மெல்லிய சேலையில் மாராப்பை சரியவிட்ட ரவீனா தாஹா... உச்சு கொட்டும் ரசிகர்கள்!
சென்னை: ஜில்லா, ராட்சசன், தீரன் அதிகாரம் போன்ற பல வெற்றிப் படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து ரசிகர்களிடம் பரிச்சயமானவர் நடிகை ரவீனா தாஹா. பின்னர் பல தொலைக்காட்சி தொடர்களில் நடித்த அவர் தற்போது சமூக வலைதளங்களில் வெளியிட்ட புதிய புகைப்படம் வைரலாகி வருகிறது.
குழந்தை நட்சத்திரமாக திரையுலகில் பயணம் துவங்கிய ரவீனா, ஜீ தமிழில் ஒளிபரப்பான பூவே பூச்சூடவா தொடரில் முதன்மைப் பாத்திரத்தில் நடித்தார். படைப்புக்கு கிடைத்த வரவேற்பு அவருக்கு நல்ல நிலையை உருவாக்கியது. அதைத் தொடர்ந்து விஜய் டிவியின் மௌன ராகம் 2 தொடரில் நடித்த அவர், அந்த தொடரின் மூலம் பெரிய ரசிகர் வரவேற்பைப் பெற்றார். பின்னர் ரியாலிட்டி ஷோ குக் வித் கோமாளியில் கலந்து கொண்டு நகைச்சுவை மூலம் அனைவரையும் கவர்ந்தார்.

நடிகை ரவீனநா தாஹா: இதற்குப் பிறகு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ரவீனா, 91 நாட்கள் வீட்டுக்குள் தங்கி தன்னுடைய ஆட்டத்தை வெளிப்படுத்தினார். பிக் பாஸ் பிந்தைய கட்டத்தில், அவர் சிந்து பைரவி தொடரில் நடிக்க ஒப்பந்தமாகியும் பின்னர் அந்த தொடரிலிருந்து விலகினார். இதனைத் தொடர்ந்து தொடர் தயாரிப்பாளர்களின் புகாரின் பேரில், சின்னத்திரை தயாரிப்பாளர் சங்கம் அவர் மீது ஒரு வருட ரெட் கார்டு தடை விதித்தது. கதையில் முக்கியத்துவம் மாற்றப்பட்டது காரணமாக விலகியதாக சிலர் குறிப்பிட்டாலும், தனிப்பட்ட காரணம் காரணமாக விலகியதாக ரவீனா இன்ஸ்டாகிராம் வழியாக தெளிவுபடுத்தினார்.
கடற்கரையில் சூப்பர் போட்டோ: இந்நிலையில், சீரியல்களில் நடிக்காமல் இருந்தாலும், ரவீனா இன்ஸ்டாகிராமில் பொழுதுபோக்கு மற்றும் நடன வீடியோக்களை வெளியிட்டு பெரும் ரசிகர் ஆதரவைப் பெற்றுவருகிறார். தற்போது, கடற்கரையில் புடவையில் எடுக்கப்பட்ட புதிய போட்டோஷூட் படங்களை அவர் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். இயற்கை சூழலில் எடுக்கப்பட்ட அந்த புகைப்படங்களில் ரவீனாவின் புதிய லுக் ரசிகர்களை கவர்ந்துள்ளது. படங்கள் வெளியான சிலவேளைகளில் ஆயிரக்கணக்கான லைக்குகளும் கருத்துகளும் குவிந்து வருகின்றன. ரெட் கார்டு தடை முடிந்த பின் ரவீனா மீண்டும் எப்போது சின்னத்திரைக்கு திரும்பப் போகிறார் என்ற ஆர்வம் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது.


Click it and Unblock the Notifications











