பிக்பாஸ் 8ல் தினமும் ரிவ்யூ கொடுக்கும் வனிதா.. விஜய் சேதுபதியே இத பார்த்துட்டுதான் தூங்கப் போவாராம்!
சென்னை: விஜய் டிவியின் பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி நாளை மறுநாள் மாலை மிகவும் பிரம்மாண்டமான துவக்க விழாவுடன் துவங்க உள்ளது. இதில் பங்கேற்க உள்ள போட்டியாளர்கள் குறித்து அடுத்தடுத்த கணிப்புகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வருகிறது. அதன்படி பிரபல காமெடி நடிகர் செந்தில், சீரியல் நடிகர் ரியாஸ்கான் உள்ளிட்ட பலரும் இந்த சீசன் 8ல் பங்கேற்க உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இதனிடையே இந்த நிகழ்ச்சியில் புதிதாக களமிறங்கியுள்ள ஆங்கர் விஜய் சேதுபதியின் ஆட்டம் எப்படி இருக்கும் என்பது குறித்து ரசிகர்கள் எதிர்பார்ப்பை எழுப்பி வருகின்றனர். ஆளும் புதிது ஆட்டமும் புதிது என்று அவர் கம்பீரமாக கூறும் நிலையில் அவரது ஆட்டம் கண்டிப்பாக புதிதாக தான் இருக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்க துவங்கியுள்ளனர்.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் துவக்க விழா: இதன் துவக்க விழா நிகழ்ச்சி வரும் ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணிக்கு விஜய் டிவியில் ஒளிபரப்பாக உள்ளது பிக் பாஸ் நிகழ்ச்சி கடந்த ஏழு சீசன்களாக கமல்ஹாசனை ஆங்கராக வைத்து சிறப்பாக செயல்பட்ட நிலையில் கடந்த சீசனில் பல விமர்சனங்களை இந்த நிகழ்ச்சியும் நிகழ்ச்சியின் ஆங்கரான கமல்ஹாசனும் பெற்றனர். இந்நிலையில் தன்னுடைய படங்களின் கமிட்மெண்ட் காரணமாக இந்த சீசனின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து தான் விலக உள்ளதாக நடிகர் கமல்ஹாசன் அறிவித்திருந்தார். இதையடுத்து புதிய ஆங்கராக ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு என்ற முழக்கத்துடன் நடிகர் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியில் களமிறங்கியுள்ளார்.
அடுத்தடுத்த பிரமோக்கள்: இன்னும் இரு தினங்களில் இந்த நிகழ்ச்சி துவங்க உள்ள நிலையில் அப்படி என்ன ஆட்டம் புதிதாக இருக்கும் என்று ரசிகர்கள் கேள்வி எழுப்ப தொடங்கியுள்ளனர். இன்னும் சில தினங்களில் இதற்கு விடை கிடைக்கும் என்று எதிர்பார்க்கலாம். ஒருபுறம் விஜய் டிவி பிக் பாஸ் 8 நிகழ்ச்சிக்கான ப்ரோமோக்களை வெளியிட்டு வரும் நிலையில் தற்போது நடிகையும் முன்னாள் பிக் பாஸ் போட்டியாளருமான வனிதா விஜயகுமார் தற்போது புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். ராபர்ட் மாஸ்டருடன் இணைந்து அவர் இதன் புதிய ப்ரோமோவை வெளியிட்டுள்ளார்.
வனிதா விஜயகுமார் ரிவ்யூ: அதன்படி பிக் பாஸ் 8 நிகழ்ச்சியின் ஒவ்வொரு நாளின் முடிவிலும் அதன் ரிவ்யூவை கூற உள்ளதாகவும் தன்னுடைய இந்த ரிவ்யூவை பார்த்துவிட்டு தான் நடிகர் விஜய் சேதுபதியே தூங்கப் போவார் என்றும் தெரிவித்துள்ளார். இதை பார்த்து உடன் இருக்கும் ராபர்ட் மாஸ்டருக்கு மட்டுமில்லாமல் ரசிகர்களுக்கும் அதிர்ச்சி ஏற்படுவதை தவிர்க்க முடியவில்லை. பிக்பாஸ் மற்றும் குக் வித் கோமாளி நிகழ்ச்சிகளில் அடுத்தடுத்து பங்கேற்று அதிரடியாக செயல்பட்டவர் வனிதா விஜயகுமார். இந்நிலையில் அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியை வெளியிலிருந்து பார்த்து அதன் விமர்சனத்தை பகிரவுள்ளது எத்தகைய அதிரடியை ஏற்படுத்தும் என்று தற்போதே ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
ரசிகர்கள் எதிர்பார்ப்பு: இன்னும் இரு தினங்களில் பிக் பாஸ் ஆட்டம் துவங்க உள்ள நிலையில் வனிதா விஜயகுமாரும் அதில் விமர்சகராக பங்கேற்க உள்ளது ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகப்படியாக ஏற்படுத்தியுள்ளது. தற்போது இதுகுறித்து இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள நிலையில், முன்னதாக விஜய் சேதுபதியை போல ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு என்றவகையில் ஒரு பிரமோவையும் வெளியிட்டிருந்தனர்.


Click it and Unblock the Notifications











