நடிகர் சிவாஜியின் பேரனுக்காக மேடையில் கண்கலங்கிய ஸ்ரீப்ரியா: ப்ளாஷ்பேக் கேட்டு உறைந்த ரசிகர்கள்
சென்னை: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ஸ்ரீ ப்ரியா.
Recommended Video
தற்போது திரைப்பட தயாரிப்பாளர், அரசியல் என பிஸியாக காணப்படுகிறார் ஸ்ரீ ப்ரியா.
விஜய் தொலைக்காட்சியின் பிக் பாஸ் ஜோடிகள் சீசன் 2 நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற ப்ரோமோ பலரையும் கவனிக்க வைத்துள்ளது.

ரஜினி, கமலுடன் ஸ்ரீ ப்ரியா
1974ல் வெளியான ‘முருகன் காட்டிய வழி' என்ற திரைப்படம் மூலம் சினிமாவில் அறிமுகமான ஸ்ரீ ப்ரியா, 80 இல் இருந்து 90 வரையிலும் கொடி கட்டி பறந்தார். சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், கமல் இருவரின் ஆஸ்தான ஹீரோயினாக வலம்வந்த ஸ்ரீ ப்ரியா, நடிப்பு, க்ளாமர் என இரண்டிலும் வெரைட்டியாக கலக்கினார். இவரது கவர்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் இருந்தனர்.

சினிமா தயாரிப்பு, அரசியல்
1992ல் வெளியான ‘நானே வருவேன்' படத்துக்குப் பின்னர் திரைப்படங்களில் முகம் காட்டாமல் இருந்த ஸ்ரீ ப்ரியா, இறுதியாக 2007ல் கண்ணாமூச்சி ஏனடா படத்தில் நடித்திருந்தார். அதன்பின்னர் பொதுநிகழ்ச்சிகளில் மட்டும் பங்கேற்று வரும் அவர், திரைப்படங்கள் தயாரிப்பதிலும், அரசியலிலும் கவனம் செலுத்தி வருகிறார். த்ரிஷ்யம் படத்தை தெலுங்கில் தயாரித்தது ஸ்ரீ ப்ரியா தன் என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய் டிவியில் ஸ்ரீ ப்ரியா
இந்நிலையில், விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வரும் ‘பிக் பாஸ் ஜோடிகள் சீசன் 2' நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக என்ட்ரி கொடுத்துள்ளார் ஸ்ரீ ப்ரியா. பிக் பாஸ் ஜோடிகளுடன் களைகட்டி வரும் இந்த நிகழ்ச்சி, தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்த வாரம் பிபி ஜோடிகள் நிகழ்ச்சியில், ஒவ்வொரு வகையான செலிப்ரேஷனை பின்னணியாகக் கொண்டு போட்டிகள் நடக்கின்றன..

சிவாஜியின் பேரன் சிவா
‘பிக் பாஸ் ஜோடிகள் சீசன் 2' நிகழ்ச்சியில், சுஜா - சிவா, அமீர் - பாவ்னி ஜோடிகளுக்கு இடையே கடுமையான போட்டி காணப்படுகிறது. இதில் போட்டியாளராக பங்கேற்றுள்ள சிவா, மறைந்த நடிகர் சிவாஜி குடும்பத்தின் பேரன் ஆவார். ஆனால் அவருக்கு திரைத்துறையில் முழுமையான அங்கீகாரம் கிடைக்கவில்லை என சொல்லப்படுகிறது.

வெளிப்படையாக பேசிய ஸ்ரீ ப்ரியா
இதனை மேடையில் வெளிப்படையாக பேசிய ஸ்ரீ ப்ரியா, "யார் உதவியும் இல்லாமல் தானாகவே வாய்ப்புகள் தேடி அலைந்து முயற்சிகள் செய்கிறான் சிவா. இப்ப அவனுக்கு அம்மாவும் இல்லை" என கண்கலங்கினார். உடனே மைக்கை வாங்கிய சிவா, எனக்கு இரண்டு அம்மா என சொல்வதோடு, புகைப்படம் ஒன்றையும் கொடுத்து ஸ்ரீப்ரியாவை நெகிழ வைக்கிறார். இந்த ப்ரோமோ ரசிகர்களையும் கண்கலங்க வைத்துள்ளது.


Click it and Unblock the Notifications











