அவள் விதி இப்படி ஆயிடுச்சு! நடிகை ஊர்வசி தன்னுடைய மகள் பற்றி உருக்கம்! சினிமாவில் நடிக்காத காரணம்?
சென்னை: நடிகை "ஊர்வசி" சமீபத்தில் ஒரு பேட்டியில் தன்னுடைய மகள் குறித்து சில தகவல்களை பகிர்ந்து இருக்கிறார். அதில் தன் மகள் எதற்காக இத்தனை வருடங்களாக சினிமாவில் நடிக்கவில்லை என்பது பற்றியும் இப்போது அவர் சினிமாவில் நடிக்கப் போகிறார் என்பது பற்றியும் பல விஷயங்களை பேசி இருக்கிறார்.
அதே நேரத்தில் ஊர்வசியின் மகள் புகைப்படம் வெளியானதை தொடர்ந்து பலரும் அவருக்கு வாழ்த்துக்கள் கூறி வருகின்றனர். அது பற்றி விரிவாக பார்க்கலாம்.

அந்த வகையில் ஒரு சில பெண் நடிகைகள் தான் குணசித்திர வேடங்களிலும் சரி, சென்டிமென்ட் வேடங்களிலும் சரி காமெடியான கேரக்டர்களும் சரி தன்னுடைய நடிப்பால் ரசிகர்களை அதிகமாக கவர்ந்து விடுகிறார்கள். அந்த வகையில் ஒருவர் தான் நடிகை ஊர்வசி. இவர் தமிழில் ஆரம்பமான "முந்தானை முடிச்சு" திரைப்படத்தில் தொடங்கி இப்போது சமீபத்தில் வெளியான "ஜே பேபி" திரைப்படம் வரைக்கும் இவருடைய திரைப்படத்தில் சென்டிமென்ட் காட்சிகளும் இருக்கும் காமெடி காட்சிகளும் இருக்கும்.
குழந்தைத்தனமாக இவர் செய்யும் சேட்டைகள் ரசிகர்களை கவர்ந்து இருப்பதாலயே இவர் தொடர்ச்சியாக சினிமாக்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் சமீபத்தில் தன்னுடைய மகளோடு எடுத்த புகைப்படத்தை ஊர்வசி சமூக வலைதள பக்கங்களில் பகிர அது அதிகமாக பேசப்பட்டு வருகிறது. அதே நேரத்தில் தன்னுடைய மகள் குறித்து சமீபத்தில் பேட்டி ஒன்றில் ஊர்வசி சில தகவல்களை பேசி இருக்கிறார்.

அதே நேரத்தில் நடிகை ஊர்வசி 2000ம் ஆண்டு நடிகர் மனோஜ் ஜெயனை காதலித்து திருமணம் செய்து கொண்டார் .அவரோடு ஒரு பெண் குழந்தையும் பெற்று எடுத்தார். அதற்குப் பிறகு மனோஜுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை விவாகரத்து செய்துவிட்டு 2013இல் சிவ பிரசாத் என்பவரை திருமணம் செய்து கொண்டு அவரோடு வாழ்ந்து வருகிறார். ஊர்வசியின் மகள் தேஜலக்ஷ்மி அவருடைய முன்னாள் கணவரோடு தான் வாழ்ந்து வருகிறார்.
இப்போது தேஜலக்ஷ்மிக்கு 23 வயதாகி இருக்கும் நிலையில் அவர் சினிமாவில் நடிப்பதற்காக ஆர்வம் காட்டி வருவதாகவும் அதனால் அவரை சமீபத்தில் தான் இவர் வெளி உலகத்துக்கு அறிமுகப்படுத்தி இருக்கிறார். அது பற்றி பேசுகையில் என்னுடைய மகளை இத்தனை வருடங்களாக சினிமாவில் நடிக்க வைக்கவில்லை. அதற்கு காரணம் நட்சத்திரங்களில் வாரிசாக சினிமாவில் நடிக்க வரும்போது மக்கள் அவர்களை பெற்றோர்களோடு ஒப்புதல் படுத்தி பார்ப்பார்கள்.

அது புதியதாக வருபவர்களுக்கும், ஆர்டிஸ்ட் வாரிசுகளுக்கும் இதுதான் பிரச்சினையாக இருக்கிறது. இதனாலையே நான் அவளை படித்து முடித்து ஒரு வேலைக்கு போ என்று அனுப்பி வைத்தேன். ஆனால் அவள் படித்து முடித்த பிறகு அவருடைய நட்பு வட்டாரத்தில் எல்லோரும் அவள் நடிக்க வேண்டும் என்று சொல்வதாக என்னிடம் வந்து சொன்னாள். அவளுக்கும் அதில் இப்போது ஆர்வம் இருக்கிறது. அதனால் நான் அதற்கு சம்மதம் சொல்லிவிட்டேன்.
இப்போது கதை கேட்டுக் கொண்டிருக்கிறார். ஒரு சில விஷயங்களை நான் அவளுக்காக சொல்லித் தருகிறேன். அவளுக்கும் நகைச்சுவை இயல்பாக வருகிறது. அடுத்தடுத்து வரும் குழந்தைகளின் மனதில் நகைச்சுவையால் நாம் நிற்கலாம் என்று சொல்லி கொடுத்திருக்கிறேன். அவள் ஆரம்பத்தில் சினிமாவில் வர வேண்டாம் என்று நினைத்தால் ஆனால் அவளுடைய விதி அவளை சினிமாவுக்கு கொண்டு வந்திருக்கிறது. அதை நம்மால் மாற்ற முடியாது என்று அந்த பேட்டியில் ஊர்வசி பேசியிருக்கிறார்.


Click it and Unblock the Notifications











