Shrutika arjun: கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்து.. இந்தி பிக்பாஸில் எமோஷனலான ஸ்ருதிகா!

சென்னை: நடிகை ஸ்ருதிகா அர்ஜுன் தற்போது இந்தி பிக்பாஸ் 18 நிகழ்ச்சியில் அதிரடி காட்டி வரும் நிலையில், ஏராளமான ரசிகர்களின் விருப்பத்திற்குரியவராக மாறியுள்ளார். விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின்மூலம்து கவனம் பெற்று ஏராளமான ரசிகர்களுக்கு சொந்தக்காரராகியுள்ளார் ஸ்ருதிகா.

இந்நிலையில் சல்மான் கான் ஹோஸ்ட் செய்துவரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 18வது சீசனில் இவர் தற்போதுபங்கேற்று அதிரடி காட்டி வருகிறார். தென்னிந்தியாவில் இருந்து இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள முதல் பிரபலம் என்ற பெருமை இதன்மூலம் இவருக்கு கிடைத்துள்ளது. தன்னுடைய காதல் கணவர் மற்றும் மகனை பிரிந்து இந்த நிகழ்ச்சிக்காக தற்போது அவர் மும்பையில் உள்ளார்.

television shrutika arjun hindi bigg boss 18 show 18

நடிகை ஸ்ருதிகா அர்ஜுன்: நடிகை ஸ்ருதிகா அர்ஜுன் தேங்காய் சீனிவாசனின் பேத்தியாக சினிமாவில் என்ட்ரி கொடுத்தவர். முதல் படமான ஸ்ரீ படத்திலேயே சூர்யாவிற்கு ஜோடியாக நடித்த இவர், சில படங்களில் நடித்துவிட்டு காணாமல் போனார். பட வாய்ப்புகள் இல்லாத நிலையில் தன்னுடைய படிப்பில் கவனம் செலுத்திய ஸ்ருதிகா, ஒரு கட்டத்தில் அர்ஜுன் என்பவரை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார். சமூக வலைதளம் மூலம் தங்களது சந்திப்பு நிகழ்ந்ததாக ஸ்ருதிகா பேட்டியொன்றில் தெரிவித்திருந்தார். திருமணம் முடிந்த பின்பே இவர் ஒரு பிசினசை துவங்கி வெற்றிகரமாக வலம் வந்ததாகவும் கூறியிருந்தார்.

குக் வித் கோமாளி டைட்டில் வின்னர்: இந்நிலையில் நீண்ட ஆண்டுகள் கழித்து இவர் மீண்டும் விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் மீண்டும் தன்னை வெளிப்படுததிக் கொண்ட இவர், தன்னுடைய ஸ்மைல், டிரெஸ்ஸிங் சென்ஸ் உள்ளிட்டவற்றால் அதிகமான கவனத்தை பெற்றார். டைட்டிலையும் தட்டித் தூக்கினார். இந்த நிகழ்ச்சி இவரை அடுத்தக் கட்டத்தற்கு கொண்டு சென்றது. தொடர்ந்து விஜய் டிவியின் அடுத்தடுத்த நிகழ்ச்சிகளில் கலந்துக் கொண்டு தன்னுடைய சேட்டைகளால் ரசிகர்களை அதிகமாக கவர்ந்த ஸ்ருதிகா,தமிழில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இணைவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியில் என்ட்ரி கொடுத்தார்.

இந்தி பிக்பாஸ் 18 ஷோ போட்டியாளர்: நடிகர் சல்மான் கான் ஹோஸ்ட் செய்துவரும் இந்த நிகழ்ச்சி 18வது சீசனாக நடந்து வருகிறது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள முதல் தென்னிந்திய பிரபலம் என்ற புகழும் ஸ்ருதிகாவிற்கு கிடைத்துள்ளது. இதனிடையே, சக போட்டியாளர்களை மட்டுமில்லாமல் பிக்பாஸையே தமிழில் பேசவைத்து அசரடித்தார் ஸ்ருதிகா.சல்மான் கானின் தீவிர ரசிகை என்று தன்னை அறிமுகம் செய்துக் கொண்ட இவர், துவக்க நிகழ்ச்சியில் அவரது காலில் விழுந்து வணங்கியதும் நடந்தது. தனக்கு காபி கொடுக்கவில்லை என்று பஞ்சாயத்தும் செய்திருந்தார்.

ஃபிரீஸ் டாஸ்கில் நெகிழ்ச்சி: விரைவில் எண்ட் கார்ட் போடவுள்ள இந்த நிகழ்ச்சியில் தொடர்ந்து பல நாட்களாக தாக்கு பிடித்து வருகிறார் ஸ்ருதிஹாசன். இந்நிலையில் தற்போது நிகழ்ச்சியில் ஃபிரீஸ் டாஸ்க் நடந்து வரும் சூழலில், அதில் சிறப்பாக விளையாடி வருகிறார் ஸ்ருதிகா. இந்த டாஸ்கில் பங்கேற்க வந்த தன்னுடைய கணவர் அர்ஜுனை பார்த்ததும் ஓடிவந்து குதித்து அவர்மீது தாவி ஏறிக் கொண்ட ஸ்ருதிகா, அவரை கட்டிப்பிடித்து முத்தங்களை கொடுத்தார். சில நிமிடங்கள் இருவரும் உணர்ச்சிவசப்பட்டு கண்ணீர் விட்டதையும் பார்க்க முடிந்தது. நிகழ்ச்சியில் ஸ்ருதிகாவின் மகனும் வந்த தருணம் உணர்ச்சிப்பூர்வமாக இருந்தது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X