லப்பர் பந்து பட நடிகையின் கணவர் சீரியலில் என்ட்ரி… எந்த சேனலில் தெரியுமா?
சென்னை: தமிழ் சினிமாவில் 2024 மற்றும் 2025-ம் ஆண்டு 2 பிளாக்பஸ்டர் திரைப்படங்களை கொடுத்த நடிகை ஸ்வாசிகாவின் கணவர் தமிழ் சீரியலில் என்ட்ரி கொடுத்துள்ளார். அந்த சீரியல் தற்போது இல்லத்தரசிகள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
மலையாள நடிகையான ஸ்வாசிகா தமிழில் வைகை திரைப்படத்தின் மூலம் அறிமுகம் ஆனார். அதைத்தொடர்ந்து கோரிப்பாளையம், மைதானம் போன்ற திரைப்படங்களில் நடித்தார். ஆனால், தமிழில் பெரியளவில் பட வாய்ப்புகள் கிடைக்காததால் மலையாள திரையுலகில் செட்டில் ஆனார். அங்கு மோகன்லால், மம்முட்டி போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்து பாப்புலர் ஆனார்.

நடிகை ஸ்வாசிகா: இதனால், சில ஆண்டுகள் தமிழ் சினிமாவில் தலைகாட்டாமல் இருந்த ஸ்வாசிகாவிற்கு, பெயர் சொல்லும் திரைப்படமாக லப்பர் பந்து அமைந்தது. அந்த படத்தில் அட்டகத்தி தினேஷின் மனைவி கெத்து பொண்டாட்டியாக நடித்து இருந்தார். அந்த படத்தை தொடர்ந்து மாமன் படத்தில் சூரியின் அக்கா கேரக்டரில் சிறப்பாக நடித்து பாராட்டுக்களை பெற்றார். தற்போது ஸ்வாசிகாவை இல்லாத தமிழ் படங்கே இல்லை என்று சொல்லும் அளவிற்கு அனைத்து படங்களில் நடித்து வருகிறார்.
காதல் திருமணம்: கடந்த ஆண்டு, ஸ்வாசிகாவுக்கும் நடிகரும் மாடலுமான பிரேம் ஜேக்கபுக்கும் திருமணம் நடந்தது. படங்களில் நடிப்பதை தாண்டி கொஞ்சம் விடுமுறை கிடைத்தாலே கணவருடன் வெளிநாடுகளுக்கு கிளம்பிவிடுகிறார். அண்மையில் ஸ்வாசிகா தனது கணவருடன் வியட்நாம் சென்றுள்ளார், அங்கு அவர் கணவருடன் எடுத்த செம ரொமான்டிக் போட்டோக்களை வெளியிட்டு இருந்தார்.
அழகே அழகு: தற்போது இவருடைய கணவர் பிரேம் ஜேக்கப் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் அழகே அழகு என்ற சீரியலில் சுரேஷ் என்கிற இன்ஸ்பெக்டர் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இப்போது இந்த சீரியலில் சுரேஷின் கல்யாண காட்சிகள் சென்று கொண்டு இருக்கின்றன. சுரேஷின் தவறான நடவடிக்கையால் அவரது இன்ஸ்பெக்டர் வேலை பறிபோகிவிட அதற்கு காரணமாக இருந்த நட்சத்திராவை மிரட்டி திருமணம் செய்துவைக்கிறார் மாமா. இப்படி பரபரப்பாக சென்று கொண்டு இருக்கும் இந்த சீரியல் ரசிகர்ள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. குறிப்பாக சுரேஷ் கதாபாத்திரத்தில் நடித்து வரும் பிரேமுக்கு இல்லத்தரசிகள் மத்தியில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.


Click it and Unblock the Notifications











