இந்தி பிக்பாஸில் தமிழ் சொல்லிக் கொடுத்த ஸ்ருதிகா.. ரஜினிகாந்தோட ஃபேமஸ் டயலாக் நிலையை பாருங்க!
மும்பை: நடிகர் தேங்காய் ஸ்ரீனிவாசனின் பேத்தி ஸ்ருதிகா அர்ஜூன் தன்னுடைய பள்ளி காலத்திலேயே தன்னுடைய நடிப்பை துவங்கியவர். முதல் படத்திலேயே நடிகர் சூர்யாவுடன் ஜோடி சேர்ந்தவர். முதல் படமான ஸ்ரீ படத்துடன் தொடர்ந்து ஆல்பம் உள்ளிட்ட 4 படங்களில் நடித்த இவருக்கு சரியான வாய்ப்புகள் அமையவில்லை.
தொடர்ந்து திருமணம் செய்துக் கொண்டு செட்டில் ஆன ஸ்ருதிகாவிற்கு மகன் ஒருவர் உள்ளார். இந்நிலையில் தற்போது தன்னுடைய ரீ என்ட்ரியை சிறப்பாக அமைத்து வருகிறார். தொலைக்காட்சியில் குக் வித் கோமாளி ஷோவில் மாஸ் காட்டி டைட்டிலை வெற்றி கொண்ட இவர் அடுத்ததாக பிக்பாஸ் போட்டியில் பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

நடிகை ஸ்ருதிகா: நடிகை ஸ்ருதிகா பிரபல நடிகர் மறைந்த தேங்காய் ஸ்ரீநிவாசனின் பேத்தி என்ற அடையாளத்துடன் நடிக்க வந்தவர். தன்னுடைய பள்ளி காலத்திலேயே ஸ்ரீ என்ற படத்தில் நடிகர் சூர்யாவுடன் ஜோடி போட்டவர். தொடர்ந்து ஆல்பம், நளதமயந்தி உள்ளிட்ட 4 படங்களில் நடித்துவிட்டு, சினிமாவில் இருந்து விலகினார் ஸ்ருதிகா. சரியான பட வாய்ப்புகள் இல்லாத நிலையில், அடுத்தடுத்து படிப்பு, திருமணம், குழந்தை என இவரது வாழ்க்கை பயணம் மாறியது. தனியாக பிசினசையும் செய்து அசத்தி வருகிறார் ஸ்ருதிகா. இந்நிலையில் தற்போது மீண்டும் சின்னத்திரையில் விட்ட இடத்தை பிடித்துள்ளார் ஸ்ருதிகா.
தொலைக்காட்சியில் ரீ-என்ட்ரி: அர்ஜூன் என்பவரை காதலித்து திருமணம் செய்துள்ள ஸ்ருதிகாவிற்கு மகன் உள்ள நிலையில், தன்னுடைய குடும்பத்தினரின் சப்போர்ட்டுடன் பிசினசில் சாதித்துவரும் ஸ்ருதிகா, விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் ரீ என்ட்ரி கொடுத்திருந்தார். இந்த நிகழ்ச்சியில் டைட்டிலை வெற்றி கொண்ட ஸ்ருதிகாவின், கலகலப்பான பேச்சு, டிரஸ்ஸிங் சென்ஸ் உள்ளிட்டவை ஏராளமான ரசிகர்களின் பாராட்டுக்கு உள்ளாகி, இவரை ட்ரெண்டிங்கில் வைத்தது. தொடர்ந்து யூடியூபில் பேட்டிகளை கொடுத்துவரும் ஸ்ருதிகா, தற்போது துவங்கியுள்ள பிக்பாஸ் தமிழ் போட்டியில் இடம்பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இந்தி பிக்பாஸ் 18 ஷோவில் ஸ்ருதிகா: ஆனால் அவர் தற்போது இந்திக்கு தாவியுள்ளார். பாலிவுட்டில் பிரபல நடிகர் சல்மான் கான் தொகுத்து வழங்கிவரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் 18வது சீசனில் தற்போது இவர் இணைந்துள்ளார். இவ்வாறு இணைந்திருக்கும் முதல் தென்னிந்திய பிரபலம் என்ற புகழையும் இவர் இதன்மூலம் பெற்றுள்ளார். துவக்கத்திலேயே இந்த நிகழ்ச்சியில் வணக்கம் கூறி அனைவரையும் கவர்ந்த ஸ்ருதிகா, அடுத்தடுத்து தன்னுடைய சுட்,டித்தனத்தால் இந்தி ரசிகர்களையும் கட்டிப்போட்டு வருகிறார்.
தமிழ் சொல்லிக் கொடுத்த ஸ்ருதிகா: இதனிடையே அவர் பிக்பாஸ் போட்டியாளர் ஒருவருக்கு இந்தி கற்பிக்கும் பிரமோ தற்போது வெளியாகியுள்ளது. இதில் அவர் முதலில் நீ எப்படி இருக்க என்ற வாசகத்தை சொல்லிக் கொடுத்த நிலையில், எதிர்தரப்பில் உள்ள பெண் அதை ஓரளவிற்கு பேசுகிறார். இதோடு ஸ்ருதிகா நிறுத்தியிருக்கலாம் என்பதாக, அடுத்ததாக ரஜினிகாந்தின் சூப்பர் டயலாக்கான நான் ஒரு தடவை சொன்னா என்ற டயலாக்கை அந்தப் பெண்ணுக்கு ஸ்ருதிகா சொல்லிக் கொடுக்க அவர் இதை வைத்து வாயிலேயே வடை சுடுகிறார். அந்த டயலாக்கை அவர், நான் ஒரு தவர வடை சொன்னா என்பதாக கூற இதை பார்ப்பவர்களுக்கு பற்றிக் கொண்டது காமெடி,
முயற்சியை தொடர்ந்த ஸ்ருதிகா: ஆனாலும் தன்னுடைய முயற்சியை கைவிடாமல் ஸ்ருதிகா தொடர்வதாக காணப்படுகிறது. அவர் முயற்சிகள் எல்லாம் பொய்த்துப் போன நிலையில், நம்முடைய ராஜ தந்திரங்கள் அனைத்தும் பொய்யாகிவிட்டதே, இன்னும் பயிற்சி வேண்டுமா என்று யோசிக்காமல், அந்த இளம்பெண்ணுடன் இணைந்து சிரிக்கிறார் ஸ்ருதிகா அர்ஜுன்.


Click it and Unblock the Notifications











