என் கல்யாணம் ரொம்ப கிராண்டா நடக்கணும்னு நினைச்சேன்.. பிக்பாஸ் 18 நிகழ்ச்சியில் கண்கலங்கிய ஸ்ருதிகா!

சென்னை: நடிகையாக தன்னுடைய கேரியரை துவங்கிய ஸ்ருதிகா, முதல் படத்திலேயே நடிகர் சூர்யாவுடன் இணைந்து நடித்து கவனத்தை பெற்றார். இருந்த போதிலும் ஆல்பம், தித்திக்குதே என சில படங்களில் நடித்துவிட்டு பட வாய்ப்புகள் இல்லாததால் ஒதுங்கிவிட்டார். தொடர்ந்து திருமணம் செய்துக் கொண்டு செட்டில் ஆகிவிட்டார். இவருக்கு ஒரு மகன் உள்ளார்.

திருமணமாகி வீட்டிற்குள்ளேயே முடங்கிவிடாமல், தொழிலதிபராக தன்னை நிரூபித்து வருகிறார் ஸ்ருதிகா அர்ஜுன். இதனிடையே நீண்ட வருடங்களுக்கு பிறகு மீண்டும் மீடியா வெளிச்சம் இவர்மீது பட்டுள்ளது. விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்று டைட்டிலையும் வெற்றிக் கொண்ட ஸ்ருதிகா தற்போது இந்தி பிக்பாஸ் 18 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றுள்ளார்.

television shrutika arjun

நடிகை ஸ்ருதிகா அர்ஜுன்: நடிகை ஸ்ருதிகா தேங்காய் ஸ்ரீனிவாசனின் பேத்தி என்ற அடையாளத்துடன்தான் சினிமாவில் என்ட்ரி கொடுத்தார். முதல் படத்திலேயே நடிகர் சூர்யாவுடன் இணைந்து நடித்திருந்த ஸ்ருதிகா, தொடர்ந்து ஆல்பம், தித்திக்குதே என அடுத்தடுத்து 4 படங்களில் நடித்துள்ளார். இந்தப் படங்கள் அவருக்கு சிறப்பாக கைக்கொடுக்காத நிலையில், சினிமாவில் இருந்து ஒதுங்கி திருமணம் செய்துக் கொண்டு செட்டில் ஆனார். அர்ஜுன் என்ற தொழிலதிபரை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். திருமணமான நிலையிலும் சொந்தமாக தொழில் துவங்கி தன்னை மிகப்பெரிய தொழிலதிபராக மாற்றியுள்ளார் ஸ்ருதிகா அர்ஜுன்.

பிக்பாஸ் இந்தி ஷோவில் ஸ்ருதிகா: இதனிடையே நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு இவரை தேடிப்பிடித்து குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்காக அழைத்து வந்தது விஜய் டிவி. தன்னுடைய கலகலப்பான பேச்சு, அழகான உடைகள் உள்ளிட்டவற்றால் இந்த நிகழ்ச்சியில் கவனம் பெற்ற ஸ்ருதிகா, டைட்டிலையும் வெற்றி கொண்டார். இதனால் இவர் தற்போது அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்து நன்கு அறிமுகமாகியுள்ளார். இதனிடையே அடுத்ததாக தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இவர் பங்கேற்பார் என்று கூறப்பட்டது. ஆனால் தற்போது இந்தி பிக்பாஸ் 18 நிகழ்ச்சிக்கு சென்றுள்ளார். தென்னிந்திய அளவில் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள முதல் பிரபலம் என்ற பெருமையையும் ஸ்ருதிகா பெற்றுள்ளார்.

தமிழில் பேசவைத்த ஸ்ருதிகா: துவக்கத்தில் இந்த நிகழ்ச்சியில் அதிகமாக கவனத்தை பெறாத ஸ்ருதிகா தொடர்ந்து, வழக்கம்போல தன்னுடைய பேச்சு மற்றும் செயல்பாடுகளால் சக போட்டியாளர்களையும், பிக்பாஸையும், ரசிகர்களையும் வெகுவாகவே ஈர்த்துள்ளார். நாமினேஷன் லிஸ்ட்டில் இடம்பெற்ற போதிலும், அதிலிருந்து எஸ்கேப்பாகி அனைவரையும் கட்டிப் போட்டு வருகிறார். சக போட்டியாளர்களுக்கு தமிழை சொல்லிக் கொடுத்ததுடன் இந்தி பிக்பாஸையே தமிழில் பேச வைத்தது ஸ்ருதிகாவின் சாதனை. தொடர்ந்து அர்ஜுனுடனான தன்னுடைய காதல் கதையை போட்டியாளர்களிடம் கூறி வருகிறார்.

கண்கலங்கிய ஸ்ருதிகா: இதனிடையே, தற்போது சக போட்டியாளர்களிடம் தன்னுடைய பெற்றோரை தான் அதிகமாக மிஸ் செய்வதாக கண்ணீருடன் பேசியுள்ளார் ஸ்ருதிகா. தங்களது குடும்பத்தை காட்டிலும் அர்ஜுனின் குடும்பம் பணக்கார குடும்பம் என்பதால் அதனால் தன்னுடைய திருமணத்திற்காக தன்னுடைய சொத்துக்கள் அனைத்தையும் அவர் உபயோகப்படுத்தியதாகவும் தெரிவித்துள்ள ஸ்ருதிகா, தன்னுடைய சகோதரரும் இதுகுறித்து எதுவும் கேட்கவில்லை என்றும் கூறியுள்ளார். தன்னுடைய திருமணம் மிகவும் கிராண்டாக நடக்க வேண்டும என்று தான் விரும்பியதாகவும் அவர்களுக்காக பெரிய வீடு வாங்கித் தர வேண்டும், உலகச்சுற்றுலா அழைத்து செல்ல வேண்டும் என தான் விரும்பியதாகவும் கண்கலங்கியபடி கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X