பிக்பாஸ் நிகழ்ச்சியில் கவினை அறைந்த நண்பர்.. பதறிய சீனியர் நடிகை!

Recommended Video

Bigg Boss 3 Tamil : Promo 1 : Day 82 : Kavin friend visit BB House

சென்னை: பிக்பாஸ் வீட்டிற்கு நேற்று வந்த அவரது நண்பர் பிரதீப் கவினை ஓங்கி அறைந்ததை பார்த்த சீனியர் நடிகை ஒருவர் பதறி போய் டிவிட்டியுள்ளார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள போட்டியாளர்களின் குடும்பத்தினர் இந்த வாரம் பிக்பாஸ் வீட்டிற்கு வந்தனர். அந்த வகையில் நேற்று மூன்று போட்டியாளர்களின் குடும்பத்தினர் பிக்பாஸ் வீட்டிற்கு வந்தனர்.

முதலில் கவினின் குடும்பத்தினர் சார்பாக அவரது நண்பர் பிரதீப் ஆன்டனி பிக்பாஸ் வீட்டிற்குள் வந்தார். அப்போது வந்த அவர், நீ மட்டும் தான் உலகத்திலேயே பெரிய புத்திசாலி என்று நினைத்து கொண்டிருக்கிறாய் என வாரினார்.

நல்ல நண்பர் போல் தெரிகிறது

இதனை பார்த்த நடிகை ஸ்ரீபிரியா, ‘முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்துஅகநக நட்பது நட்பு.' கவின் அவர்களை பார்க்க வந்திருப்பவர் நல்ல நண்பர் போல் தெரிகிறது என்று பதிவிட்டார்.

விட்டுக்கொடுக்காதே

விட்டுக்கொடுக்காதே

வந்த கையோடு கவினை திட்டித் தீர்த்தார். பின்னர் இருவரும் பாத்ரூமுக்குள் சென்று பேசிக்கொண்டிருந்தனர். அப்போது நீ விளையாடு மற்றவர்களுக்காக விட்டுக்கொடுக்காதே என்று கூறி அட்வைஸ் செய்தார் பிரதீப்.

உன் குடும்பத்திற்காக விளையாடு

உன் குடும்பத்திற்காக விளையாடு

நீ எப்படி மற்றவர்களுக்கு விட்டுக்கொடுப்பதாக சொல்கிறாய் எங்களை பற்றி உனக்கு ஞாபகம் இல்லையா. நீ உனக்காக விளையாட வேண்டாம் உன் அப்பா அம்மா மற்றும் நண்பர்களுக்காக விளையாடு என்று அறிவுரை கூறினார்.

ஒரு கடமை பாக்கியிருக்கிறது

ஒரு கடமை பாக்கியிருக்கிறது

பின்னர் டைனிங் ஹாலில் அமர்ந்து பேசினார்கள். அப்போது நான் கிளம்புறதுக்கு முன்னாடி ஒரு கடமை பாக்கியிருக்கிறது என்ற அவர் கவினின் கண்ணாடியை கழட்டி வைத்தார். தொடர்ந்து நீ விளையாடின கேவலமான கேமுக்கும், உன்னை நம்பினவங்கள ஏமாத்தினதுக்கும், இங்கே இருக்குறவங்கள ஹர்ட் பண்ணினதுக்கும் நான் உன்னை செய்யப்போகிறேன் என்றார்.

திருப்பி அடிச்சுக்கோ

திருப்பி அடிச்சுக்கோ

மேலும் நீ டைட்டில் ஜெயிச்சு பெரிய ஆளா ஆயிட்டா ஸ்டேஜ்ல கூப்பிட்டு என்ன திருப்பி அடிச்சுக்கோ என்று கூறி பளார் என ஓங்கி அறைந்தார். இதனால ஹவுஸ்மேட்ஸ்கள் பெரும் அதிர்ச்சியடைந்தனர்.

அய்யோ ஏன் அடிக்கிறார்?

இதனை பார்த்த நடிகை ஸ்ரீபிரியா, அய்யோ என பதறி ஏன் அவர் அடிக்கிறார் என்று கேட்டார். மேலும் உங்கள் நண்பரை கீழே வீழ்த்தாதீர்கள் என்றும் ஸ்ரீபிரியா அவரது டிவிட்டில் பதிவிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X