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்து வருகிறார்.
இப்படியான நிலையில் சமீபத்தில் ராத்யா படிக்கும் பள்ளியில் தாத்தா பாட்டி கதை சொல்லும் ஆக்டிவிட்டி நடந்திருக்கிறது. அதில் ராதிகாவும் சரத்குமாரும் கலந்துகொண்டு அங்கு படிக்கும் குழந்தைகளிடம் கதை சொல்லி மகிழ்ந்திருக்கின்றனர். அவர்கள் எவ்வளவு பிஸியாக இருந்தாலும் தன்னுடைய பேத்தியின் வகுப்பிற்கு ஒரு கதையைப் படிக்க நேரம் ஒதுக்கி இருக்கிறார்கள்.
அதனால் தான் அவர்கள் சிறந்த தாத்தா பாட்டி என்று ரேயன் உணர்ச்சி பொங்க இந்த வீடியோவை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். வரும் ஏப்ரல் 19ஆம் தேதி தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக மக்களவைத் தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது. இந்த நிலையில் தனது சமத்துவ மக்கள் கட்சியை நடிகர் சரத்குமார் பாஜகவுடன் இணைத்திருக்கிறார். பாஜகவில் அவர் ஐக்கியமாகி இருக்கிறார்.
அதுபோல கன்னியாகுமரியில் நடந்த தேர்தல் பிரச்சாரத்தில் ராதிகா மற்றும் சரத்துகுமார் மேடையிலேயே மோடியை சந்தித்து பேசி இருந்தார். இப்படி தேர்தல் பணிகள் ஒரு பக்கம் பிஸியாக நடந்து கொண்டிருக்கும் நேரத்தில் தன்னுடைய பேத்திக்கு கதை சொல்வதற்காக இவர்கள் பள்ளிக்கு சென்று இருக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
நேரில் இப்படி பேச முடியுமா? பிடிக்கலைன்னா அன்ஃபாலோ பண்ணிட்டு போடா.. வெளுத்த வரலட்சுமி
அதே நேரத்தில் ராதிகா தன்னுடைய பேத்திக்கு கதை சொல்வதற்காக வேகமாக நடந்து சென்று கொண்டிருக்கும்போது சரத்குமார் கூட நடந்தபடியே நாங்கள் பள்ளிக்கு சென்று ஏபிசிடி படிக்கப் போகிறோம் என்று கலாய்த்து கொண்டே போகிறார். அதோடு பள்ளியில் தன்னுடைய பேத்தியை மடியில் தூக்கி வைத்து ராதிகா கதை சொல்லிக் கொண்டிருக்கும்போது சரத்குமாரும் சேர்ந்து ஆடியபடியே கதை சொல்லிக் கொண்டிருந்தார். இந்த வீடியோ இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











