இதுக்கு இவ்ளோ எமோஷனல் தேவையில்லையே லாஸ்லியா.. சீனியர் நடிகை அட்வைஸ்!

Recommended Video

Watch Video : Bigg Boss 3 Tamil : Promo 3 : Day 68

சென்னை: பிக்பாஸ் வீட்டில் உள்ள கவினுக்காக கண்ணீர்விட்ட லாஸ்லியாவுக்கு நடிகை ஸ்ரீபிரியா அட்வைஸ் செய்துள்ளார்.

பிக்பாஸ் வீட்டில் உள்ள கவினும் லாஸ்லியாவும் ஒருவரை ஒருவர் காதலிக்கின்றனர். கவினுக்கு வெளியே ஒரு காதலி இருந்ததாக கவின் கூறிய போதும் லாஸ்லியா அதுகுறித்து வெளியே போய் பேசிக்கொள்ளலாம் என்றார்.

இந்நிலையில் நேற்றைய எபிசோடில் தனியாக உட்காந்திருக்கிறார் கவின். அப்போது அங்குவந்த கவின் மாத்திரை சாப்பிட தண்ணீர் கொடுத்தார் லாஸ்லியா. அதற்கு கவின் தேங்க்யூ என்று கூற தொடர்கிறது கான்வர்சேஷன்.

கதைக்க வேண்டாமா?

கதைக்க வேண்டாமா?

கவின் தன்னை தான் பார்த்துக்கொள்வதாக கூறினார். இதனைக்கேட்ட லாஸ்லியா நான் கேட்கக்கூடாது என்கிறீர்களா? அல்லது கதைக்கக்கூடாது என்று கூறுகிறீர்களா என கேட்க உங்க எமோஷன்ஸ் குறித்து எதும் கேட்க மாட்டேன் என்றார் கவின்.

கண்ணீர்விட்ட லாஸ்லியா

கண்ணீர்விட்ட லாஸ்லியா

தொடர்ந்து கவின் பட்டும் படாமல் பேச கண்ணீர் விடுகிறார் லாஸ்லியா. பின்னர் லாஸ்லியாவின் கண்ணீரை துடைத்து விட்ட கவின், அழும் அளவுக்கு ஒன்றும் நடக்கவில்லை என்று கூறி சமாதானப்படுத்துகிறார்.

மணிக்கணக்கில் பேச்சு

மணிக்கணக்கில் பேச்சு

நீ, விளையாடு இங்கிருந்து வெளியே போகும் வரை நான் உன்னோடு கதைக்கமாட்டேன் என்று கவினிடம் சொல்லி அழுகிறார் லாஸ்லியா. பின்னர் மணிக்கணக்கில் தொடர்கிறது அவர்களின் பேச்சு.

இவ்ளோ எமோஷனல் தேவையில்லை

இதனை பார்த்த நடிகை ஸ்ரீபிரியா தனது டிவிட்டர் பக்கத்தில் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ளார். அதாவது, லாஸ்லியா, உங்களுக்கு கொஞ்ச மாதங்களுக்கு முன்புதான் உங்களுக்கு இவர்களை தெரிந்தது. அதற்குள் இவ்ளோ எமோஷனல் தேவையில்லை என தெரிவித்துள்ளார்.

விளாசிய ஸ்ரீபிரியா

விளாசிய ஸ்ரீபிரியா

நடிகை ஸ்ரீபிரியா பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி குறித்து கடந்த சில நாட்களாக டிவிட்டி வருகிறார். அவ்வப்போது வனிதா குறித்தும் ஸ்ரீபிரியா விளாசி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X