‘ராமர்‘ இப்படி வழிபட சொன்னாரா? இது தான் பக்தியா? முட்டாள் மக்களே.. கொந்தளித்த சீரியல் நடிகை!

சென்னை: கடப்பாவில் நடந்த 'ஸ்ரீராம சோபா யாத்திரை' விழாவில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டனர். இதில் பட்டாசு வெடித்ததில் ஒருவர் உயிரிழந்தார். இது பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் இதுகுறித்து நடிகை சந்தியா ஜகர்லமுடி கண்டித்து தனது இன்ஸ்டாகிராமில் வீடியோ வெளியிட்டுள்ளார்.

இதில், கடப்பாவில் 'ஸ்ரீராம சோபா யாத்திரை'வில் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்ட அந்த விழாவில் பட்டாசுகள் வெடிக்கப்பட்டன. குறிப்பாக ராக்கெட் பட்டாசு வெடிக்கப்பட்டது. அந்த ராக்கெட் அந்த பகுதியில் செக்யூரிட்டியாக வேலை பார்த்துக் கொண்டிருந்த ஹரி என்பவரின் வயிற்றுக்குள் புகுந்து, வயிற்றுக்குள்ளேயே அது வெடித்து, அவரின் குடல் வெளியெ வந்து, ஆபத்தான நிலையில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த அவர் தற்போது இறந்து விட்டதாக தகவல் வந்துள்ளது.

Sandhya Jagarlamudi instagram
Photo Credit:

நடிகை சந்தியா: அவர் செக்யூரிட்டியாக வேலை பார்த்து தான் அந்த குடும்பத்தை காப்பாற்றி உள்ளார். அவருக்கு திருமணமாகி 15 வருடமாக குழந்தை இல்லாமல் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் தான் குழந்தை பிறந்துள்ளது. செக்யூரிட்டி ஹரி அந்த ஊர்வலத்தில் கலந்து கொள்ளவில்லை. அவர் ஓரமாக அவருடைய செக்யூரிட்டி வேலையை பார்த்துக் கொண்டு இருந்தார். ஹரி என்பவருடைய வயிற்றில் பட்டாசு வெடிக்க வேண்டும் என ராமர் சொன்னாரா? இது கடவுள் ராமருடைய தவறு இல்லை? இது யாருடைய தவறு என்றால், முட்டாள் மக்களின் தவறு, பொதுமக்கள் கூடுதல் இடத்தில் பட்டாசு வெடிக்க அனுமதி கொடுத்த அதிகாரிகளின் தவறு.

இது தான் பக்தியா: பொதுமக்கள் அதிகம் கூடி இருக்கும் இடத்தில் பட்டாசு வெடிக்க வேண்டிய அவசியம் என்ன இருக்கிறது. அப்படி பட்டாசு வெடித்து வழிபடுவது தான் பக்தியா? இந்த விஷயத்தை மட்டும் நான் பேசவில்லை. கடந்த ஆண்டும் இதே போல விழா ஒன்றில் பட்டாசு வெடித்து, அது இரண்டரை வயது சிறுமி மீது விழுந்து அந்த சிறுமி உயிரிழந்தார். இந்த இரண்டரை வயது குழந்தையின் உயிர் உயிரில்லையா? அதேபோல செப்டம்பரில் நடந்த விநாயகர் விழாவிலும் இதே போல நடந்த வெடி விபத்தில் 15 வயது சிறுவன் ஒருவன் உயிரிழந்தான். இந்த சிறுவனுடைய உயிர் உயிரில்லையா? மத ஊர்வலம், பிறந்த நாள் கொண்டாம், திருமணம் எதுவாக இருந்தாலும் அதற்கு பட்டாசு வெடித்து தான் கொண்டாட வேண்டுமா? பட்டாசு வெடிப்பதால் பல உயிர்கள் போகும்போது இதை ஏன் தடை செய்யக்கூடாது? நீதிமன்றம் ஏன் தானாக முன்வந்து வந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. இப்படி பட்டாசு வெடிப்பதை பார்க்கும் போது பொதுமக்கள் ஏன் தடுக்கவில்லை, இவர்களின் உயிர் எல்லாம் உயிர் இல்லையா? என நடிகை நடிகை சந்தியா ஜகர்லமுடி கடுமையாக அந்த வீடியோவில் பேசி உள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X