எவ்வளவோ சொன்னோம்.. இப்படி பண்ணீட்டாளே.. நந்தினியை நினைத்து கதறும் நடிகை!

சென்னை: கௌரி சீரியல் நடிகை நந்தினி தற்கொலை செய்து கொண்டது பலரை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. இணையத்தில் பலரும் அவருக்கு இரங்கல் தெரிவித்து வரும் நிலையில், கௌரி சீரியலில் அவருடன் சேர்ந்து நடித்த நடிகை ஸ்வேதா, நந்தினி அன்பான பாசமான பெண் எதற்கான இப்படி முடிவை தேடிக்கொண்டார் என்று தெரியவில்லை என கண்கலங்கி பேசி உள்ளார்.

நடிகையின் நந்தினியின் இந்த விபரீத முடிவு ஈடு செய்ய முடியாத மிகப்பெரிய இழப்பாக உள்ளது. மொத்த கௌரி டீமையும் சோகத்தில் இருக்கிறோம். நந்தினியை நாங்கள் சீரியலின் துர்கா கதாபாத்திரமாக தான் பார்த்தோம். சீரியலில் நானும் நன்றியும் அக்கா, தங்கை போல தான் இருப்போம். நிஜத்திலும் பல விஷயங்களை நந்தினி என்னிடம் பகிர்ந்து இருக்கிறார்.

நடிகை நந்தினி: நந்தினி பெரிய போராட்டத்திற்கு பிறகு தான் கன்னடத் தொலைக்காட்சிகளில் நடிகையாக வந்தார். கௌரி சீரியல் தமிழில் அவர் நடிக்கும் முதல் சீரியல். இந்த தொடரில் அவர் லீட் ரோலில் தான் நடித்து வந்தார். அதுவும் இரட்டை கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். துர்கா கதாபாத்திரம் நந்தினிக்காகவே உருவாக்கப்பட்ட கதாபாத்திரம் போல இருக்கும். அவ்வளவு அழகாக சீரியலில் நடித்து இருப்பார்.

Kalaignar TV Nandini death
Photo Credit:

எவ்வளவோ சொன்னோம்: நன்றாக வளர்ந்து வரும் நேரத்தில் எதற்காக நந்தினி இப்படி ஒரு முடிவை எடுத்தார்கள் என்று தெரியவில்லை. இப்படி ஒரு விபரீதமான முடிவை அவர் எடுத்திருக்கவே கூடாது. எதுவாக இருந்தாலும் மற்றவர்களிடம் பகிர்ந்து இருக்க வேண்டும். அவருக்கு உதவி செய்வதற்கு நிறைய நண்பர்கள் இருந்தார்கள். அவருக்கு தனிப்பட்ட முறையில் பல பிரச்சனைகள் இருந்தது. அந்த பிரச்சனை குறித்து பலரும் அவரிடம் பேசி இருக்கிறோம். எதைப்பற்றியும் கவலைப்படாதே, எல்லாம் நன்றாக நடக்கும் நீ, வேலையில் மட்டும் கவனத்தை செலுத்து என்று சொல்லி புரிய வைக்க நாங்கள் முயற்சி செய்தோம். ஆனால், அவர் மனதில் என்ன ஓடிக்கொண்டு இருந்தது என்று தெரியவில்லை. கடைசியில் இப்படி ஒரு விபரீதமான முடிவை அவர் எடுத்து விட்டார். ஏன் இப்படி ஒரு முடிவை எடுத்தார் என்ற கேள்விதான் அடிக்கடி மனதுக்குள் வருகிறது. அவருக்காக இத்தனை பேர் இருக்கிறோமே, எங்களையெல்லாம் மறந்துவிட்டு இப்படி ஒரு முடிவை தேடிக் கொண்டு விட்டாலே என நடிகை ஸ்வேதா கண்ணீருடன் பேசி உள்ளார்

More from Filmibeat

Read more about: kalaignar tv nandini death
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X