»   »  தனுஷுவுக்கு அம்மாவாக நடிக்கவும் ரெடி... அப்ளிகேசன் போட்ட 'வம்சம்' பூமிகா

தனுஷுவுக்கு அம்மாவாக நடிக்கவும் ரெடி... அப்ளிகேசன் போட்ட 'வம்சம்' பூமிகா

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் தனுஷுக்கு அம்மாவாக கூட தாம் நடிக்க தயாராக இருப்பதாக வம்சம் சீரியல் நடிகை பூமிகா (சந்தியா) விருப்பத்தை வெளிப்படுத்தினார்.

சன் டிவியில் காந்தி ஜெயந்தி நிகழ்ச்சியை ஒட்டி நடிகர் தனுஷ் பங்கேற்ற சிறப்பு சூப்பர் சேலஞ்ச் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சன் டிவி சீரியல் நாயகிகள், நாயகர்கள் பங்கேற்றனர்.

Actress Shandiya wants to Mother role in Dhanush movies

அப்போது ஒவ்வொருவரையும் நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் அறிமுகப்படுத்தி வைத்தனர். குலதெய்வம் அலமு ஏற்கனவே தனுஷுக்கு தங்கையாக நடித்தவர்.. அவரும் தனுஷிடம் சில கேள்விகள் கேட்டார்.

பின்னர் 'மலைநாட்டு' பெண்ணாக நடிக்கும் பூமிகா, தனுஷிடம் ஆங்கிலத்தில் கேள்வி கேட்டார். அதற்கு தனுஷ் பதிலளித்து முடித்த போது தொகுப்பாளர் ஆதவன், தனுஷுக்கு அக்கா, அண்ணி வேடத்துக்கு அப்ளிகேசனா? என கிண்டலடித்தார்.

இதற்கு, அக்கா அண்ணி மட்டுமல்ல.. அம்மாவாக கூடவும் நடிக்க நான் தயார் என திருப்பி பதிலடி கொடுத்தார்...

ஆக அப்ளிகேஷன் போட்டாச்சு!

English summary
Actress Shandiya (Vamsam Bhoomika) want to take even Mother Role in Actor Dhanush Movies.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil