அதிரடியாக விலகிய சீதா.. சமையல் நிகழ்ச்சியில் நடந்த குளறுபடி.. இனி இவருக்குப் பதில் இவர்!
சென்னை: முன்பெல்லாம் சீரியலில் தான் இனி இவருக்கு பதில் இவர் என்று சொல்லுவார்கள். ஆனால், இப்போது, ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்குபவர்களே மாறிவிடுகிறார்கள். இப்படித்தான் 'கிச்சன் எக்ஸ்பிரஸ்' நிகழ்ச்சியில் நடந்த பஞ்சாயத்தால் அதிரடியாக மாற்றப்பட்டுள்ளார்.
'ஆண் பாவம்' படத்தில் கிராமத்து பெண்ணாக ஒரு அப்பாவி பெண் கதாபாத்திரத்தில், பாவாடை தாவணியில் நடித்து தமிழ் ரசிகர்களின் இதயத்தில் இடம்பிடித்தவர் தான் நடிகை சீதா. இந்த படத்திற்கு பின் ஆயிரம் பூக்கள் மலரட்டும், இவள் ஒரு பவுர்ணமி, சங்கர் குரு, தங்கச்சி, துளசி, குரு சிஷ்யன், பெண்மணி அவள் கண்மணி, அவள் மெல்ல சிரித்தாள் என அடுத்தடுத்த படத்தில் நடித்தார்.தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், போன்ற மொழிகளிலும் அனைத்து முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்துள்ளார்.

நடிகை சீதா: 80 கால கட்டத்தில் படு பஸியான நடிகையாக இருந்த இவர், 'புதிய பாதை' திரைப்படத்தில் நடிகை சீதா பார்த்திபனுக்கு ஜோடியாக நடித்தார். இந்த படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இதைத்தொடர்ந்து சீதா- பார்த்திபன் ஜோடியின் கெமிஸ்ட்ரியும் ரசிகர்களை கவர்ந்தது. இந்த படத்தில் நடித்து கொண்டிருக்கும் போதே இருவரும் காதலிப்பதாக கிசுகிசுக்கள் வெளியானது.இதை உறுதிப்படுத்தும் வகையில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பின், ஒப்புக்கொண்ட படங்களை மட்டுமே நடித்த சீதா, ஒரேயடியாக சினிமாவை விட்டே விலகினார்.
கிச்சன் எக்ஸ்பிரஸ்: இவர்களுக்கு மூன்று குழந்தைகள் இருக்கும் நிலையில், நடிகை சீதாவும், பார்த்திபனும் கருத்துவேறுபாடு காரணமாக பிரித்தனர். பார்த்திபனை பிரிந்த சீதா மீண்டும் சீரியலில் நடித்து வருகிறார். இந்நிலையில் ஜீ தமிழ் சேனலில் கடந்த சில வாரங்களாக குக்கிங் நிகழ்ச்சியான 'கிச்சன் எக்ஸ்பிரஸ்' நிகழ்ச்சியில் நடிகை சீதா மற்றும் புதுவையைச் சேர்ந்த மெக்னஸி ஆகிய இருவரும் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சி தொடங்கிய வேகத்திலேயே சீதா அதில் இருந்து மாற்றப்பட்டு அவருக்கு பதிலாக பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை சுஜிதா கமிட்டாகி உள்ளார்
ஆரம்பமே பஞ்சாயத்து: இதற்கு காரணம் இந்த நிகழ்ச்சியின் புரோமோ ஷூட்டிங்கின் போதே பஞ்சாயத்து ஆரம்பித்துள்ளது. சீதா தொடர்புடைய காட்சிகளைத் தனியாகவும் இன்னொரு விருந்தினரான புதுச்சேரி இயற்கை விவசாயி கிருஷ்ணா மெக்னசி தொடர்புடைய காட்சிகளை தனியாகவும் தான் எடுத்துள்ளனர். கிருஷ்ணா மெகன்சி தரப்பிலிருந்து வந்த சில கண்டிஷன்களே இப்படி படப்பிடிப்பு நடத்த காரணம் என சொல்லப்படுகிறது. இதனால், சீதா அப்செட்டாகி இருக்கிறார். இது சேனலுக்கே பிடிக்கவில்லை என்றாலும், வேறு வழியில்லாமல் படப்பிடிப்பை நடத்தி உள்ளனர்.
சீதாவிற்கு பதில்: இந்த குளறுபடியுடன் ஆரம்பமான இந்த சமையல் நிகழ்ச்சி இரண்டு வாரங்களே ஒளிபரப்பான நிலையில் சீதா ஷூட்டிங்கில் கலந்துகொள்வதில் சில சிக்கல்கள் உண்டாகி, கடைசியில் தொடர்ந்து அவரால் ஷோவில் பங்கேற்க முடியாத சூழல் வந்தால், ஜீ தமிழ் தொலைக்காட்சி அவரை அதிரடியாக மாற்றி உள்ளது. அவருக்குப் பதில் நடிகை சுஜிதா இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்க இருக்கிறார். இவர் அண்மையில் முடிந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மூன்றாவது இடத்தை பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











