2 திருமணம்.. 2 விவாகரத்து..ரேஷ்மா பசுபுலேட்டியின் கண்ணீர் கதை!

சென்னை: வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் படத்தின் மூலம் பிரபலமான நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி. இவர், விஜய் தொலைக்காட்சியில் பாக்யலட்சுமி தொடரில், ராதா கதாபாத்திரத்தில் நடித்து இல்லத்தரசிகளின் மனதில் இடம் பிடித்துள்ள ரேஷ்மா தனது வாழ்க்கையில் சந்தித்த கசப்பான அனுபவத்தை பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

சூரி, விஷ்ணு விஷால் நடித்த வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் திரைப்படத்தில் புஷ்பா என்கிற விவகாரமான கதாபாத்திரத்தில் நடித்த ரேஷ்மாவுக்கு அந்த கதாபாத்திரம் நன்றாக கை கொடுத்தது. அந்த படத்திற்கு பிறகுதான் யாருப்பா இந்த புஷ்பா என்று ரசிகர்கள் பலர் இணையத்தில் தேடத் தொடங்கினார்கள். அந்த படத்திற்கு பின் விஜய் டிவியில் பாக்யலட்சுமி சீரியலில் கோபியிடம் ஏமாந்து போகும் அப்பாவி பெண்ணாக நடித்திருந்தார்.

Actress Reshma Pasupuleti Emotional interview speech about her son

நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி: அதன்பின், பாக்கியலட்சுமி சீரியலில் கதை போக போக வில்லியாக மாறியவர். தற்போது கோபியை மிரட்டு மிரட்டு என்று மிரட்டி வருகிறார். இந்த சீரியல் மட்டுமில்லாமல், ஜீ தமிழில் தொலைக்காட்சியில், ஒளிபரப்பாகி வரும் சீதாராமன் என்ற சீரியலில் வில்லியாக நடித்து வருகிறார். மேலும், கலக்க போவது யாரு சாம்பியன்ஸ் 4ல் நடுவராகவும் இருந்து வருகிறார்.

கண்ணீர் கதை: இந்நிலையில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ள இவர், தனது வாழ்க்கையில் கடந்து வந்த கசப்பான அனுபவத்தை கண்ணீருடன் பகிர்ந்துள்ளார். அதில், முதல் திருமணம் என்பெற்றோர் பார்த்து வைத்த திருமணம் தான். அவர் என்னை அடிமை போல நடத்தியதால், அந்த திருமணம் தோல்வி அடைந்தது. இதையடுத்து நான் அவரிடம் இருந்து விவாகரத்து பெற்றுக்கொண்டேன். பின் அமெரிக்கா சென்றேன், அங்கு பாக்ஸர் ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டு அமெரிக்காவில் செட்டில் ஆனேன்.

துடித்துப்போனேன்: திருமணமான புதிதில் நல்லவர் போலத்தான் அவர் தெரிந்தார். அதன் பின் தான் அவருக்கு பல பெண்களுடன் தொடர்பு இருந்தது எனக்கு தெரிந்தது. ஒரு முறை எனக்கும் அவருக்கும் ஏற்பட்ட சண்டையில் என்னை அடித்து விட்டார்.அப்போது நான் ஐந்து மாத கர்ப்பிணியாக இருந்தேன். அந்த நேரத்தில் எனக்கு கடுமையான வயிற்று வலி வந்தது. அப்போது யாரும் எனக்கு உதவ முன்வராததால், தானே காரை எடுத்துக்கொண்டு மருத்துவமனைக்கு சென்றேன். அதன் பிறகு குழந்தை பிறந்தது கிட்டத்தட்ட நான்கு மாதம் இன்குபேட்டரில் இருந்தான். குழந்தை இறந்துவிடுமோ என்று நான் துடிதுடித்துப்போனேன் கடவுள் என் குழந்தையை எனக்கு மீட்டு கொடுத்தார். அந்த குழந்தை தான் தற்போது எனக்கு ஆறுதலாக இருக்கிறான். இதையடுத்து,அவரை விவாகரத்து செய்துவிட்டேன்.

மகனுக்காக: அதன்பின், குழந்தையை வைத்துக்கொண்டு இந்த போராட்டத்தை தனியாக என்னை சமாளிக்க முடியவில்லை அம்மா, அப்பாவிற்காக அமெரிக்காவில் இருந்து இந்தியா வந்துவிட்டேன். மகன் பிறந்ததும் எனக்கு இரு முழுமையான வாழ்க்கையும் சவாலான வாழ்க்கையும் தனியாக இருந்தது. அவனுக்காக பல மருத்துவமனைகளை பார்த்து என் பையனை சரி செய்தேன். தினமும் அவனுக்கு பிசியோதரப்பி தரவேண்டும் என்பதால், எனக்கு பணத்தேவை இருந்தது. இரண்டு மூன்று இடத்தில் வேலைப் பார்த்தேன். சாப்பிடக்கூட எனக்கு நேரம் இருக்காது, பல நாட்கள் காரில் அமர்ந்து தான் சாப்பிடுவேன். அந்த நேரம் ரொம்ப கஷ்டப்பட்டேன், மகனை நன்றாக வளர்க்க வேண்டும் என்ற எண்ணம் மட்டும் தான் இருந்தது என்று அந்த பேட்டியில் ரேஷ்மா தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X