Sivaangi :ஷிவாங்கியை அழவைத்த நடுவர்கள்.. குக் வித் கோமாளி ஷோவில் என்னதாங்க நடக்குது!
சென்னை : விஜய் டிவியின் குக் வித் கோமாளி, சூப்பர் சிங்கர் போன்ற நிகழ்ச்சிகளின்மூலம் ஏராளமான ரசிகர்களின் இதயத்தில் இடம்பெற்றுள்ளார் ஷிவாங்கி.
இந்த நிகழ்ச்சிகள் அவருக்கு ரசிகர்களிடையே மட்டுமில்லாமல் சினிமாவிலும் தொடர்ந்து வாய்ப்புகளை பெற்றுத் தந்து வருகிறது.
சிவகார்த்திகேயன், வடிவேலு ஆகியோருடன் டான், நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் ஆகிய படங்களில் நடித்துள்ள ஷிவாங்கி, அடுத்ததாக காசேதான் கடவுளடா படத்தில் நடித்து வருகிறார்.

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் அழுத ஷிவாங்கி : விஜய் டிவியின் சூப்பர் சிங்கர்ஸ் நிகழ்ச்சியில்தான் முதன்முதலில் பங்கேற்றார் ஷிவாங்கி. இந்த நிகழ்ச்சியில் கோப்பையை கைப்பற்ற முடியவில்லை என்றாலும், தன்னுடைய சிறப்பான குரல்வளத்தால் ஏராளமான ரசிகர்களை கவர்ந்தார் ஷிவாங்கி. இந்த நிகழ்ச்சி அதே சேனலின் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்கும் வாய்ப்பை ஷிவாங்கிக்கு பெற்றுத் தந்தது. தொடர்ந்து அடுத்தடுத்த சீசன்களில் பங்கேற்று ரசிகர்களின் இதயத்தில் இடம்பெற்றுள்ளார் ஷிவாங்கி.
முந்தைய எபிசோட்களில், அஸ்வின், புகழ் உள்ளிட்டவர்களுடன் இணைந்து ஷிவாங்கி செய்த சேட்டைகள் எவர்கிரீன் ரகம். அஸ்வினை ஷிவாங்கி காதலிப்பதாக கூறப்பட்ட நிலையில், அதற்கேற்ப அவருடன் மிகவும் நெருக்கமாக பேசிப் பழகினார் ஷிவாங்கி. அமைதியான அஸ்வின், அதற்கு எதிராக எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளாத நிலையில், இவர்களின் காதல் உண்மை தானோ என்று ரசிகர்கள் குழம்பியது வேறு கதை.

குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் அடுத்தடுத்த நிகழ்ச்சிகளில் கோமாளியாக விதவிதமான கெட்டப்புகளில் ரசிகர்களை கவர்ந்த ஷிவாங்கி, தற்போது 4வது சீசனில் குக்காக மாறியுள்ளார். சில எபிசோட்களில் இவர் இம்யூனிட்டி பூஸ்டரையும் கைப்பற்றி, இவர் கோமாளியாக செயல்பட்டது எப்படி என்று கேள்விகளை ரசிகர்களிடம் எழுப்பினார். அந்த வகையில், தற்போது சிறப்பாக சமைத்து நடுவர்களை கவர்ந்து வருகிறார்.
இந்நிலையில் நேற்றைய தினம் ஒளிப்பரப்பான எபிசோடில் ஒருவர் தேர்ந்தெடுத்த பொருட்கள், சீட்டுக் குலுக்கல் மூலம் மற்ற போட்டியாளர்களுக்கு சென்றது. அப்போது பாகற்காய் தனக்கு வரக்கூடாது என்று ஷிவாங்கி முன்னதாகவே கேட்டுக் கொண்டார். ஆனால் அங்குதான் விதி விளையாடியது. அவருடைய வேண்டுகோளுக்கு எதிராக அவருக்கு பாகற்காய்தான் சமைப்பதற்கு வந்தது. இந்தப் பொருள் தனக்கு வேண்டாம் என்றும் தான் வெளியில் செல்கிறேன் என்றும் அவர் கூறினார். கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு அவருக்கு பாகற்காய்தான் சமைப்பதற்கு வந்தது, அந்த நிகழ்ச்சியில் அவர் சொதப்பினார்.

இதையடுத்து இந்த வாரமும் அவருக்கு பாகற்காய் வந்த நிலையில், அவரது கண்கள் கலங்கின. போட்டியில் தான் வெளியேறும் நிலை வருமோ என்று அவர் கண்கலங்கினார். ஆனால் அவரை நடுவர்கள் சமாதானப்படுத்தினர். இந்த வாரம் எலிமினேஷன் வாரம் இல்லை என்றுக் கூறி ஷிவாங்கிக்கு அவர்கள் சமாதானம் கூறினர். இருந்தாலும் தொடர்ந்து கண்கலங்கிய அவரை, சக போட்டியாளர்களும் சமாதானப்படுத்தினர்.


Click it and Unblock the Notifications











