BB hindi: பிக்பாஸ் இந்தியில் மிரட்டிய கன்டஸ்டண்ட்.. வச்சு செஞ்ச ஸ்ருதிகா.. ராக்கிங் பர்பார்மென்ஸ்!

மும்பை: நடிகை ஸ்ருதிகா அர்ஜுன் ஸ்ரீ படத்தில் சூர்யாவின் ஜோடியாக என்ட்ரி கொடுத்தவர். தொடர்ந்து தித்திக்குதே, ஆல்பம் என அடுத்தடுத்து நான்கு படங்களில் நடித்த இவர் அத்தோடு மூட்டையை கட்டிக்கொண்டு வீட்டிலேயே செட்டில் ஆகிவிட்டார். தொடர்ந்து அர்ஜுன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட இவர் பிசினஸிலும் சிறப்பாக செயல்பட்டு வந்தார்.

இந்நிலையில் மீண்டும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் டிவியில் என்ட்ரி கொடுத்தார். இவருக்கு சினிமா சரியாக கை கொடுக்கவில்லை என்ற போதிலும் தொலைக்காட்சி அள்ளி அணைத்துக் கொண்டது. தற்போது பிக் பாஸ் ஹிந்தி 18 நிகழ்ச்சியிலும் இணைந்து அடுத்தடுத்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். ஸ்ருதிகா அர்ஜுன்தான் டாக் ஆப் த ஷோ என்பதாக இவரது பயணம் தொடர்ந்து வருகிறது.

shrutika arjun bigg boss hindi 18 show salman khan 18

நடிகை ஸ்ருதிகா அர்ஜுன்: ஸ்ரீ படம் மூலம் தமிழில் என்ட்ரி கொடுத்து தொடர்ந்து அடுத்தடுத்து நான்கு படங்களிலேயே மூட்டை கட்டிய நடிகை ஸ்ருதிகா அர்ஜுன். முதல் படத்திலேயே மாஸான ஹீரோ சூர்யாவுடன் இணைந்த நிலையிலும் இவரால் அடுத்தடுத்த வெற்றிகளை கொடுக்க முடியவில்லை. தேங்காய் சீனிவாசனின் பேத்தி என்ற மிகப்பெரிய பேக்ரவுண்டில் இருந்த போதிலும் கால நேரம் ஒத்துழைக்கவில்லை என்றால் சினிமாவில் ஒன்றுமில்லை என்பதை நிரூபித்து விட்டு திருமணமாகி செட்டில் ஆனார். அர்ஜுன் என்பவரை காதல் திருமணம் செய்த ஸ்ருதிகாவிற்கு ஒரு மகன் உள்ளார்.

குக் வித் கோமாளி டைட்டில் வின்னர்: இந்நிலையில் நீண்ட காலங்கள் கழித்து இவரை எங்கிருந்துதான் பிடித்தார்களோ. குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்று தன்னுடைய சிரிப்பாலும் வளவள பேச்சாலும் ஏராளமான ரசிகர்களை கவர்ந்தார். சிலர் இவரது ரிப்பீட்டட் சிரிப்பால், எதற்குத்தான் சிரிக்கிறார் என்று கடுப்பாகத்தான் செய்தனர். இதையெல்லாம் மீறி அந்த நிகழ்ச்சியின் டைட்டிலை வெற்றி கொண்டு மாஸ் காட்டினார் ஸ்ருதிகா. அது முதல் இவர் பேமஸ் பர்சனாலிட்டி லிஸ்டில் இணைந்து விட்டார். அடுத்தடுத்து youtube பேட்டிகள் என இவரை பார்க்க முடிந்தது. விஜய் டிவியின் அடுத்தடுத்த ஷோக்களிலும் இவர் பங்கேற்று சிறப்பாக வலம் வந்தார்.

பிக்பாஸ் இந்தி 18 ஷோ: அடுத்ததாக தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இணைவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சல்மான்கானின் ஹோஸ்டிங்கில் கடந்த 18 ஆண்டுகளாக நடந்து வரும் பிக் பாஸ் ஹிந்தி 18 ஷோவில் பங்கேற்றுள்ளார் ஸ்ருதிகா அர்ஜுன். இந்த நிகழ்ச்சியில் இடம்பெற்ற முதல் தென்னிந்திய பிரபலம் என்ற பெருமையுடன் வலம் வந்து கொண்டிருக்கும் ஸ்ருதிகா, இந்த வார நாமினேஷன் லிஸ்டிலும் இடம் பெற்றிருந்தார். அனைத்திலிருந்தும் தப்பித்து தற்போது அடுத்த வாரத்திற்கான நாமினேசனை மேற்கொண்ட நிலையில் சக போட்டியாளர் ஒருவரின் சண்டை முற்றியுள்ளது.

ஸ்ருதிகா -அவினாஷ் மோதல்: நாமினேஷனில் அவினாஷ் என்ற சக போட்டியாளரை குறிப்பிட்ட ஸ்ருதிகா, அவர் மற்ற போட்டியாளர்களை மட்டம் தட்டி பேசுவதாகவும் கூறியிருந்தார். இதைக்கேட்ட அந்த அவினாஷ், என்ன பயமாக இருக்கிறதா, வெளியில் வந்தால் முடித்து விடுவேன் என்பதாக எச்சரிக்கை கொடுத்திருந்தார். இதைக் கேட்ட ஸ்ருதிகா, கொடுத்த காசுக்கு அதிகமாக அவினாஷ் நடிப்பதாக பிக்பாஸிடமே கூறுவதாக தற்போது வெளியாகியுள்ள பிரமோவில் காணப்படுகிறது. இதைக்கேட்ட அந்த அவினாஷ் திணறியதையும் பார்க்க முடிந்தது. மொத்தத்தில் இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியில் ராக்கிங் பர்பார்மென்சை கொடுத்து வருகிறார் ஸ்ருதிகா அர்ஜுன்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X