Sangeetha : 2 பிரபலங்கள் கல்யாணம் பண்ணி வாழ்றது ஈஸி இல்ல.. நான் பட்ட வேதனை இருக்கே.. சங்கீதா எமோஷனல்

சென்னை: 90ஸ் கிட்ஸ்களின் ஃபேவரைட் நடிகைகளில் ஒருவரான நடிகை சங்கீதா க்ரிஷ் தன்னுடைய திருமண வாழ்க்கை குறித்தும் தன்னுடைய கணவர் குறித்தும் பல தகவல்களை உருக்கமாக பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார்.

திரைப்பட பின்னணி பாடகரான க்ரிஷை 2009 ஆம் ஆண்டு திருவண்ணாமலையில் நடிகை சங்கீதா திருமணம் செய்திருந்தார். இப்போது இந்த தம்பதிக்கு ஒரு மகள் இருக்கிறார்.

Actress Sangeetha Krish Interview with my family life

இந்த நிலையில் இரண்டு பெரும் பிரபலங்கள் திருமணம் செய்து கொண்டால் வாழ்க்கையில் சந்தோஷமாக இருக்க முடியாது என்று சங்கீதா பேசியிருக்கிறார்.

சங்கீதா ஒரு நடிகையாக மட்டுமல்லாமல் நடன கலைஞராகவும், தொகுப்பாளராகவும், ரியாலிட்டி ஷோ நடுவராகவும் இருந்து வருகிறார். அதிலும் அவர் நடித்த பிதாமகன், உயிர், தனம் போற்ற படங்கள் இவருடைய நடிப்பின் இவருக்கு தனித்துவமான அடையாளத்தை ஏற்படுத்தி இருந்தது. இந்த நிலையில் சமீபத்தில் எந்த திரைப்படத்திலும் அதிகமாக நடிக்காமல் இருக்கும் சங்கீதா 2009 ஆம் ஆண்டு பாடகர் கிரிஷை காதலித்து திருமணம் செய்திருந்தார்.

இவர்களுடைய காதல் திருமணம் பிறகு நடந்த பிரச்சனைகள் குறித்து பேட்டி ஒன்றில் சங்கீதா இப்போது மனம் திறந்து பேசி இருக்கிறார். அதில் கிரிஷை நான் ஒரு நிகழ்ச்சி ஒன்றில் முதல் முறையாக பார்த்தேன். பார்த்ததுமே எனக்கு கிரிஷை பிடித்து விட்டது. அதற்குப் பிறகு நான் தான் கிரிஷிடம் பேசி இருந்தேன். இருவரும் நன்றாக பழகி இருந்தோம். அப்போது என்னுடைய காதலை நான் தான் முதல்முறையாக கிரிஷிடம் சொன்னேன்.

காதலை சொல்லி ஆறு மாதத்திற்குள் எங்களுக்கு திருமணம் நடைபெற்றது. திருமணம் எங்களுக்கு ஒரு இக்கட்டான சூழ்நிலையில் நடந்தது என்று தான் சொல்ல வேண்டும். திருமணத்திற்கு கிரிஷுடைய குடும்பத்தினர் சம்மதிக்கவில்லை. கடைசி நிமிடம் வரைக்கும் திருமணம் நடக்குமா இல்லையா என்ற ஒரு பரபரப்போடு தான் எங்களுடைய திருமணம் நடைபெற்றது. சரி திருமணம் ஆனால் எல்லாமே சரியாகிவிடும் என்று நினைத்திருந்தேன்.

நான் எதிர்பார்த்தபடி பல போராட்டங்களுக்குப் பிறகு திருமணம் நடைபெற்றது. ஆனால் திருமணத்திற்கு பிறகு தான் பெரிய பிரச்சனைகள் வந்தது. இரண்டு வருடங்கள் நான் அதிகமாக கஷ்டப்பட்டேன். எல்லா பக்கத்தில் இருந்தும் எனக்கு பிரச்சனைகள் தான் வந்து கொண்டே இருந்தது. நான் வாழ்க்கையில் நுனியில் நின்று கொண்டிருந்தேன் என்று தான் சொல்ல வேண்டும். அந்த அளவிற்கு அந்த இரண்டு வருட காலங்கள் என்னுடைய வாழ்க்கையை ரொம்பவே கஷ்டப்படுத்தி இருந்தது.

எல்லாரும் நினைக்கிறாங்க இரண்டு செலிப்ரடீஸ் கல்யாணம் பண்ணிக்கிட்டா அவங்களோட வாழ்க்கை சந்தோசமா இருக்கும் என்று ஆனா அப்படியெல்லாம் இல்ல இரண்டு பிரபலங்கள் ஒன்றாவது திருமணம் செய்து ஒரே வீட்டில் வாழ்வது என்பது ஒரு உரைக்குள் இருக்கும் இரண்டு கத்தி என்பது போன்றது தான். நீ பெரிய ஆளா? நான் பெரிய ஆளா என்று ஒரு சண்டை பெருசா வரும்.

இந்த பிரச்சனையை பற்றி நாங்கள் ஆரம்பத்திலேயே பேசி வைத்திருந்தோம். நமக்கு இரண்டு தரப்பிலிருந்து என்ன பிரச்சனை வந்தாலும் நாம ஸ்ட்ராங்கா இருக்கணும். உங்களுக்கு ஒரு பிரச்சனை என்றால் நான் இருப்பேன். எனக்கு ஒரு பிரச்சனை என்றால் நீங்க இருக்கணும் அந்த அன்பு மட்டும்தான் நிலைத்திருக்க வேண்டும் என்று சொல்லி இருந்தோம். அதுபோல எங்களுடைய வாழ்க்கையில் இப்போது நடந்து கொண்டிருக்கிறது என்று அந்த பேட்டியில் சங்கீதா பேசி இருக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X