Don't Miss!
- Technology
BSNL தரும் இந்த சலுகையை இந்தியாவில் வேறு யாருமே தரவில்லை.! மலிவு விலையில் 1 வருட 1 டைம் ரீசார்ஜ்.!
- News
இரட்டை இலை சின்னம் கேட்டால் கையெழுத்து போடுவேன்..சசிகலாவை சந்திப்பேன்..ஓ.பன்னீர் செல்வம் உறுதி
- Lifestyle
விபரீத ராஜயோகத்தால் பிப்ரவரியில் பண மழையில் நனையப் போகும் ராசிக்காரர்கள் யார்யார் தெரியுமா?
- Sports
பாகிஸ்தானுக்காக நான் எவ்வளவு செய்தேன்.. என்னை இப்படியா நடத்துவீங்க. இந்தியாவை பாருங்க -உமர் அக்மல்
- Finance
மகிளா சம்மன் சேமிப்பு பத்திரம், MIS, முத்த குடிமக்கள் சேமிப்பு பத்திரம்.. பட்ஜெட்டில் பலே அப்டேட்!
- Automobiles
சான்ஸே இல்ல... ஃபார்முலா 1 கார்களின் டயர்கள் அதன்பின் இதற்கு யூஸ் பண்ண படுகிறதா!! யாராலயும் யூகிக்கவே முடியாது
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
நம்ம சிவாங்கிக்கு வந்த ஆசையை பாருங்க.. சமந்தா மாதிரி அசத்தறாங்க.. விஜய்யோட நடிக்க ஆசையா?
சென்னை : விஜய் டிவியின் சூப்பர் சிங்கர், குக் வித் கோமாளி நிகழ்ச்சிகளின் மூலம் பிரபலமானவர் ஷிவாங்கி.
இந்த நிகழ்ச்சிகள் இவருக்கு சிறப்பாக அமைந்து ஏராளமான ரசிகர்களையும் பெற்றுத் தந்துள்ளது.
அடிதுள்..ரிலீசுக்கு முன்பே 3 சர்வேதச விருதுகளை அள்ளிய பார்த்திபனின் இரவின் நிழல்
இதையடுத்து தற்போது டான் உள்ளிட்ட படங்களில் பிசியாக நடித்து வருகிறார். குக் வித் கோமாளி சீசன் 3யிலும் பங்கேற்றுள்ளார்.

நடிகை சிவாங்கி
விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் அனைவருக்கும் பிடித்தமான சிங்கராக மாறினார் ஷிவாங்கி. தொடர்ந்து அடுத்ததாக குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் ஏராளமான ரசிகர்களை பெற்றுள்ளார். இந்த நிகழ்ச்சியின் 2வது சீசனில் பங்கேற்று நடிகர் அஸ்வினுடன் மல்லுக்கட்டினார்.

அஸ்வினுடன் லூட்டி
இவர்கள் இருவருக்கும் காதலா என்று ரசிகர்கள் கேட்கும்வகையில் அஸ்வினை தொடர்ந்து வம்புக்கிழுத்தார். தற்போது நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனிலும் பங்கேற்றுள்ளார். பிரபல காமெடி நடிகர் புகழை தன்னுடைய அண்ணனாக வைத்து இவர் செய்யும் அலப்பறைகள் ரசிகர்களிடையே மிகவும் பிரபலம்.

பல்வேறு கெட்டப்புகள்
இவர் இந்த நிகழ்ச்சிக்காக பல கெட்டப்புக்களை போட்டு வருகிறார். சமீபத்தில்கூட எந்திரன் படத்தின் கெட்டப், வடிவேலு கெட்டப்பை போட்டு ரசிகர்களை கவர்ந்தார். இந்நிலையில் இவர் தற்போது சமந்தாவின் கேரக்டரை இமிடேட் செய்துள்ளார். விஜய்யுடன் தெறி படத்தில் சமந்தா ஒரு திருமண நிகழ்வில் அழகான புடவை கெட்டப்பில் கலந்து கொள்வார்.

சமந்தா கெட்டப்
சிம்பிளான புடவையில் அழகான நெக்பீசுடன் சமந்தா அந்த காட்சியில் அழகாக இருப்பார். தற்போது ஷிவாங்கி அந்தக் கெட்டப்பை தான் போட்டுள்ளார். அதேபோன்ற புடவையில் அதே நகைகளுடன் இந்த கெட்டப்பில் ஷிவாங்கி காணப்படுகிறார். மேலும் சமந்தா கெட்டப் என்று கேப்ஷனிலும் கூறியுள்ளார்.

சமந்தாவிற்கு சவால்
உண்மையில் இந்த கெட்டப்பில் சமந்தாவிற்கே சவால் விடும் லுக்கில் காணப்படுகிறார் ஷிவாங்கி. அழகாக காணப்படும் அவருக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் பகிர்ந்து வருகின்றனர். இந்த கெட்டப் மூலம் விஜய்யுடன் நடிக்க சிவாங்கி ஆசைப்படுகிறாரா என்றும் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். தொடர்ந்து சிவாங்கியின் இத்தகைய கெட்டப்புகள் தொடரும் என்று எதிர்பார்க்கலாம்.

டான் படத்தில் சிவாங்கி
தற்போது சிவகார்த்திகேயனுடன் டான் படத்தில் நடித்து முடித்துள்ள சிவாங்கி அடுத்ததாக காசேதான் கடவுளடா படத்தில் நடித்து வருகிறார். தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி வருகிறார். இளம் தலைமுறை காமெடி நடிகைகளுக்கு தமிழ் சினிமாவில் பஞ்சம் ஏற்பட்டுள்ள நிலையில் அந்த இடத்தை சிவாங்கி பூர்த்தி செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ரசிகர்களை கவர தொடர் முயற்சி
சமீபத்தில் ரசிகர் ஒருவரின் கேள்விக்கு பதிலளித்த ஷிவாங்கி, நடிகையாக மற்றும் நிகழ்ச்சிகளில் போட்டியாளராக இருப்பது ஒன்றும் எளிதானதல்ல என்று குறிப்பிட்டிருந்தார். ரசிகர்களின் விருப்பத்தை கவரத் தவறினால் பீல்ட் அவுட் ஆக நேரிடும் என்றும் தெரிவித்திருந்தார். அந்த வகையில் தன்னுடைய ரசிகர்களை கவரும் தொடர் முயற்சிகளில் அவர் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.