அடுத்த கல்யாணம்!? அதிரடியாக போஸ்ட் போட்ட நடிகை வனிதா விஜயகுமார்.. இப்படி ஓப்பனா சொல்லிட்டாங்க!
சென்னை: நடிகை "வனிதா விஜயகுமார்" தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து இருக்கிறார். அப்போது ரசிகர் ஒருவர், "உங்களுக்கு அடுத்த கல்யாணம் எப்போ...?" என்று கேட்க அதற்கு வனிதா, "எதிர்பாராததை எதிர்பாருங்கள்" என்று
வனிதா பதில் கொடுத்து இருக்கிறார்.
அதோடு "ஜோவிகா" குறித்த கேள்விகளுக்கும் தன்னுடைய பர்சனல் வாழ்க்கை குறித்து கேட்ட கேள்விகளுக்கும் அதிரடியாக வனிதா பதில் அளித்திருக்கிறார் அது பற்றி விரிவாக பார்க்கலாம்.

அந்த வகையில் சர்ச்சைக்கு பெயர் போன நடிகை வனிதா விஜயகுமார் உடைய சொந்த வாழ்க்கையும் சரி, சினிமா வாழ்க்கையும் சரி திறந்த புத்தகமாக தான் இருக்கிறது. அவர் என்ன செய்தாலும் அதை ரசிகர்களிடம் அவரே சொல்லி விடுவார் அல்லது ஒரு சில நாட்களிலேயே மக்களுக்கு தெரிய வந்துவிடும். ஆனால் அதைப்பற்றி வனிதா எந்த இடத்தில் கவலைப்பட்டதும் கிடையாது.
நான் எப்போதும் இப்படித்தான் என்று போல்டாகவே இருந்து வருகிறார். அதனால் அவரை பலர் கலாய்த்து வந்தாலும் அவருக்கும் அதிகமானோர் பாலோவர்களாக இருக்கின்றனர். இவருடைய திமிரே இவருக்கு அடையாளமாக மாறிக் கொண்டிருக்கிறது. வனிதாவிற்கு அவருடைய அப்பா விஜயகுமார் குடும்பத்தோடு ஏற்பட்ட பிரச்சனை எல்லோரும் அறிந்ததுதான்.
ஆனாலும் அந்த பிரச்சனைக்கு பிறகு வனிதா "பிக்பாஸ்" மற்றும் "குக் வித் கோமாளி" என்ற நிகழ்ச்சியின் மூலமாக ரசிகர்களின் மத்தியில் பெரிய அளவில் பிரபலமடைந்து விட்டார். இப்போது வெள்ளித்திரையிலும், சின்னத்திரையிலும் பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார். வனிதா மட்டுமல்லாமல் அவருடைய மகள் ஜோவிகாவும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பெரிய அளவில் பிரபலமடைந்திருந்தார்.
அதற்குப் பிறகு ஜோவிகா போட்டோ ஷூட் மூலமாக ரசிகர்களை மிரட்டிக் கொண்டிருக்கிறார். இப்படியான நிலையில் அடிக்கடி வனிதா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து கொண்டிருக்கிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு ரசிகர் ஒருவர் வனிதாவிடம், "உங்களுடைய மகன் அல்லது உங்கள் அப்பா இருவரில் யாரை உங்களுக்கு பிடிக்கும்" என்று கேட்ட கேள்விக்கு, "என்னை யாருக்கு பிடிக்கிறதோ அவரை எனக்கு பிடிக்கும்" என்று அதிரடியான பதிலை கொடுத்திருந்தார்.

அதற்கு பிறகு இன்று தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்திருக்கிறார். அப்போது ரசிகர்கள் மத்தியில் இருந்து பல கேள்விகள் கேட்கப்பட்டிருக்கிறது. அதில் ஒரு ரசிகர், "ஹாய் அக்கா.. நான் உங்களுடைய கான்ஃபிடன்டை லைக் பண்ணுகிறேன். நீங்கள் எப்படி இப்படி எந்த விஷயத்திலும் தைரியமான முடிவை எடுக்குறீங்க..?" என்று கேட்க,
அதற்கு வனிதா," அது கட்ஸ் ஃபீலிங் தான். இங்க என்ன சொல்லுதோ அதை செய்வேன் அவ்வளவுதான்..." என்று விளக்கம் கொடுத்திருக்கிறார். அதுபோல இன்னொரு ரசிகர், "ஜோவிகாவின் வயது என்ன?" என்று கேட்க அதற்கு "18 "என்று சொல்லி இருக்கிறார். அதை தொடர்ந்து ஒரு ரசிகர்," அடுத்த கல்யாணம் எப்போ...?" என்று கேள்வி கேட்க, அதற்கு வனிதா ,"எதிர்பாராததை எதிர்பாருங்கள்" என்று ஹார்ட்டின் கொடுத்திருக்கிறார்.
அது அடுத்ததாக இன்னொரு ரசிகர், "உங்களுடைய நெட்வொர்த் எவ்ளோ?" என்று கேட்க அதற்கு வனிதா "இன்டர்நெட் வொர்த் தான்" என்று நக்கலாக பதில் கொடுத்திருக்கிறார். அதை தொடர்ந்து இன்னொரு ரசிகர், "எப்போ நெக்ஸ்ட் கல்யாணம்? சொல்லுங்க.. மறக்காம இன்வைட் பண்ணுங்க.." என்று சொல்ல அதற்கு வனிதா, "தமிழ்நாட்டையே இன்வைட் பண்றேன். போஸ்டர் அடிச்சு நியூஸ் கொடுக்கிறேன்" என்ற பதிலோடு ஹார்டின் கொடுத்திருக்கிறார்.
அடுத்ததாக இன்னொரு ரசிகர், "உங்களுக்கு லைஃப்ல இதுக்கு அப்புறம் என்ன பண்ணனும்? அதே போல நீங்கள் உங்கள் வாழ்க்கையில் கடந்த 10 வருடத்தில் பண்ணுன பெரிய மிஸ்டேக் என்றால் என்ன?" என்று கேட்க அதற்கு வனிதா, "நான் எதில் எல்லாம் ரீடேக் எடுக்கிறேனோ அது தான் என்னுடைய பெஸ்ட் மிஸ்டேக்" என்று சொல்லி இருக்கிறார். அதுபோல "உங்களுக்கு வர்ற நெகட்டிவிட்டியை நீங்கள் எப்படி ஹேண்டில் பண்றீங்க" என்று கேட்ட ரசிகர்களின் கேள்விக்கு நடிகர் "விஜய்"யை டேக் செய்து "இக்னோர் நெகட்டிவிட்டி" என்று அதில் ஹேஸ்டேக் கொடுத்திருக்கிறார்.

அதுபோல இன்னொரு ரசிகர், "ஹாய் அக்கா, யார் என்ன சொன்னாலும் பரவாயில்லை.. யாரும் இல்லை என்றுலாம் பீல் பண்ணாதீங்க... நீங்க பண்ண மாட்டீங்க என்று எங்களுக்கு தெரியும். ஆனாலும் உங்க கட்ஸ் எனக்கு புடிச்சிருக்கு" என்று ஒரு ரசிகர் வனிதாவை பாராட்ட, அதற்கு வனிதா, "தமிழ்நாடும், தமிழ் மக்களும்.. அந்த ஆண்டவனே நம்ம பக்கம் இருக்கிறான்" என்று குறிப்பிட்டு இருக்கிறார். இப்படியாக ரசிகர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்த வனிதா அதை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்டோரியாக பகிர்ந்து இருக்கிறார்.


Click it and Unblock the Notifications











