Vanitha: என் வாழ்க்கையை சீரழிச்சதே அப்பா தான்.. வனிதா பகீர் குற்றச்சாட்டு.. பழி வாங்க விபரீத முடிவு

சென்னை: நடிகை வனிதா விஜயகுமார் தன்னுடைய வாழ்க்கை சீரழிந்து போனதற்கு காரணம் தன்னுடைய தந்தை தான் என்று பகிரங்க குற்றசாட்டை முன் வைத்திருக்கிறார்.

தன்னுடைய தந்தை தன்னை ஒரு மகளாக எந்த இடத்திலும் பேசுவதில்லை. அது தனக்கு வருத்தத்தை கொடுத்திருக்கிறது. அதனால் அவரை பழி வாங்குவதற்காக தான் செய்து கொண்டிருக்கும் வேலையைப் பற்றியும் பேட்டி ஒன்றில் வனிதா பேசியிருக்கிறார்.

Actress Vanitha Vijayakumar has publicly blamed her father for the downfall of her life

அத்தோடு தன்னுடைய குடும்பத்தை பற்றியும் தன்னுடைய தற்போதைய நிலை குறித்து வனிதா அந்த பேட்டியில் பேசியிருக்கிறார். அது குறித்து விரிவாக பார்க்கலாம்.

நடிகை வனிதா விஜயகுமார் மற்றும் மஞ்சுளா தம்பதியின் மகள் வனிதாவுடன் அவருடைய குடும்பத்தினர்கள் யாரும் பேசுவது கிடையாது என்பது ஊர் அறிந்த ரகசியம் தான். இது குறித்து சமீபத்தில் வனிதா பேட்டி ஒன்றில் தன்னுடைய கோபம் மற்றும் மகிழ்ச்சி குறித்து பேசி இருக்கிறார். அது குறித்து விரிவாக பார்க்கலாம்.

பிரபலங்களின் மகளாக இருந்த வனிதா, விஜய் நடிப்பில் வெளியான சந்திரலேகா என்ற திரைப்படத்தின் மூலமாகத்தான் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். பிறகு நடிகர் ராஜ்கிரண் நடிப்பில் வெளியான திரைப்படத்திலும் நடித்திருந்தார். அதனைத் தொடர்ந்து திருமண பந்தத்தில் நுழைந்த வனிதா அதற்குப் பிறகு சில வருடங்களாக நடிப்பை விட்டு விலகி இருந்தார். 19 வயதில் ஆகாஷ் என்பவரை திருமணம் செய்து கொண்ட வனிதா பிறகு அவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு 2007 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்றார்.

அதைத்தொடர்ந்து ஆந்திராவை சேர்ந்த ராஜன் என்பவரை திருமணம் செய்த வனிதா 2010 ஆம் ஆண்டு அவரையும் பிரிந்து விட்டார். பிறகு வனிதாவிற்கு ஒரு மகனும் இரண்டு மகள்களும் இருக்கிறார்கள். இந்த நிலையில் மகன் அவருடைய தந்தையோடு போய்விட்டார். இந்த நேரத்தில் தான் இயக்குனர் பீட்டர் பாலை காதலிக்கும் விஷயத்தை சொல்லி, மகள்கள் முன்பு திருமணம் செய்திருந்தார். பிறகு சில நாட்களில் பீட்டர் பாலை பிரிந்து விட்டதாக அறிவித்திருந்தார்.

இந்த நிலையில் சமீபத்தில் தான் பீட்டர் பால் உடல்நிலை பாதிப்பு காரணமாக மரணம் அடைந்திருந்தார். இதற்கிடையே வனிதா அளித்த பேட்டியில் "தன்னுடைய வாழ்க்கை சீரழிந்ததற்கு என்னுடைய அப்பா தான் காரணம்" என்று குற்றச்சாட்டு வைத்திருக்கிறார். மேலும் நான் இப்போது மனதளவில் வலுவான பெண்ணாக இருக்கிறேன். இந்த மாற்றத்திற்கான காரணமும் என்னுடைய அப்பாதான்.

என் குடும்பத்தில் எல்லோரும் அதாவது கவிதா, அனிதா, அருண், ப்ரீத்தா, ஸ்ரீதேவி என எல்லோருடைய பெயரையும் எங்க அப்பா எல்லா இடத்திலும் குறிப்பிட்டாலும் நடுவில் இருக்கும் என்னுடைய பெயர் எதிலும் குறிப்பிடப்படுவதில்லை. சமீபத்தில் ஒரு நபர் எனக்கு ஒரு வீடியோவை அனுப்பி வைத்தார்.

Actress Vanitha Vijayakumar has publicly blamed her father for the downfall of her life

அந்த வீடியோவை நான் 10, 15 தடவை பார்த்தேன். அதில் அப்பா பிள்ளைகளை பற்றி பேசி இருப்பார். ஆனால் என்னை பற்றி அதில் ஒரு வார்த்தை கூட பேசவே இல்லை. இது எனக்கு கோபத்தை கொடுத்தது. அதனால் நான் பல தடவை கோபத்தில் அழுதேன். ஆனால் அவர் சொன்ன விஷயத்தை மட்டும் நான் ஏற்றுக்கொள்கிறேன்.

அதாவது பெண் பிள்ளைகளில் நான் மட்டும்தான் அப்பாவுடைய பேச்சை கேட்கவில்லை. அவருக்கு கீழ்ப்படியாமல் நான் இருந்ததெல்லாம் உண்மைதான். ஆனால் என்னுடைய வாழ்க்கையில் என்னுடைய தந்தை எனக்கு சொன்னது எல்லாமே தவறான அறிவுரைகள். அதை நான் புரிந்து கொண்டதால் அவருடைய பேச்சை நான் கேட்கவில்லை. அப்பா சொன்னதை எல்லாம் நான் கடைபிடித்து இருந்தால் என்னுடைய வாழ்க்கையே சிதறி போயிருக்கும்.

தன்னம்பிக்கை தான் என்னுடைய இப்போதைய பலம். என் அப்பா விஜயகுமார் இல்லை என்று அவர்களால் சொல்ல முடியாது. எனது தந்தையின் பெயருடன் எனது பெயரும் திரும்பத் திரும்ப வந்தால் அது அவர்களுக்கு நான் செய்யும் பழிவாங்குதல். அதற்காகத்தான் நான் அவருடைய பெயரை மாற்றவே இல்லை. அதை செய்யவும் மாட்டேன் என்று அந்த பேட்டியில் வனிதா பேசி இருக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X