பிரியங்கா மேல பொறாமையில தான் விமர்சனம் செய்றாங்க.. மணிமேகலைக்கு பயம்.. நடிகை ஷகீலா அதிரடி!
சென்னை: விஜய் டிவியின் குக் வித் கோமாளியின் 5வது சீசன் நிறைவு கட்டத்தை எட்டியுள்ளது. கடந்த 4 சீசன்களில் இல்லாத அளவில் இந்த சீசனில் அதிகப்படியான கவனத்தை போட்டியாளர்கள் ஏற்படுத்தியுள்ளதாக விமர்சனங்கள் எழுந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்னதாக ஆங்கர் மணிமேகலை இந்த ஷோவிலிருந்து விலகியுள்ளார்.
குக் வித் கோமாளி ஷோவில் தன்னை பிரியங்கா அதிகளவில் ஆதிக்கம் செலுத்தியதாக மணிமேகலை குற்றம் சாட்டியுள்ளார். இதனால்தான் தான் நிகழ்ச்சியிலிருந்து விலகியதாகவும் அவர் கூறியுள்ளார். இந்நிலையில் பிரியங்கா மீது ஏற்பட்ட பயத்தால்தான் மணிமேகலை இந்த நிகழ்ச்சியிலிருந்து வெளியேறியுள்ளதாக நடிகை ஷகீலா பிரியங்காவிற்கு ஆதரவாக பேசியுள்ளார்.

குக் வித் கோமாளி ஷோ: விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 5வது சீசன் தற்போது நிறைவு கட்டத்தை எட்டியுள்ளது. இந்த நிகழ்ச்சியில் கடந்த 4 சீசன்களில் இல்லாத வகையில் அருவருக்கத்தக்க பல விஷயங்கள் அரங்கேறியுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த நிகழ்ச்சியில் ஆங்கராக செயல்பட்டு வந்த மணிமேகலை, தற்போது நிகழ்ச்சியிலிருந்து விலகும் முடிவை எடுத்துள்ளார். இந்த நிகழ்ச்சியில் குக்காக செயல்பட்ட பிரியங்கா தன்னை ஆங்கராக செயல்பட விடாமல், தன்னுடைய ஆங்கரிங்கில் தொடர்ந்து தலையிட்டதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்த வீடியோவையும் வெளியிட்டிருந்தார்.
பிரியங்கா மேல பொறாமை: இதையடுத்து மணிமேகலைக்கு ஆதரவாக பிரியங்காவை பலரும் வறுத்தெடுத்து விட்டனர். மீடியாவில் பிரபலமாக உள்ளவர்களே இந்த செயலில் ஈடுபட்டதை பார்க்க முடிந்தது. இந்நிலையில், பிரியங்கா, ஆங்கரிங்கில் உயரம் தொட்ட நிலையில், அவர் மீதான பொறாமையில்தான் இத்தகைய விமர்சனங்கள் எழுப்பப்பட்டு வருவதாக நடிகை ஷகீலா தெரிவித்துள்ளார். பிரியங்கா பெண் என்றும் பார்க்காமல், அவரது பர்சனல் விஷயங்கள் குறித்து விமர்சித்தது குறித்தும் அவர் கேட்டுள்ளார். இந்த நிகழ்ச்சியில் தானும் பங்கேற்றவள் என்ற முறையில், தனக்கு பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவரின் மனநிலையும் தெரியும் என்று ஷகீலா கூறியுள்ளார். மிகப்பெரிய ஆங்கராக மாற வேண்டும் என்ற எண்ணத்தில்தான் பிரியங்கா மீதான பயத்தில் மணிமேகலை இப்படி செயல்பட்டுள்ளதாக ஷகீலா குறிப்பிட்டுள்ளார்.
துவக்கத்திலேயே வெளியேறி இருக்கலாமே?: இந்த நிகழ்ச்சிக்கு கன்டெண்ட் தேவை என்பதால், அதை சிறப்பாக பேசும் பிரியங்காவின் பேச்சுக்களை நிகழ்ச்சியின் இறுதியில் எடிட்டிங் டீம் வைத்ததாகவும், இதனால் கடுப்பான மணிமேகலை, ஒரு கட்டத்தில் பிரியங்காவை பேச வேண்டாம் என்று தடுத்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதனிடையே மணிமேகலை தானாக நிகழ்ச்சியில் இருந்து விலகவில்லை என்றும், நிகழ்ச்சியை தொடர ஒத்துழைக்காத பட்சத்தில் நீங்கள் வெளியேறலாம் என்று சேனல் தரப்பில் கூறப்பட்டதாகவும் இதையடுத்தே அவர் வெளியேறும் முடிவை எடுத்ததாகவும், சுயமரியாதை இருந்திருந்தால் பிரச்சினையின் துவக்கத்திலேயே மணிமேகலை வெளியேறி இருக்கலாமே என்றும் ஷகீலா கேள்வி எழுப்பியுள்ளார்.
பிரியங்கா மீது பொறாமை: பிரியங்கா கர்நாடகாவை சேர்ந்தவர் என்று எழுந்துள்ள விமர்சனங்கள் குறித்து பேசியுள்ள ஷகீலா, சினிமா, மீடியாவிற்கு மொழி தடையாக இருக்க முடியாது என்றும் கூறியுள்ளார். இந்த நிகழ்ச்சியில் சுய மரியாதைக்கு எந்தவிதமான பாதிப்பும் இருக்காது என்றும் கோமாளிகள் தவறாக பேசினாலும் உடனடியாக அதை கட் செய்வார்கள் என்றும் கூறியுள்ளார். தொடர்ந்து பேசிய அவர், தன்னுடைய உடல் வாகை பிரியங்கா கொண்டிருந்தாலும் அவருடைய உடை, உடல்மொழி, பேச்சு உள்ளிட்டவை தன்னை மிகவும் இம்ப்ரஸ் செய்துள்ளதாகவும் அவரை பார்த்து தான் பொறாமை படுவதாகவும் தெரிவித்துள்ளார். மணிமேகலையும் தன்னுடைய மகள் போன்றவர் என்று கூறியுள்ள ஷகீலா ஆனாலும் நியாயத்தின் பக்கமே தான் பேசுவதாகவும் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











