Sivaangi :கவர்ச்சி ரூட்டுக்கு மாறிய ஷிவாங்கி.. சேலையில் க்யூட் போட்டோஸ்!
சென்னை :நடிகை ஷிவாங்கி விஜய் டிவியின் சூப்பர் சிங்கர்ஸ், குக் வித் கோமாளி போன்ற நிகழ்ச்சிகளின்மூலம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறார்.
இந்த நிகழ்ச்சிகள் மூலம் அவருக்கு தொடர்ந்து படங்களில் நடிக்கும் வாய்ப்புகளும் கிடைத்து வருகின்றன. சிவகார்த்திகேயனுடன் டான், வடிவேலுவுடன் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் போன்ற படங்களில் அவர் நடித்துள்ளார்.
தற்போது குக் வித் கோமாளி சீசன் 4 நிகழ்ச்சியில் அவர் பங்கேற்று வருகிறார். இந்த நிகழ்ச்சியில் அவர் தற்போது குக்காக மாறியுள்ளார்.

கவர்ச்சி ரூட்டுக்கு மாறிய ஷிவாங்கி : நடிகை ஷிவாங்கி விஜய் டிவியின் சூப்பர் சிங்கர்ஸ் நிகழ்ச்சியில்தான் முதன்முதலில் பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியில் தன்னுடைய க்யூட் குரலால் ரசிகர்களை கவர்ந்தார். தன்னுடைய பாடல்களால் மட்டுமில்லாமல் தன்னுடைய க்யூட் வாய்சாலும் அவர் ரசிகர்களை கவர்ந்தார். இந்த நிகழ்ச்சியின் மூலம் விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் பங்கேற்கும் வாய்ப்பு ஷிவாங்கிக்கு கிடைத்தது. இந்த நிகழ்ச்சியில் கோமாளியாக பங்கேற்று ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.
கோமாளியாக பல்வேறு கெட்டப்புகளாலும் தன்னுடைய பர்பார்மென்சாலும் ஏராளமான ரசிகர்களை பெற்றார். தொடர்ந்து அடுத்தடுத்த சீசன்களில் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தார். இந்த நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் நடிகர் அஸ்வினுடன் இணைந்து இவர் செய்த சேட்டைகள் தற்போதும் ரசிகர்களின் பேவரைட்டாக அமைந்துள்ளன. தற்போது இந்த நிகழ்ச்சியின் 4வது சீசன் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த சீசனில் ஷிவாங்கி குக்காக மாறியுள்ளார்.

கோமாளியாக இருந்து பல்வேறு கெட்டப்புகளின்மூலம் ரசிகர்களை தொடர்ந்து கவரவேண்டிய கட்டாயம் இருந்த நிலையில், தற்போது குக்காக தன்னுடைய சமையல் திறமையை காட்டி ரசிகர்களை கவர வேண்டிய நிலை ஷிவாங்கிக்கு ஏற்பட்டுள்ளது. இதற்காகவும் மெனக்கெட வேண்டியது உள்ளது. கோமாளியாக இருந்தபோது பல்வேறு சினிமா கேரக்டர்களை அடிப்படையாக வைத்து கெட்டப்புகளை போட்டுவந்த ஷிவாங்கி, தற்போது குக்காக மிகவும் கவர்ச்சியான உடைகளில் வருகிறார்..
கோமாளியாக இருந்தபோது மிகவும் க்யூட்டான கெட்டப்புகளில் அண்ணே, அப்பா என்று சக போட்டியாளர்களையும் நடுவர்களையும் கூப்பிட்டுவந்த ஷிவாங்கி, தற்போது மிகவும் மெச்சூர்டாக மற்றவர்களை எதிர்கொண்டு வருகிறார். ஆனாலும் அவ்வப்போது தான் ஒரு குக் என்பதை அவர் மறந்துவிடுவதாகவும் அதை அவ்வப்போது தாங்கள் நியாபகப்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்படுவதாகவும் நடுவர் வெங்கடேஷ் பட் கூறி வருவது குறிப்பிடத்தக்கது.

தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சி அவுட்டோரில், கிராமத்து மண் மணத்தை பேசும் நிகழ்ச்சியாக நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட்டில், புடவையில் பங்கேற்று அசத்திவருகிறார் ஷிவாங்கி. சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக காணப்படும் ஷிவாங்கி, இந்த கெட்டப்பில் தன்னுடைய இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். வயல்வெளிக்கிடையில் எடுக்கப்பட்டுள்ள இந்தப் புகைப்படங்கள் லட்சக்கணக்கான லைக்ஸ்களை பெற்றுள்ளன.


Click it and Unblock the Notifications











