நான் அதை மட்டும் செய்யவே மாட்டேன்.. விஜய் சேதுபதி ரொம்பவே போல்ட்.. வனிதா சொன்ன விஷயம்!
சென்னை: மிகப்பெரிய கொண்டாட்டங்கள் மற்றும் அறிமுகத்துடன் நேற்றைய தினம் பிக்பாஸ் தமிழ் 8 நிகழ்ச்சி தன்னுடைய பயணத்தை துவங்கியுள்ளது. இந்த நிகழ்ச்சியின் போட்டியாளர்களை ஒருவர்பின் ஒருவராக மிகவும் கலகலப்புடன் துவங்கி வைத்தார் விஜய் சேதுபதி. அவர் இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து சிறப்பாக கொண்டு செல்வார் என்ற நம்பிக்கையை இந்த நிகழ்ச்சி கொடுத்துள்ளது.
தயாரிப்பாளர் ரவீந்தர், சச்சனா, தர்ஷா குப்தா, தீபக், சுனிதா, விஜே விஷால் என 18 போட்டியாளர்கள் பிக்பாஸ் 8 நிகழ்ச்சியில் தற்போது நுழைந்துள்ள நிலையில், 24 மணிநேரத்திலேயே நிகழ்ச்சியில் முதல் எவிக்ஷன் இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது மிகப்பெரிய மாற்றமாக பார்க்கப்படுகிறது. மேலும் அந்த நபரை மீண்டும் வைல்ட் கார்ட் என்ட்ரியாக கொண்டு வருவார்களா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

பிக்பாஸ் 8 ஷோ: நான் அதை மட்டும் செய்யவே மாட்டேன்.. விஜய் சேதுபதி ரொம்பவே போல்ட்.. வனிதா சொன்ன விஷயம்!: விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சி நேற்றைய தினம் மிகவும் பிரம்மாண்டமான துவங்கத்துடன் தன்னுடைய என்ட்ரியை கொடுத்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் தயாரிப்பாளர் ரவீந்தர், சச்சனா, தர்ஷா குப்தா, தீபக், சுனிதா விஜே விஷால் என 18 போட்டியாளர்கள் களமிறங்கியுள்ள நிலையில், ஒவ்வொரு போட்டியாளரையும் கலாய்த்தும், அன்பாக பேசியும் அரவணைத்தும் விஜய் சேதுபதி பிக்பாஸ் வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளார். இந்த சீசனில் பிக்பாஸ் வீடு மிகவும் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ள நிலையில், முன்னதாக ஹோம் டூரையும நடத்திக் காட்டினார். தான் நிகழ்ச்சியில் அன்பாக பேசுவது போலவே எப்போதும் இருக்க மாட்டேன் என்று எச்சரிக்கையும் கொடுத்தார்.
பிரம்மாண்ட துவக்கம்: இந்த நிகழ்ச்சி தொடர்ந்து 100 நாட்கள் நடக்கவுள்ள நிலையில் 24 மணிநேரத்திலேயே எவிக்ஷன் இருக்கும் என்று அதிரடி காட்டப்பட்டுள்ளது. இதிலிருந்து யார் வெளியேறுவார்கள் மற்றும் அவர் வைல்ட் கார்ட் என்ட்ரியாக மீண்டும் உள்ளே வருவாரா என்பது போன்ற கேள்விகள் எழுந்துள்ளன. நேற்றைய தினம் துவக்க விழாவின்போது விஜய் சேதுபதி இதை கூறிய நிலையில், ரசிகர்களுக்கு மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. இதன்மூலம் நிகழ்ச்சியின் சுவாரஸ்யமும் உச்சத்தை தொட்டுள்ளது. இதையடுத்து யார் அந்த போட்டியாளர் என்ற கேள்வியும் தற்போது எழுந்துள்ளது.
பிக்பாஸ் vs வனிதா விஜயகுமார்: இதனிடையே பிக்பாஸ் VS வனிதா நிகழ்ச்சியை நேற்றைய தின 10 மணிக்கு மேல் துவங்கினார் நடிகை வனிதா விஜயகுமார். இந்த நிகழ்ச்சியில் ஃபேட்மேன் உள்ளிட்ட அனைவர் குறித்தும் பல விஷயங்களை பகிர்ந்துள்ளார். அவரது உடல் பருமனாக இருப்பது பாடி ஷேமிங் செய்வதற்கான விஷயம் இல்லை என்றும் அது ஒரு நோய் என்றும் வனிதா விஜயகுமார் கூறியுள்ளார். தானும் முன்னதாக இப்படி இருந்ததாகவும் ஆனால் தற்போது அதிலிருந்து வெளியேறிவிட்டதாகவும் கூறியுள்ள வனிதா விஜயகுமார், அவரும் பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறியவுடன் தன்னுடைய உடல் எடையை குறைப்பதில் கவனம் செலுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
வனிதா கவலை: மேலும் ரவீந்தரை தான்தான் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பரிந்துரைத்ததாகவும் வனிதா விஜயகுமார் கூறியுள்ளார். இதனிடையே, இந்த நிகழ்ச்சியில் முன்னதாக ஹோஸ்ட்டாக செயல்பட்ட கமல்ஹாசன் லெஜெண்ட் என்றும் ஆனால் தற்போது ஹோஸ்ட்டாக இணைந்துள்ள விஜய் சேதுபதிமீது அதிகமான எதிர்பார்ப்பு எழுவதாகவும் வனிதா விஜயகுமார் கூறியுள்ளார். நேற்றைய நிகழ்ச்சியில் அவர் ஃபயராக செயல்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார். இதனிடையே அர்னவ் குறித்து பேசிய வனிதா விஜயகுமார், தான் சீரியல்கள் பார்ப்பதில்லை என்றும் கூறியுள்ளார். தான் எதுவாக இருந்தாலும் சீரியல்கள் மட்டும் பார்க்க மாட்டேன் என்றும் கூறியுள்ளார்.
சகஜமாக பேச வழி ஏற்படுத்திய விஜய் சேதுபதி: ரஞ்சித்தின் மனைவி பிரியாவுடன் இணைந்து தான் ஏரோபிக்ஸ் கிளாசிற்கு எல்லாம் சென்றுள்ளதாகவும் அதனால் அவர்களுடன் மிகப்பெரிய பழக்கம் உள்ளதாகவும் வனிதா விஜயகுமார் கூறியுள்ளார். இந்த நிகழ்ச்சியின் Gener clash ஏற்படுத்தப்பட்டுள்ள நிலையில், இந்த சீசனிலும் ஒரு பெண்தான் இந்த சீசனையும் ஜெயிப்பாரோ என்று தனக்கு தோன்றுவதாகவும் வனிதா கூறியுள்ளார். முன்னதாக கமலிடம் பேச போட்டியாளர்கள் பயந்ததாகவும் ஆனால் விஜய்யுடன் சகஜமாக பேச அனைவரும் முயல்வதால், இந்த நிகழ்ச்சி கண்டிப்பாக நியாயமாக நடக்கும் என்று தான் எதிர்பார்ப்பதாகவும் வனிதா மேலும் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











