‘சொல்லுங்கண்ணே சொல்லுங்க’: அண்ணாச்சியின் ஜாலி லூட்டி

By Mayura Akilan

Adhithya TV program Sollunganne Sollunga
ஆதித்யா டிவி-யில் ஞாயிறுக்கிழமை தோறும் ஒளிபரப்பாகும் 'சொல்லுங்கண்ணே சொல்லுங்க' நிகழ்ச்சி செம ஜாலி என்று ரசிகர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். இந்த நிகழ்ச்சியின் வெற்றிக்கு முக்கிய காரணமே இமான் அண்ணாச்சியின் பேச்சும், நேயர்களிடையே அவருடைய அணுகுமுறையும்தான்.

ஊர் ஊராக சென்று மக்கள் கூடியிருக்கும் இடங்களில் மைக் பிடித்து ஆங்கில வார்த்தைக்கு சரியான தமிழ் வார்த்தையை கேட்பது இந்த நிகழ்ச்சியின் சிறப்பம்சம். எந்த ஒரு நிகழ்ச்சியிலுமே நேயர்களின் பங்களிப்பு இருந்தால் அது நிச்சயம் வெற்றி பெரும் என்பதற்கு 'சொல்லுங்கண்ணே சொல்லுங்க' ஒரு உதாரணம்.

மக்கள் கூட்டத்தில் திடீரென்று மைக் நீட்டிய அண்ணாச்சி 'டார்ச் இருக்குல்ல டார்ச் அதை எப்டி சொல்லுவீங்க? என்று ஒரு கேள்வியைப் போட்டார். அதற்கு பதிலளித்தவர்கள் பெரும்பாலும் ' எங்க வீட்ல டார்ச்சுன்னுதான் சொல்லுங்க என்றனர். அதற்கு நக்கல் சிரிப்பு சிரித்தவாறே அண்ணாச்சி கூறுவதுதான் ஹைலைட்.

'ஏ பாத்தியாளா இவங்க வீட்ல டார்ச்சை டார்ச்சுனுதான் சொல்லுவாங்களாம்' என்று கூறும் போதே சிரிப்பு களை கட்டுகிறது. இதேபோல் ஒவ்வொரு வாரமும் புழக்கத்தில் உள்ள ஆங்கில வார்த்தையை எடுத்துக்கொண்டு அதற்கு சரியான வார்த்தையை கேட்கிறார் அண்ணாச்சி. ரசித்து ருசிக்க வேண்டிய நிகழ்ச்சி பாருங்களேன். தமிழ்வார்த்தைகளை நாமும் தெரிந்து கொள்ளலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X