வல்கரின் உச்சம்.. மாதம் 1 கோடி சம்பாதித்த மாடல்கள்.. அஸ்வினியை தொடர்ந்து விஷ்ணுப்ரியாவுக்கும் ஆப்பு!

ஹைதராபாத்: சின்னத்திரையின் முன்னணி தொகுப்பாளினியான விஷ்ணுப்ரியா பீமினேனி, தனது நிகழ்ச்சிகள் மூலம் லட்சக்கணக்கான ரசிகர்களைப் பெற்றுள்ளார். தற்போது ஒரு புதிய சர்ச்சையில் சிக்கிவுள்ள அவர், டோலிவுட் மற்றும் தொலைக்காட்சி வட்டாரங்களில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறார்.

மலையாள சோஷியல் மீடியா இன்ஃப்ளூயன்சர் அஸ்வினி மாதம் ஒரு கோடி ரூபாய் சம்பாதித்து வந்ததாக தகவல்கள் வெளியான நிலையில், சமீபத்தில் அவரது கணக்கு முடக்கப்பட்டது. இந்நிலையில், அதே போன்ற சிக்கலை விஷ்ணுப்ரியா சந்திக்கப்போகிறார்.

After Malayalam Influence Ashwani Now Telugu Influencer Vishnupriya Bhimeneni facing big issue
Photo Credit:

சமீபகாலமாக சமூக வலைத்தளங்களில் கவர்ச்சிகரமான புகைப்படங்கள், வீடியோக்களைப் பகிர்ந்து பரபரப்பு ஏற்படுத்தி வந்த விஷ்ணுப்ரியாவுக்கு, இந்தச் செயல்பாடு தற்போது சிக்கலைத் தந்துள்ளது. விஜயவாடாவின் சூர்யாராவ்பேட்டை சைபர் குற்றப் பிரிவில் அவர் மீது அதிகாரப்பூர்வ புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது.

விஷ்ணுப்ரியாவுக்கு எதிராக மாணவர் படை: அகில இந்திய மாணவர் கூட்டமைப்பின் (AISF) தலைவர்கள் புகாரைப் பதிவு செய்தனர். விஷ்ணுப்ரியா தனது இன்ஸ்டாகிராம் கணக்கில் "ஆபாசமான" மற்றும் "அரை நிர்வாணமான" புகைப்படங்கள், வீடியோக்களை வெளியிடுவதாக குற்றம்சாட்டினர். இது இளைஞர்களைத் தவறாக வழிநடத்தி, சமூக நெறிமுறைகளை சிதைப்பதாக புகாரில் வலியுறுத்தப்பட்டது.

புகாரில், சந்தா அடிப்படையிலான உள்ளடக்கமும் குறிப்பிடப்பட்டுள்ளது. விஷ்ணுப்ரியா தனது சில தனிப்பட்ட காட்சிகளைக் காண பணம் செலுத்த வேண்டும் என விளம்பரம் செய்வதாக AISF தலைவர்கள் குற்றம் சாட்டினர். இதை பிரபலத்திற்காக மட்டுமல்லாமல், நிதி மோசடி என்றும் அவர்கள் கண்டித்தனர்.

வக்கிரத்தின் உச்சம்: சமூக வலைத்தளங்களை இவ்வாறு பயன்படுத்துவது தவறு என்றும், பிரபலங்கள் பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்றும் அவர்கள் வ்லியுறுத்தினர். ஆகவே, விஷ்ணுப்ரியா மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்து, அவரது இன்ஸ்டாகிராம் கணக்கை உடனடியாக முடக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.

புகாரின் பேரில், காவல்துறையினர் முதற்கட்ட விசாரணையைத் தொடங்கியுள்ளனர். ஐடி சட்டத்தின் சம்பந்தப்பட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு ஆய்வு செய்யப்பட்டு, தேவைப்பட்டால் மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதிப்படுத்தினர். சமூக ஊடகங்களில் ஆபாசமான உள்ளடக்கத்தைப் பரப்புவது சட்டப்படி குற்றம் என்றும் காவல் துறை எச்சரித்துள்ளது.

ஆப்பு ரெடி: விஷ்ணுப்ரியா, "போவே போரா" போன்ற நிகழ்ச்சிகள் மூலம் சின்னத்திரையில் பிரபலமடைந்தார். அவரது துடிப்பான தொகுப்பாளர் பாணி இளைஞர்கள் மத்தியில் பெரிய ரசிகர் தளத்தைப் பெற்றுத் தந்தது. "பிக்பாஸ்" போன்ற ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் பங்கேற்று மேலும் புகழ்பெற்றார்.

சமீபகாலமாக, அவர் தனது பிம்பத்தை மாற்றி, கவர்ச்சிக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறார். சமூக வலைத்தளங்களில் பகிரும் தைரியமான புகைப்படங்கள், நடன வீடியோக்கள் பலமுறை விமர்சனங்களைச் சந்தித்தன. இதற்கு விஷ்ணுப்ரியா கடந்த காலங்களில் "என் உடல், என் விருப்பம்" எனப் பதிலளித்துள்ளார்.

அவர் தனிப்பட்ட சுதந்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து விமர்சனங்களைப் புறக்கணித்த நிலையில், இப்போது இவ்விவகாரம் காவல் வழக்கு நிலையை அடைந்துள்ளது. இது மேலும் பெரிய சர்ச்சையாக மாறக்கூடும். இந்த புகார் குறித்து விஷ்ணுப்ரியா தரப்பிலிருந்து இதுவரை எந்த அதிகாரப்பூர்வ பதிலும் வரவில்லை. அவர் இந்தக் குற்றச்சாட்டுகளை எப்படி எதிர்கொள்வார், சட்ட ரீதியாக என்ன நடவடிக்கை எடுப்பார் என்பது மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X