சரி தர்பார் முடிஞ்சாச்சு... அடுத்து என்ன?.. இயக்குநர் முருகதாஸ் ஆசை!

Recommended Video

Watch Video : Hard yet fun team of DARBAR

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தர்பார் படம் முடியும் கட்டத்துக்கு வந்துவிட்டது. படத்தின் இயக்குநர் முருகதாஸ் ஹிட் நடிகர்களுக்கு எப்படியும் ஹிட் கொடுத்துவிடுவார். முருகதாஸ் படத்தில் நடிப்பவர்களுக்கு ஹிட் கேரண்டி, வாரன்டி என்று அடுக்கிவிடுவார்.

தீனா படம் என்று ஒன்று அஜித்தை வைத்து அவர் எடுக்கவில்லை என்றால், இன்றைக்கு அஜித்தை தல என்று நாம் செல்லமாக அழைத்து பேரின்பம் கண்டிருக்க முடியாது.

தல இருக்கும் போது வால் ஆடக் கூடாது என்று சும்மா ஒரு டயலாக்தான் ஓவர் நைட்டில் அஜீத் தனது ரசிகர்களுக்கு தல ஆகிவிட்டார்.

ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி

ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி

தர்பார் படத்தின் கிளைமேக்ஸ் காட்சியில் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி காத்திருக்கிறது என்று மட்டும் சொல்லி அவருக்கே இயல்பான அந்த வெள்ளந்தி சிரிப்பு சிரிக்கிறார். கேப்டன் விஜயகாந்த் கிளைமேக்ஸ் காட்சியில் தூக்கு தண்டனை பெற்றால்தான் படம் நன்றாக இருக்கும் என்றும், அது அவரது ரசிகர்கள் ஏற்றுக் கொள்ளும்படிதான் இருக்கும் என்றும் தைரியம் சொன்னார்.அவர் சொன்னதுதான் நடந்தது.

துப்பாக்கி படம்

துப்பாக்கி படம்

விஜயை வைத்து இவர் இயக்கிய துப்பாக்கி படத்தைத்தான்,தளபதி ரசிகர்கள் பார்ட் 2 எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து இருக்கிறார்கள். நடிகர் சூர்யாவுக்கு கஜினி என்று அனைத்து நடிகர்களுக்கும் ஹிட் கொடுத்த இயக்குநர் முருகதாஸ் என்றால் அது மிகை இல்லை.

தயிர் சாதம்தான்

தயிர் சாதம்தான்

சிவாஜி சார் தனது நடிப்பை உயிரோட்டமாக நமது ரத்தத்துக்குள் இயல்பாக ஓடவிட்ட நடிகர்.அவருக்கு வெறும் தயிர் சாதம் போல சாஃப்ட் கேரக்டர் கொடுத்து பழக்கி விட்டார்கள் என்று கமல்ஹாசனுக்கு நடத்திய விழாவில் பேசியவர், நடிகர் கமல்ஹாசன் மட்டும் எனக்கு வாய்ப்பு கொடுத்தால் அவருக்கு சரியான ஆக்ஷன் படம் அவரின் நடிப்புக்கு நல்ல தீனியாக கொடுப்பேன் என்று கூறி இருக்கிறார்.

கமல்ஹாசன் நடிகர்

கமல்ஹாசன் நடிகர்

நடிகர் கமல்ஹாசன் நடிப்புக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதே அவரது ரசிகர்களின் ஆசை. பிக் பாஸில் இருந்து வெளியேறி இருக்கார் நம்ம இயக்குநர் சேரன். இவர் கமலுக்காக தேவர் மகன் பார்ட் 2 எடுக்கலாம் என்று சொல்லி இருக்கார். என்னதான் சொல்லுங்கள், சூப்பர் ஸ்டார் ரஜினி அரசியலுக்கு வந்தால் யாரும் வேண்டாம் என்று சொல்வதில்லை. அதே சமயம் ரசிகர்கள் கமல்ஹாஸனை அரசியலுக்கு வேண்டாம் சார், நீங்கள் நிறைய படங்கள் நடிக்க வேண்டும், நாங்கள் ரசிக்க வேண்டும் என்றுதான் விரும்புகிறார்கள்.

இந்தியன் பார்ட் 2 போல, தேவர் மகன் பார்ட் 2 மற்றும் முருகதாஸ் இவர்களுக்கு எல்லாம் கமல் வாய்ப்பு தந்து அவரது ரசிகர்களை குளிர வைக்க வேண்டும். வரும் இளம் நடிகர்களுக்கு இன்னும் இன்னும் என்று கமல்ஹாசன் இன்ஸபிரேஷனாக இருக்க வேண்டும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X