அடச்சே, இதை கூடவா காப்பியடிப்பீங்க பிக் பாஸ்?
சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் செய்த காரியத்தை பார்த்து பார்வையாளர்கள் முகம் சுளிக்கிறார்கள்.
பிக் பாஸ் 2 நிகழ்ச்சி ரசிகர்களிடையே பெரிய அளவுக்கு வரவேற்பை பெறவில்லை. இந்நிலையில் இந்த வாரம் யாரை வெளியேற்ற நினைக்கிறீர்கள் என்று கேட்டு பார்வையாளர்களை ஓட்டு போடச் சொல்கிறார்கள்.
அப்படி பார்வையாளர்கள் கடந்த வாரம் ஓட்டு போட்டு ஏமாந்து போயுள்ளனர்.

நித்யா
யாரை வெளியேற்ற வேண்டும் என்று கேட்டு நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் யாஷிகாவுக்கு தான் அதிக வாக்குகள் கிடைத்தது. ஆனால் அவரை வெளியே அனுப்பாமல் காப்பாற்றிவிட்டு நித்யாவை அனுப்பிவிட்டார்கள். இதை பார்த்த பார்வையாளர்கள் கடும் கோபம் அடைந்துள்ளனர்.

காயத்ரி
கடந்த சீசனில் கூட அதிக வாக்குகள் வாங்கிய காயத்ரியை வெளியே அனுப்பாமல் காப்பாற்றினார்கள். நிகழ்ச்சிக்கு வந்த நடிகை ஸ்ரீப்ரியா இது குறித்து கமலிடமே கேட்டார். வாரம் முழுக்க ரசிகர்கள் ஓட்டு போடுகிறார்கள், ஆனால் வெள்ளிக்கிழமை நீங்கள் காயத்ரியை காப்பாற்றுகிறீர்கள் என்று ஸ்ரீ ப்ரியா கேட்டார்.

காப்பி
இந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து காட்சிகளை காப்பியடித்தார்கள். ஆனால் தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் செய்த கோல்மால் வேலையை கூடவா காப்பியடிப்பார்கள் என்று பார்வையாளர்கள் வறுத்தெடுக்கிறார்கள்.
யாஷிகா
கடந்த வாரம் யாஷிகாவை காப்பாற்றியது போன்று இந்த வாரம் ஐஸ்வர்யாவை காப்பாற்றுவீர்கள். இதுக்கு எதற்கு நாங்கள் ஓட்டு போட வேண்டும் என்று பார்வையாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.


Click it and Unblock the Notifications











