சட்னியில் சோப்பு போட்ட ஜென்னி.. உண்மையை கண்டுபிடித்த பாக்கியா!

சென்னை : விஜய் டிவியின் முக்கியமான தொடரான பாக்கியலட்சுமி தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் நிகழ்ச்சியுடனான மகா சங்கமத்தை முடித்துள்ளது.

கொடைக்கானலில் கோபி -ராதிகா இடையிலான பிரச்சினைகளையும், பாக்கியலட்சு குடும்பத்தினரின் உற்சாகத்தையும் ஒருசேர இயக்குநர் பதிவு செய்திருந்தார்.

இந்நிலையில் அடுத்தடுத்த பரபரப்பான எபிசோட்களுடன் இந்த நிகழ்ச்சி ரசிகர்களை சந்திக்கவுள்ளது.

ராதிகாவுடன் கோபி திருமணம்

ராதிகாவுடன் கோபி திருமணம்

விஜய் டிவியின் முக்கியமான தொடரான பாக்கியலட்சுமியில் பாக்கியாவை விவாகரத்து செய்த கையோடு ராதிகாவின் மனதை மாற்றி அவரை திருமணம் செய்துக் கொண்டார் கோபி. இதையடுத்து கொடைக்கானலில் தன்னுடைய ஆசை மனைவியுடன் கொண்டாட்டமாக பொழுதை கழிக்கலாம் என்று நினைத்த அவரது கனவு நிராசையானது.

மகா சங்கமம்

மகா சங்கமம்

கடந்த சில தினங்களாக பாக்கியலட்சுமி -பாண்டியன் ஸ்டோர்ஸ் மகா சங்கமம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. கடந்த சில தினங்களாக இந்த இரு தொடர்களின் நடிகர்களும் கொடைக்கானலில் சுற்றுலாவை மகிழ்ச்சியாக கொண்டாடினர். ஆனால் ராதிகாவை திருமணம் செய்த கையோடு கொடைக்கானல் சென்ற கோபியின் பாடு திண்டாட்டமாக மாறியது.

கொண்டாட்டத்தில் பாக்கியா குடும்பத்தினர்

கொண்டாட்டத்தில் பாக்கியா குடும்பத்தினர்

பாக்கியலட்சுமி மற்றும் குடும்பத்தினர் ஒரு பக்கம் கோபியின் திருமணம் ஏற்படுத்திய பாதிப்பிலிருந்து தங்களது மனதை மாற்றிக் கொண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தினர், கோபி மற்றும் ராதிகாவை படுத்திய பாட்டில் ராதிகாவிடம் தொடர்ந்து உதைபட்டார் கோபி.

கோபி -ராதிகா சண்டை

கோபி -ராதிகா சண்டை

ராதிகாவின் தொடர் சண்டையால் ஒரு கட்டத்தில் அவரை அடிக்க பாய்ந்தார் கோபி. தொடர்ந்து ரூமை விட்டு வெளியில் வந்த அவர், தன்னுடைய குடும்பத்தினரின் கொண்டாட்டத்தை ஏக்கத்துடன் பார்த்ததையும் ரசிகர்கள் பார்க்க முடிந்தது. இதனிடையே இந்த மகா சங்கமத்தை முடித்துக் கொண்டு தற்போது பாக்கியலட்சுமி குடும்பத்தினர் வீடு திரும்பியுள்ளனர்.

திணறிய ஜென்னி

திணறிய ஜென்னி

இங்கு ஜென்னி சமைக்க தெரியாமல், ஹோட்டலில் இருந்து வாங்கி வந்த டிபனை குடும்பத்தினருக்கு கொடுக்கிறார். இதற்கு துணையாக இருக்கிறார் செழியன். சட்னி ஒருமாதிரியாக இருக்கிறதே இதில் எதையெல்லாம் சேர்த்தாய் என்று ஈஸ்வரி கேட்க வெங்காயம், தக்காளி சேர்த்ததாக கூறுகிறார்.

சட்னியில் சோப்பு

சட்னியில் சோப்பு

தொடர்ந்து வேறு எதை சேர்த்தாய் என்று கேட்க, பாக்கியலட்சுமி சோம்பு போட்டிருப்பாள் என்று எடுத்து கொடுக்கிறார். ஆனால் அதுகுறித்து தெரியாத ஜென்னி, ஆமாம் பாட்டி சோப்புதான் சேர்த்தேன் என்றுகூற அவர்கள் அனைவரும் முழிக்கின்றனர். இவ்வாறு சோம்பிற்கும் சோப்பிற்கும் வித்தியாசம் தெரியாத ஜென்னியின் பேச்சு அனைவரையும் முழிக்க செய்வதாக ப்ரமோ வெளியாகியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X