Ramya Krishnan: மீண்டும் சீரியலில் நடிக்கவந்த ரம்யா கிருஷ்ணன்.. எந்த தொடர் பாக்கலாங்களா?

சென்னை: நடிகை ரம்யா கிருஷ்ணன் தொடர்ந்து பல ஆண்டுகளாக சினிமா, சீரியல் என நடிப்பில் பன்முகம் காட்டி வருகிறார்.

53 வயதான நிலையிலும் தன்னுடைய பிட்னசில் அதிகமாக கவனம் செலுத்தி சிறப்பாக பராமரித்து வருகிறார்.

சமீபத்தில் ரஜினிக்கு ஜோடியாக ஜெயிலர் படத்தில் நடித்திருந்தார் ரம்யா கிருஷ்ணன். சிறிய கேரக்டராக இருந்தாலும் இந்த கேரக்டர் அவருக்கு மிகுந்த வரவேற்பை பெற்றுத் தந்தது.

Actress Ramya Krishnan Joining Zee Tamil serial Nala Dhamayanthi

ஜீ தமிழ் சேனலில் நடிகை ரம்யா கிருஷ்ணன் இணையும் நள தமயந்தி சீரியல்: நடிகை ரம்யா திரைத்துறையில் 30 ஆண்டுகளை கடந்து நடித்து வருகிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என இந்திய அளவில் இவர் நடித்துள்ளார். 53 வயதான நிலையிலும் பிட்னசில் சிறப்பான கவனம் செலுத்தி, தன்னுடைய அழகை மெயின்டெயின் செய்து வருகிறார். சினிமாவில் மட்டுமில்லாமல் சீரியல்களிலும் நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளார். இளம் நடிகைகளுக்கு டப் கொடுக்கும் வகையில் நடிப்பிலும் அழகிலும் மாஸ் காட்டி வருகிறார்.

ரஜினியுடன் பல ஆண்டுகளுக்கு முன்பு படையப்பா என்ற படத்தில் நடித்துள்ள ரம்யா கிருஷ்ணன், சமீபத்தில் வெளியான ஜெயிலர் படத்தில் ரஜினியின் மனைவியாக நடித்திருந்தார். சிறிய கேரக்டராக இருந்தாலும் இந்தக் கேரக்டர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இதோடு நிறுத்திக்கலாமே என்று அவர் பேசும் டயலாக், ரசிகர்களை என்டர்டெயின் செய்தது. தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார் ரம்யா கிருஷ்ணன்.

முன்னதாக கலசம், தங்கம், ராஜகுமாரி, வம்சம் என முன்னணி சேனல்களின் சீரியல்களில் நடித்துள்ளார் ரம்யா கிருஷ்ணன். கடைசியாக தெலுங்கில் நாக பைரவி என்ற தொடரில் நத்திருந்தார். இந்நிலையில் ரம்யா கிருஷ்ணன் தமிழில் அடுத்ததாக களமிறங்கவுள்ள சீரியல் குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகவுள்ள நள தமயந்தி என்ற தொடரில்தான் லீட் கேரக்டரில் நடிக்கவுள்ளார் ரம்யா கிருஷ்ணன்.

Actress Ramya Krishnan Joining Zee Tamil serial Nala Dhamayanthi

ஜீ தமிழ் சேனலில் வரும் அக்டோபர் 9ம் தேதி முதல் இந்தத் தொடர் ஒளிபரப்பாகவுள்ளது. சீரியலின் டைமிங் குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 30 ஆண்டுகளை தொடர்ந்து நடித்துவரும் ரம்யா கிருஷ்ணன், 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். சன் டிவியில் ஒளிபரப்பான தங்க வேட்டை என்ற நிகழ்ச்சியிலும் இவர் பங்கேற்று சிறப்பித்தார். இந்த வயதிலும் பிசியாக நடித்துவரும் ரம்யா கிருஷ்ணன் மீதான கிரேஸ் ரசிகர்களுக்கு இன்னும் பல ஆண்டுகள் நீடிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

ரம்யா கிருஷ்ணன், படையப்பா, பாகுபலி, ஜெயிலர் என அடுத்தடுத்த மாஸ் படங்களில் சிறப்பான கேரக்டர்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர். படையப்பா படத்தில் நீலாம்பரியாக நடித்த இவர், வித்தியாசமான ஜானரில் பாகுபலி படத்தில் ராஜமாதாவாக வந்து மிரட்டினார். சமீபத்தல் வெளியான ஜெயிலர் படத்தில் இவரது கேரக்டர் மிகவும் சாந்தமாக இருந்தது. இருந்தபோதிலும் ரசிகர்களை கவர தவறவில்லை. தான் ஏற்கும் கேரக்டர்களுக்கு ஏற்ப தன்னை ட்யூன் செய்துக் கொண்டு வருகிறார் ரம்யா கிருஷ்ணன்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X