Muthukumaran: நன்றி மறப்பது நன்றன்று.. பிக் பாஸ் 8 வின்னர் முத்துக்குமரன் வெளியிட்ட முதல் வீடியோ!

சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 8ன் கோப்பையை கைப்பற்றிய முத்துக்குமரன் அதன் கனம் அதிகமாக இருப்பதாகவும் மக்கள் தன் மீது இத்தனை அன்பு வைத்திருப்பார்கள் என்று கொஞ்சம் கூட நினைத்துப் பார்க்கவில்லை. அவர்களுக்கு எப்படி நன்றி சொல்வது என்றே தெரியவில்லை. நன்றி என்ற வார்த்தை மூலமாகவே நன்றி சொல்கிறேன் என பேசி வீடியோ ஒன்றை சற்றுமுன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

விஜய் டிவியின் தமிழ் பேச்சு எங்கள் மூச்சு நிகழ்ச்சி மூலம் ரசிகர்களுக்கு அறிமுகமான முத்துக்குமரன் தொகுப்பாளராக யூடியூப் சேனலில் பணியாற்றி வந்தார். இந்த முறை பிக் பாஸ் நிகழ்ச்சியில் முத்துக்குமரன் போட்டியாளராக உள்ளே நுழைந்த முதல் நாளில் இருந்தே அவரது பேச்சுக்கும் அவரது போட்டி மனப்பான்மைக்கும் ஏகப்பட்ட ரசிகர்கள் அவர் தான் டைட்டிலை வெல்வார் என ஆருடம் சொல்ல ஆரம்பித்த நிலையில், மக்களின் அதிக ஆதரவை பெற்று டைட்டில் வின்னராகவும் இந்த சீசனில் வெற்றிப் பெற்றுள்ளார் முத்துக்குமரன்.

bigg boss tamil 8 muthukumaran 8


முத்துக்குமரனின் பெற்றோர்களை மேடையேற்றி விஜய் சேதுபதி அழகு பார்த்த நிலையில், பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்துள்ள முத்துக்குமரன் தனக்கு வாக்களித்த தமிழ் பிக் பாஸ் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

திருக்குறளுடன் நன்றி: “நன்றி மறப்பது நன்றன்று” என திருக்குறளை மேற்கோள் காட்டி பிக் பாஸ் வீட்டை விட்டு கோப்பையுடன் வெளியேறியுள்ள பிக் பாஸ் தமிழ் சீசன் 8ன் வெற்றியாளர் முத்துக்குமரன் தனது இன்ஸ்டாகிராம் ரசிகர்களுக்காக வெளியிட்டுள்ள முதல் வீடியோ இணையத்தில் தீயாக பரவி வருகிறது. முத்துக்குமரன் இந்த வெற்றியை ருசிக்க வேண்டும் என அவருக்கு ஆதரவு அளித்து வாக்களித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.


ரொம்ப கனமா இருக்கு: தன்னுடைய உழைப்புக்கும் முயற்சிக்கும் இந்தளவுக்கு தமிழக மக்கள் அன்பு செலுத்துவார்கள் என்று கொஞ்சமும் தான் எதிர்பார்க்கவில்லை. உள்ளே நண்பர்கள் எல்லாம் வந்து உங்களுக்கான ரெஸ்பான்ஸ் வெளியே நிறைய இருக்கு என்று சொல்லும் போது பெரிதாக தெரியவில்லை. ஆனால், வெளியே வந்து பார்க்கும் போது இவ்வளவு அன்பு எனக்கா? நிஜமாவே எனக்கா என எண்ணத் தோன்றுகிறது என்றும் நிச்சயம் அவர்கள் தன் மீது வைத்துள்ள நம்பிக்கையை தன்னால் முடிந்த வழிகளில் நிச்சயம் காப்பாற்றுவேன் என்றும் முத்துக்குமரன் உறுதியளித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X