விவாகரத்து பெற்ற கையோடு பாக்கியா செய்த அதிரடி.. அதிர்ச்சியில் எழில்!

சென்னை : விஜய் டிவியின் முன்னணி தொடராக மாறியுள்ளது பாக்கியலட்சுமி தொடர்.

Recommended Video

Bakyalakshmi Serial Review | திரும்ப வீட்டிற்கு வந்துடாதே...

ரசிகர்கள் அதிகமாக எதிர்பார்த்தது போலவே இந்தத் தொடரில் கோபியின் குட்டு வெளிப்பட்டு, தற்போது அவருக்கும் பாக்கியாவிற்கும் விவாகரத்தும் நடந்துள்ளது.

இதையடுத்து அடுத்ததாக பாக்கியலட்சுமி என்ன மாதிரியான முடிவுகளை எடுப்பார் என்று தெரிந்துக் கொள்ள ரசிகர்கள் அதிகமாக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

விஜய் டிவி சீரியல்கள்

விஜய் டிவி சீரியல்கள்

விஜய் டிவியின் நிகழ்ச்சிகள் பிரத்யேகமாக ரசிகர்களை கவர்ந்து வருவது போலவே, அதன் தொடர்களும் வெகுவாக கவர்ந்து வருகின்றன. ஒரு தொடர் சிறப்பான வரவேற்பை பெற்றால் அடுத்தடுத்த சீசன்களை வெளியிடுவதும், வரவேற்பை பெறவில்லை என்றால் அதை முடித்து வைப்பது என்று அதிரடிகளை சேனல் மேற்கொண்டு வருகிறது.

பாக்கியலட்சுமி தொடர்

பாக்கியலட்சுமி தொடர்

அந்த வகையில் சேனலின் முக்கிய மற்றும் முன்னணி தொடராக உள்ளது பாக்கியலட்சுமி. இந்தத் தொடர் கடந்த வார டிஆர்பியில் 2வது இடத்திலும் சேனலில் முதலிடத்தையும் பிடித்துள்ளது. அதற்கு ஏற்றாற்போல பரபரப்பான எபிசோட்களை ஒளிபரப்பி ரசிகர்களை மிகவும் உற்சாகப்படுத்தி வருகிறது.

ஏமாற்றும் கோபி

ஏமாற்றும் கோபி

தன்னுடைய குடும்பத்தினர் மற்றும் காதலி இருதரப்பினரையும் தொடர்ந்து ஏமாற்றி வந்தார் கோபி. அதற்கு இவர் கூறிய காரணம், தான் திருமணம் செய்தது முதல் சரியான வாழ்க்கையை வாழ வில்லை என்பதுதான். தன்னுடைய மனைவி பாக்கியா தனக்கு நல்ல மனைவியாக இல்லை என்றும் இவர் குற்றம் சாட்டிவந்தார்.

மனைவிக்கு தெரியாமல் விவாகரத்து

மனைவிக்கு தெரியாமல் விவாகரத்து

இதனிடையே தன்னுடைய முன்னாள் காதலியை சந்தித்த கோபி, அவருடனான உறவை புதுப்பித்துக் கொண்டார். தன்னுடைய மனைவியை விவாகரத்து செய்துவிட்டு காதலி ராதிகாவை திருமணம் செய்ய என்னவெல்லாம் செய்ய முடியுமோ அதையெல்லாம் அரங்கேற்றினார். மனைவிக்கே தெரியாமல், அவரிடம் கையெழுத்து வாங்கி விவாகரத்துக்கும் அப்ளை செய்தார்.

கோபியின் தகிடுதத்தம்

கோபியின் தகிடுதத்தம்

இதனிடையே அவரின் இந்த தகிடுதத்தம் இரு தரப்பினருக்கும் தெரியவருகிறது. இதனால் ஏற்பட்ட பல குழப்பங்கள் உள்ளிட்டவை கடந்த வாரங்களில் ஒளிபரப்பாகின. கோபி மாட்டிக் கொள்ள வேண்டும என்ற ரசிகர்களின் ஆசையும் நிறைவேறியது. இதையடுத்து கொதித்தெழுந்த ராதிகா மற்றும் பாக்கியா இருவரும் கோபியை விலகும் முடிவை எடுத்தனர்.

ராதிகா -பாக்கியா நடவடிக்கை

ராதிகா -பாக்கியா நடவடிக்கை

கோபியை விட்டுவிட்டு மும்பைக்கு செல்லும் முடிவை ராதிகா எடுக்க, கோபியை விவாகரத்து செய்யும் முடிவை பாக்கியா எடுக்கிறார். இதனால் இந்த தொடர் சூடு பிடித்தது. இந்நிலையில் தன்னுடைய கணவன் கேட்ட விவாகரத்தை கொடுத்தே விட்டார் பாக்கியா. இதையடுத்து அவரது வாழ்க்கையில் அடுத்ததாக என்ன முடிவெடுப்பார் என்று தெரிந்துக் கொள்ள ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

குடும்ப பெண்களின் விருப்பம்

குடும்ப பெண்களின் விருப்பம்

இதனிடையே தற்போதைய எபிசோடில், விவாகரத்து பெற்ற கையோடு தன்னுடைய மகன் எழிலுடன் சேர்ந்து நல்ல ஹோட்டலில் போய் சாப்பிடுகிறார். அந்த உணவு பிடித்திருக்கிறதா என்று எழில் கேட்க, உணவு பிடித்திருப்பதைவிட, குடும்பப் பெண்களுக்கு யாராவது இப்படி உட்கார வைத்து பரிமாற மாட்டார்களா என்ற ஏக்கமே அதிகமாக இருக்கும் என்றும் அது தற்போது நிறைவேறியுள்ளதாகவும் தெரிவித்தார்.

அம்மாவை பார்த்து ஆச்சர்யப்படும் எழில்

அம்மாவை பார்த்து ஆச்சர்யப்படும் எழில்

இதையடுத்து அவரை பார்க்கும்போது தனக்கு அதிகமான வியப்பு ஏற்படுவதாக எழில் கூறுகிறார். விவாகரத்து பெற்ற கையோடு, இப்படி சாவகாசமாக அமர்ந்து அவர் சாப்பி

தொடர்ந்து சிக்கன் லாலிபாப்பை கையில் எடுக்கும் பாக்கியா, அதை பார்க்கும்போது தனது மகள் இனியாவின் நியாபகம் வருவதாக தெரிவிக்கிறார்.

வீட்டிற்கு போக முடிவெடுத்த பாக்கியா

வீட்டிற்கு போக முடிவெடுத்த பாக்கியா

தொடர்ந்து அடுத்த அதிரடியாக எங்கே போகப் போகிறோம் என்ற எழிலின் கேள்விக்கு அவர் தன்னுடைய வீட்டிற்கு போகலாம் என்று கூறுகிறார். விவாகரத்து பெற்ற நிலையில் கோபி, அதிகமாக கோபப்படுவார் என்று எழில் கூறியதையும் கேட்டுவிட்டு அவர் வீட்டிற்கு செல்வதில் பிடிவாதமாக இருக்கிறார்.

ராதிகாவை திட்டித்தீர்த்த ஜெனி

ராதிகாவை திட்டித்தீர்த்த ஜெனி

எழில் சொல்வதற்கேற்ப விவாகரத்து செய்த நிலையில், அவர் எதற்காக தனது வீட்டிற்கு செல்ல நினைக்கிறார் என்று எழில் போலவே ரசிகர்களும் யோசித்து வருகின்றனர். அவர் எதற்காக அங்கு செல்ல நினைக்கிறார் என்பது அடுத்தடுத்த எபிசோட்களில் தெரியவரும். இதனிடையே, பாக்கியாவின் மருமகள் ஜெனிக்கு ராதிகா கால் செய்கிறார். ஜெனி, அவரை திட்டித் தீர்க்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X