நான் முஸ்லீமை மணந்தால் உங்களுக்கென்ன, மிளகாயை அங்கே சொருகிக்கோங்க: நடிகை விளாசல்
Recommended Video
மும்பை: தொலைக்காட்சி நடிகை ரிச்சா சோனி தான் இஸ்லாமியரை திருமணம் செய்ததற்காக கேவலமாக திட்டிய நெட்டிசன்களுக்கு தக்க பதிலடி கொடுத்துள்ளார்.
பிரபல தொலைக்காட்சி நடிகையான ரிச்சா சோனி ஜிகர் அலி சம்பானியா என்பவரை பல காலமாக காதலித்து வந்தார். இந்நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் 11ம் தேதி பெங்காளி முறைப்படியும், அதே மாதம் 18ம் தேதி இஸ்லாமிய முறைப்படியும் திருமணம் செய்து கொண்டனர்.
ரிச்சாவின் பெற்றோர் முதலில் இந்த திருமணத்திற்கு சம்மதிக்கவில்லை. பிறகு அலியின் குணம் அறிந்து ஒப்புக் கொண்டனர்.

கிண்டல்
ரிச்சாவின் பெற்றோருக்கே அவர் திருமணத்தில் பிரச்சனை இல்லை. ஆனால் இந்த நெட்டிசன்களோ ரிச்சாவை விலைமாது என்று கேவலமாக திட்டினார்கள். ஒரு முஸ்லிமை திருமணம் செய்தது தவறு என்று ரிச்சாவை பற்றி தரக்குறைவாக பேசினார்கள்.

ரிச்சா
சமூக வலைதளங்களில் தன்னை திட்டுபவர்களை பார்த்து ரிச்சா தன் திருமண புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். என்னை வெறுப்பவர்களுக்காகவே இந்த புகைப்படத்தை வெளியிடுகிறேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.

அடையாளம்
சும்மா ஏதோ பெயர்கள், அடையாளத்தை வைத்து என்னை பின்தொடர்பவர்களுக்கு முதுகெலும்பு இல்லை. ஆனால் எனக்கு அப்படி இல்லை அது தான் உங்களுக்கு பிரச்சனையாக உள்ளது. ஒருவரை விலைமாது என்று அழைப்பது, மதத்தை பற்றி பேசுவது உங்களுக்கு எளிது. அது உங்களின் வளர்ப்பை காட்டுகிறது. உங்களின் வெறுப்பை கக்கும் கமெண்டுகளால் நான் வெளியிட விரும்பும் புகைப்படங்களை வெளியிடாமல் இருக்க மாட்டேன் என்கிறார் ரிச்சா.
கலாய்
இது என் இன்ஸ்டாகிராம் பக்கம். உங்களின் உண்மையான அடையாளத்தை காட்டுங்கள். என் கணவர் அலியை நினைத்து நான் மிகவும் பெருமைப்படுகிறேன். ஒன்று செய்யுங்கள் மிளகாயை எடுத்து அங்கு சொருகிக்கொள்ளுங்கள் என்று ரிச்சா காட்டமாக தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











