Siragadikka Aasai: விஜய் டிவியின் நம்பர் 1 சீரியல்.. சிறகடிக்க ஆசையில் ஏற்பட போகும் முக்கிய மாற்றம்!

சென்னை: விஜய் டிவியின் முன்னணி சீரியலாக டிஆர்பியில் மாஸ் காட்டி வருகிறது சிறகடிக்க ஆசை தொடர்.

கடந்த சில வாரங்களாக பாக்கியலட்சுமி தொடரை பின்னுக்கு தள்ளி முதலிடத்தில் தொடர்ந்து வருகிறது.

இந்த தொடரின் அண்ணாமலை, முத்து, மீனா என கேரக்டர்கள் அனைத்தும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகின்றன.

After BB7 show, Vijay TVs Siragadikka Aasai Serial to be changed its time it seems

சிறகடிக்க ஆசை தொடர்: விஜய் டிவி நிகழ்ச்சிகளுக்கு இணையான முக்கியத்துவத்தை தொடர்களுக்கும் கொடுத்து வருகிறது. இந்த சேனலில் கடந்த சில மாதங்களாகவே முதலிடத்தை தொடர்ந்து தக்க வைத்து வருகிறது. முதலிடத்தில் இருந்த பாக்கியலட்சுமி சீரியலுக்கு டஃப் கொடுத்து அந்த தொடரை பின்னுக்கு தள்ளியுள்ளது. இந்தத் தொடரில் அண்ணாமலை, முத்து, மீனா உள்ளிட்ட கேரக்டர்கள் ரசிகர்களுக்கு மிகுந்த உற்சாகத்தை கொடுத்து வருகின்றன.

முன்னணியில் சிறகடிக்க ஆசை: தொடர்ந்து இந்த வாரமும் டிஆர்பியில் அதிக புள்ளிகளை பெற்று விஜய் டிவியின் முதல் சீரியல் என்ற பெருமையை பெற்றுள்ளது சிறகடிக்க ஆசை தொடர். இந்த சீரியலில் சாதாரண குடும்பத்தை சேர்ந்தவர் என்ற காரணத்திற்காகவே மாமியாரின் வெறுப்புக்கு தொடர்ந்து உள்ளாகி வருகிறார் மீனா. அவர் எவ்வளவுதான் அனுசரணையாக குடும்பத்தை வழிநடத்தினாலும் மாமியாரின் அன்பை பெற முடியாமல் தவிக்கிறார்.

மாமனார் மெச்சிய மருமகள்: ஆனால் மாமனார் அண்ணாமலை மெச்சிய மருமகளாக மீனாவும் அதிகமான அன்பை பெறும் மகனாக முத்துவும் காணப்படுகின்றனர். இந்த சீரியல் அதிகமான ரசிகர்களை கவர்ந்து வரும்நிலையில், தற்போது புதிதாக திருமணமான ரவி மற்றும் ஸ்ருதிக்கு அறை கொடுக்கப்படாததை காட்சிகளாக கொடுத்து வருகிறது. இந்த பிரச்சினையால் வீடு களேபரமாக, இதற்கு சிறப்பான தீர்வை கொடுக்கிறார் அண்ணாமலை. உடல்நிலை சரியில்லாத தன்னுடைய தந்தைக்காக முத்துவும் சிறப்பான ஏற்பாடை செய்கிறார்.

After BB7 show, Vijay TVs Siragadikka Aasai Serial to be changed its time it seems

நேர மாற்றம்: இந்நிலையில் தினந்தோறும் 9 மணிக்கு ஒளிபரப்பாகிவரும் சிறகடிக்க ஆசை தொடரின் நேரத்தில் மாற்றம் செய்யப்பட உள்ளதாக தற்போது தகவல்கள் தெரிவிக்கின்றன. தினந்தோறும் இந்த தொடர் இரவு 7.30 மணிக்கு அல்லது 8 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நேர மாற்றம் பிக்பாஸ் 7 நிகழ்ச்சியின் முடிவுக்கு பின்பே நடக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

200 அத்தியாயங்கள் நிறைவு: கடந்த சில வாரங்களுக்கு முன்பு துவங்கப்பட்ட இந்த சீரியல் தற்போது 200வது அத்தியாயத்தை பூர்த்தி செய்துள்ளது. இந்த தொடரில் தங்களுக்கு கொடுக்கப்பட்ட கேரக்டர்களை அனைத்து நடிகர்களும் திறம்படி செய்து வருகின்றனர். விகடன் தயாரிப்பில் ஒளிபரப்பாகிவரும் இந்த சீரியல் தற்போது 200 வாரங்களை கடந்து வெற்றிகரமான சீரியலாக மாறியுள்ளதற்கு பல்வேறு தரப்பினரும் ரசிகர்களும் வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X