இது ஆக்‌ஷன் மேடம்.. சீரியல் நடிகை சசிலயா துளசி மாடத்தை என்ன டிரெஸ் போட்டு சுத்துறாரு பாருங்க!

சென்னை: சின்னத்திரை மற்றும் சினிமாவில் நடித்து பிரபலமான நடிகை சசிலயா துளசி மாடத்தை சுற்றும் வீடியோவை தற்போது வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவுக்கு அவர் அணிந்துள்ள ஆடை குறித்த கமெண்டுகள் அதிகம் இடம்பெற்றுள்ளன.

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சினிமா பிரபலங்கள் முதல் சின்னத்திரை பிரபலங்கள் என பலரும் ரீல்ஸ் வீடியோக்களை பதிவிட்டு வருகின்றனர். எப்படியாவது அதிக லைக்ஸ் வாங்க வேண்டும் என டிசைன் டிசைனாக அவர்கள் தங்கள் தனித்திறமையை காட்டுகிறேன். க்ரியேட்டிவ் மைண்டை வெளிப்படுத்துகிறேன் என வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர்.

Actress Sasilaya gets trolled for sharing Tulsi madam video

சோஷியல் மீடியாவில் மோடிவேஷன் கருத்துக்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்த சசிலயா என்ன இப்படி இறங்கிட்டாரே என ரசிகர்கள் கமெண்ட் அடித்து கலாய்த்து வருகின்றனர்.

நடிகை சசிலயா: மீனாட்சி பொண்னுங்க சீரியலில் நடித்து சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் சசிலயா. அதற்கு முன்னதாக டிக்டாக்கில் இவர் வீடியோக்களை வெளியிட்டு பிரபலமானார். மீனாட்சி பொண்ணுங்க, இதயம் உள்ளிட்ட சீரியல்களில் நடித்த சசிலயா சில படங்களிலும் நடித்துள்ளார்.

Actress Sasilaya gets trolled for sharing Tulsi madam video

செல்வராகவன் படத்தில்: மோகன் ஜி இயக்கத்தில் செல்வராகவன், நட்டி நட்ராஜ் நடித்து வெளியான பகாசூரன் படத்தில் பெண்களை சப்ளை செய்யும் தொழில் செய்பவராக சசிலயா நடித்திருப்பார். கொடூரமாக இவரை அதற்காக செல்வராகவன் கொலை செய்வது போல காட்சிகள் படமாக்கப்பட்டு இருக்கும். சமீபத்தில் கயல் ஆனந்தி நடிப்பில் வெளியான ஒயிட் ரோஸ் படத்திலும் இவர் நடித்துள்ளார்.

ஜீன்ஸ் அணிந்து துளசி மாடத்தில்: குளித்து முடித்து தலையில் துண்டுடன் ஜீன்ஸ் பேண்ட், டிசர்ட் அணிந்து கொண்டு துளசி மாடத்தில் "கெளசல்யா சுப்ரபாதம்" பாடலை போட்டு சாமி கும்பிட்டு சுற்றும் வீடியோவை சசிலயா தற்போது வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் மாடர்ன் கேர்ளானாலும் சாமி கும்பிடுவதை மறக்கவில்லையே என கமெண்ட் போட்டுள்ளனர்.

இது ஆக்‌ஷன் மேடம்: இந்நிலையில், தற்போது சசிலயா வெளியிட்டுள்ள வீடியோவை பார்த்து மேடம் இது ஆக்‌ஷன் மேடம் என சொல்வதெல்லாம் உண்மை லாரன்ஸ் வசனத்தை கமெண்ட் போட்டு ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர். மேலும், ஜீன்ஸ் அணிந்து துளசி மாடத்தை சுற்றுவதற்கு பதிலாக சேலை அணிந்திருந்தால் நல்லா இருக்கும் என்றும் லைக் வாங்க என்னவெல்லாம் குட்டி கரணம் அடிக்க வேண்டி உள்ளது பாருங்க என கிண்டல் செய்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X