பிக்பாஸ் வீட்டிற்குள் வைல்டு கார்டு என்ட்ரியாக நுழையும் ரஜினி பட நடிகை! பரபர தகவல்!

Recommended Video

Watch Video : Actress Shriya Saran wildcard entry to bigg boss house

சென்னை: பிக்பாஸ் வீட்டிற்குள் வைல்டு கார்டு என்ட்ரியாக நடிகர் விஜய் படத்தின் ஹீரோயின் ஒருவர் வர இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

விஜய் டிவியில் 15 போட்டியாளர்களுடன் தொடங்கியது பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி. வாரம் தோறும் நடைபெற்ற எவிக்ஷன் புராசஸால் போட்டியாளர்களின் எண்ணிக்கை குறைந்தது.

போதாகுறைக்கு சரவணனும் மதுமிதாவும் எதிர்பாராத விதமாக வெளியேற்றப்பட்டனர். இதனால் பிக்பாஸ் வீட்டின் ஸ்ட்ரென்த் மளமளவென குறைந்தது.

முதல் வைல்டு கார்டு

முதல் வைல்டு கார்டு

இந்நிலையில் நாட்களை நகர்த்தவும், நிகழ்ச்சியை சுவாரசியமாக கொண்டு செல்லவும் வைல்டு கார்டு என்ட்ரியாக முதலில் நடிகை கஸ்தூரியை களம் இறக்கினர். பின்னலேயே வனிதாவும் வைல்டு கார்டு என்ட்ரியாக பிக்பாஸ் வீட்டுக்குள் வந்தார்.

17 போட்டியாளர்கள்

17 போட்டியாளர்கள்

இதுவரை 17 போட்டியாளர்களை சந்தித்துள்ளது பிக்பாஸ் சீசன் 3.
இந்நிலையில் 18 போட்டியாளராக, வைல்டு கார்டு என்ட்ரியாக பிரபல நடிகை ஒருவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளார் என கூறப்படுகிறது.

இரண்டு நடிகைகள்

இரண்டு நடிகைகள்

அதாவது சிவாஜி படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்த நடிகை ஷ்ரேயா பிக்பாஸ் சீசன் 3யில் வைல்டு கார்டு என்ட்ரியாக நுழையவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. தற்போது நடிகைகளாக பிக்பாஸ் வீட்டிற்குள் இருப்பது நடிகை ஷெரின் மற்றும் வனிதா மட்டுமே.

குறையும் மதிப்பு

குறையும் மதிப்பு

ஷெரினுக்கு ஓரளவுக்கு மக்களின் செல்வாக்கு உள்ளது. லாஸ்லியா கவினுடனான காதலால் தனது ஒரிஜினாலிட்டியை இழந்து வருவதால் அவர் மீதான மதிப்பு நாளுக்கு நாள் குறைந்து வருகிறது.

பிக்பாஸ் திட்டம்

பிக்பாஸ் திட்டம்

இந்நிலையில் இன்னும் மூன்று வாரங்கள் மட்டுமே எஞ்சியுள்ள நிலையில் நிகழ்ச்சியின் சுவாரசியத்தை கூட்டவும் போட்டியை கடுமையாக்கவும் பிரபல நடிகையான ஷ்ரேயாவை உள்ளே அனுப்ப பிக்பாஸ் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பயன்படுத்திக்கொள்வாரா?

பயன்படுத்திக்கொள்வாரா?

அதே நேரத்தில் திருமணத்திற்கு பிறகு நடிகை ஷ்ரேயாவுக்கு பட வாய்ப்புகள் குறைந்துள்ளது. பட வாய்ப்புகளை கவரும் வகையில் கவர்ச்சி போட்டோக்களையும் வீடியோக்களை வெளியிட்டுவந்தார். இந்நிலையில் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியை ஒரு வாய்ப்பாக பயன்படுத்திக்கொள்வார் ஷ்ரேயா என தெரிகிறது.

பிந்து மாதவி, விஜயலட்சுமி

பிந்து மாதவி, விஜயலட்சுமி

முதல் சீசனில் நடிகை பிந்து மாதவியும் இரண்டாவது சீசனில் நடிகை விஜயலட்சுமியும் பிக்பாஸ் வீட்டிற்குள் வைல்டு கார்டு என்ட்ரியாக நுழைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X