சிவசங்கரி தொடரில் நடிகை சுகாசினி
சன் டிவியில் ஒளிபரப்பாகிவரும் சிவசங்கரி தொடரில் நடிகை சுகாசினி நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சனிக்கிழமை தோறும் இரவு 10.00 மணிக்கு சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் திகில் தொடர் "சிவசங்கரி'. சிவன் கோவில் கட்டுவதற்காக பாடுபடும் சிவசங்கரியை சுற்றி நடக்கும் மர்மங்கள்தான் இந்த கதை
இந்தத் தொடரில் முக்கிய பாத்திரத்தில் நடிகை சுகாசினி நடிக்க இருப்பதாக அந்தத் தொடரின் இயக்குநர் குருவித்துறை கே.ஜெ. தங்கதுரை தெரிவித்துள்ளார்.

ஹாசினி பேசும் படம்
சினிமாவில் நடித்த சுகாசினி சின்னத்திரையில் ரேவதி இயக்கிய சீரியலில் நடித்தார். இதன்பின்னர் ஜெயாடிவியில் ஹாசினி பேசும் படம் என்ற சினிமா விமர்ச்சன நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

ராஜ் டிவியில் கேம் ஷோ
இதனையடுத்து ஆட்டோகிராப் வழங்கிய சுகாசினி இப்போது ராஜ் டிவியில் கோல்டு கேசினோ என்ற கேம்ஷோவினை தொகுத்து வழங்குகிறார்.

ராதிகா சீரியலில்
இப்போது முதன் முறையாக ராடான் டிவியின் ராதிகா தயாரிக்கும் சீரியலில் நடிக்க இருக்கிறார் சுகாசினி. இது திகில் தொடர் என்பதால் காட்டு பகுதிகளில் சென்று படப்பிடிப்பில் கலந்து கொள்வது சுகாசினிக்கு வித்தியாசமான அனுபவமாக இருக்கிறதாம்.

திடீர் திருப்பங்கள்
இந்த தொடரில் அடுத்த எபிசோடுகளில் பரபரப்பான திருப்பங்கள் ஏற்பட இருப்பதாக கூறுகிறார் இயக்குநர். ஆதி மங்கலம் என்ற ஊருக்குள் அந்நியர்கள் புகுந்து பிரச்னையை உண்டாக்குகிறார்கள். அந்த நேரத்தில் அபசகுணமாக கோவிலின் கலசம் வெடித்துச் சிதறுகிறது.

பரபரப்பான காட்சிகள்
அமைதி பூங்காவாக இருந்த ஆதி மங்கலம் பரபரப்பான கிராமமாக மாறுகிறது. இதற்கிடையில் சங்கரிக்கு ஏற்படும் பிரச்னைகள் என்று பரபரப்பான கட்டங்களில் பயணித்து வருகிறது சிவசங்கரி' என்கிறார் இயக்குநர்


Click it and Unblock the Notifications











