விஜய் சேதுபதி தன்னோட மெண்டல் ஹெல்த்தை பார்த்துக்கனும்.. பிக்பாஸ் 8 குறித்து பேசிய விசித்ரா!

சென்னை: விஜய் டிவியின் பிக் பாஸ் 8 நிகழ்ச்சி விரைவில் துவங்க உள்ளது. இந்த நிகழ்ச்சியை கடந்த ஏழு சீசன்களாக நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்த நிலையில் தற்போது தொகுப்பாளராக விஜய் சேதுபதி களமிறங்கியுள்ளார். இவரது அடுத்தடுத்த ப்ரோமோஷன் வீடியோக்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகின்றன.

இதனிடையே கமல்ஹாசனுக்கு மிகச் சிறந்த மாற்றாக நடிகர் விஜய் சேதுபதி இருப்பார் என்று கடந்த சீசனில் போட்டியாளராக பங்கேற்ற நடிகை விசித்ரா தெரிவித்துள்ளார். சீனியர் நடிகராக இருந்த கமல்ஹாசனே பல ட்ரோல்களையும் மீம்ஸ்களையும் சந்தித்த நிலையில் விஜய் சேதுபதியும் அது போன்ற விஷயங்களை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும் என்றும் விசித்திரா தெரிவித்துள்ளார்.

television vijay sethupathi vichitra

பிக்பாஸ் 8 ஷோ: விஜய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சி அடுத்த மாதத்தில் துவங்க உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதற்கான அடுத்தடுத்த பிரமோக்கள் வெளியிடப்பட்டு வரும் நிலையில் கடந்த ஏழு சீசன்களாக நிகழ்ச்சியின் ஆங்கராக மாஸ் காட்டி வந்து கமல்ஹாசன், இந்த சீசனில் இல்லை என்பதை ரசிகர்கள் ஏற்றுக்கொள்ள தயாராக இல்லை. ஆனால் அவருக்கு பதிலாக தற்போது எட்டாவது சீசனில் நடிகர் விஜய் சேதுபதியை சேனல் களமிறக்கியுள்ளது. விஜய் சேதுபதி கமல்ஹாசனுக்கு மிக சரியான மாற்றாக இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தன்னுடைய மனதில் பட்ட எந்த விஷயத்தையும் போல்டாக பேசும் தன்மை உடையவர் விஜய் சேதுபதி.

மெண்டல் ஹெல்த்தை பார்த்துக்கனும்: சக நடிகர்கள் மற்றும் ரசிகர்களின் தோள் மீது கை போட்டு சாவகாசமாக நடைபோடும் செயல்பாடுகளுக்காகவும் பாராட்டப்படுபவர் நடிகர் விஜய் சேதுபதி. பிக்பாஸ் 8 ஷோவில் விஜய் சேதுபதி ஆங்கராக இணைந்துள்ள நிலையில் அவர் தன்னுடைய மெண்டல் ஹெல்த்தை சரியாக பார்த்துக் கொள்ள வேண்டும் என்று நடிகை விசித்ரா கேட்டுக் கொண்டுள்ளார். கடந்த சீசனில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று முன்னணி கண்டஸ்டன்ட்டாக வலம் வந்தவர் விசித்ரா. இந்நிலையில் அவரிடம் பிக்பாஸ் 8 சீசன் குறித்தும் விஜய் சேதுபதி, கமல்ஹாசன் குறித்தும் பல கேள்விகள் கேட்கப்பட்டுள்ளது.

விசித்ரா விருப்பம்: விஜய் சேதுபதி மிகச் சரியான தொகுப்பாளராக பிக் பாஸ் 8 நிகழ்ச்சியில் நடந்து கொள்வார் என்று தான் எதிர்பார்ப்பதாக விசித்ரா தெரிவித்துள்ளார். மேலும் இந்த சீசனில் பங்கேற்க தான் மிகுந்த ஆர்வமாக உள்ளதாகவும் விஜய் சேதுபதியுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பு தனக்கு கிடைக்காத நிலையில் அவரது நிகழ்ச்சியில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தால் அது தனக்கு மிகவும் உற்சாகமான மனநிலையை கொடுக்கும் என்றும் விசித்ரா தெரிவித்துள்ளார். மூத்த நடிகரான கமல்ஹாசன் தோழமையுடன் பழகினாலும் அவர் செட்டிற்கு வந்தால் அனைவரும் பயப்படுவார்கள் என்று தெரிவித்துள்ள விசித்ரா, அதேபோன்ற தோற்றத்தை விஜய் சேதுபதியும் கொடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

ட்ரோல்களை சந்தித்த கமல்ஹாசன்: சீனியர் நடிகரான கமல்ஹாசனுக்கு கடந்த சீசனில் பல ட்ரோல்கள், மீம்ஸ்கள் வெளியான நிலையில் தற்போது விஜய் சேதுபதியும் அதை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும் என்றும் அவர் தன்னுடைய மென்டல் ஹெல்த்தை சிறப்பாக பராமரிக்க வேண்டும் என்றும் தனக்கென ஒரு குழுவை அமைத்துக் கொண்டு அவர்களின் ஆலோசனைப்படி செயல்படலாம் என்றும் விசித்ரா தெரிவித்துள்ளார். நடிகர் கமல்ஹாசன் கடந்த சீசனில் ஒருதலைபட்சமாக நடந்து கொண்டது உண்மைதான் என்றும் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய பின்பு தான் தனக்கு இது குறித்து தெரிய வந்ததாகவும் விசித்ரா கூறியுள்ளார்.

விஜய் சேதுபதியின் மெச்சூர்ட்னஸ்: மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பெய்ட் பிஆர் என்பது நடப்பது உண்மைதான் என்றும் விசித்ரா தெரிவித்துள்ளார். இந்த விஷயமும் தனக்கு நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய பின்பு தான் தெரிய வந்ததாகவும் விசித்ரா கூறியுள்ளார். நடிகராக மிகவும் அழுத்தமான நடிப்பை கொடுத்துவரும் விஜய் சேதுபதி, தன்னுடைய இன்டர்வியூக்களிலும் மிகவும் மெச்சூர்டாக பேசுவதை தான் பார்த்துள்ளதாகவும் இது அவருக்கு மிகப்பெரிய பிளஸ் பாயிண்ட் என்றும் அவரும் பிக்பாஸ் நிகழ்ச்சியை கமல்ஹாசனை போலவே மிகச்சிறப்பாக நடத்துவார் என்று தான் எதிர்பார்ப்பதாகவும் விசித்ரா கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X