நம்ம எல்லாருக்கும் ஷிவாங்கியை பிடிக்கும்... அவங்களுக்கு என்ன டிஷ் பிடிக்கும்னு தெரியுமா?
சென்னை : நடிகையாக மாறியுள்ளார் குக் வித் கோமாளி புகழ் ஷிவாங்கி. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது குக் வித் கோமாளி ஷோவின் 3வது சீசன். இரண்டாவது சீசனில் பங்கேற்று கலக்கியது போலவே தற்போது 3வது சீசனிலும் கலக்கி வருகிறார் ஷிவாங்கி. பல கெட்டப்புகளில் ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

நடிகை ஷிவாங்கி
நடிகை ஷிவாங்கி நடிப்பில் நாளைய தினம் டான் படம் ரிலீசாக உள்ளது. இந்தப் படத்தில் சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகன், எஸ்ஜே சூர்யா உள்ளிட்டவர்கள் லீட் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்தை அறிமுக இயக்குநர் சிபி சக்ரவர்த்தி இயக்கியுள்ளார். நாளைய தினம் திரையரங்குகளில் படம் ரிலீசாக உள்ளது.

கோலிவுட்டில் அறிமுகம்
இந்தப் படத்தின் மூலம் முதல்முறையாக சினிமாவில் அறிமுகமாகிறார் சிவாங்கி. படத்தின் ட்ரெயிலர் உள்ளிட்டவை வெளியாகி இவரது கேரக்டருக்கான எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ட்ரெயிலர் வெளியீட்டு நிகழ்ச்சியிலும் அவரது பேச்சு அனைவரையும் கவர்ந்தது.

பிடித்தமான சூட்டிங் ஸ்பாட்
இந்நிலையில் சமீபத்திய பேட்டியொன்றில் பேசியுள்ள ஷிவாங்கி, தனது பிடித்தமான சூட்டிங் ஸ்பாட் டான் தான் என்று தெரிவித்துள்ளார். தொடர்ந்து பேசிய அவர், தனக்கு மிகவும் பிடித்தமான டிஷ் என்றால் அது பீட்சாதான் என்றும் குறிப்பிட்டுள்ளார். விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் ஒவ்வொரு வாரமும் ஒரு குக்குடன் இணைந்து செயல்பட்டு வருகிறார் ஷிவாங்கி.

துணை நிற்கும் கோமாளிகள்
வித்தியாசமான ரெசிபிக்களை குக்குகள் சமைத்து அதன்மூலம் அவர்களை நிரூபித்துவரும் நிலையில், அவர்களுக்கு துணை நின்று அவர்கள் வெற்றி பெற காரணமாக அமைகின்றனர் கோமாளிகள். அவர்களுக்கு சமையலில் ஒன்றும் தெரியவில்லை என்றாலும், சமையலில் உதவி செய்து வருகின்றனர்.

பிடித்தமான டிஷ்
அந்த வகையில் இரண்டாவது சீசன் மற்றும் தற்போது ரசிகர்களை கவர்ந்துவரும் 3வது சீசன்களில் முக்கியமான கோமாளியாக இருந்து வரும் ஷிவாங்கி தற்போது தனக்கு அதிகமான பட வாய்ப்புகள் இருந்த போதிலும், நிகழ்ச்சியை தொடர்ந்து வருகிறார். இந்நிலையில் அவர் தனக்கு பிடித்தமான டிஷ் குறித்து பேசியுள்ளார்.
Recommended Video

ஷிவாங்கிக்கு பிடித்த பீட்சா
அவருக்கு பீட்சாதான் மிகவும் அதிகமாக பிடிக்குமாம். சமீபத்தில் அவர் அளித்துள்ள பேட்டியொன்றில் பல விஷயங்கள் குறித்து பேசியுள்ளார். அதில் அவருக்கு பிடித்தமான டிஷ் குறித்தும் பகிர்ந்துள்ளார். அதில்தான் பீட்சா தனக்கு மிகவும் பிடிக்கும் என்று தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











