இனிமே ஜெயா டிவிலையும் அண்ணா படம் போடமாட்டானுங்க.. விஜய்யை மீம் போட்டு கலாய்க்கும் நெட்டிசன்கள்!

சென்னை: திமுகவை எதிர்த்து தொடர்ந்து ஆவேசமாக அரசியலில் குதித்த உடனே விஜய் பேசிய நிலையில், அவரது படங்களையும் பாடல்களையும் சன் டிவி, கலைஞர் டிவி உள்ளிட்ட சன் குடும்ப தொலைக்காட்சிகளில் போடுவதில்லை என பரவலான புகார் எழுந்துள்ளது.

இந்நிலையில், சமீபத்தில், நடைபெற்ற விசில் சின்ன அறிமுக கூட்டத்தில் அதிமுகவையும் ஊழல் கட்சி என விஜய் பேசிய நிலையில், அதற்கு எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரன் உள்ளிட்டோர் பலத்த எதிர்வினை ஆற்றி வருகின்றனர்.

After Sun Tv Jaya Tv also hereafter not telecast vijay movies memes goes viral

இந்நிலையில், "இனிமே ஜெயா டிவிலையும் அண்ணா படம் போடமாட்டானுங்க" என மீம்ஸ் போட்டு நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.

அரசியலில் அழுத்தம்: நடிகர் விஜய் தவெக கட்சி தலைவராக மாறியுள்ள நிலையில், முதல் தேர்தலிலேயே வெற்றி வாகை சூடிவிடுவேன் என்கிற தன்னம்பிக்கையுடன் தொடர்ந்து திமுக, பாஜக, அதிமுக உள்ளிட்ட கட்சிகளை எதிர்த்து வெளிப்படையாக பேசி வருகிறார். அதன் காரணமாக அவருக்கு தொடர்ந்து அந்த கட்சியினர் அழுத்தம் கொடுத்து வருகின்றனர். ஜனநாயகன் படம் வெளியாக விடாமல் தடுப்பதே அரசியல் அழுத்தம் காரணமாகத்தான் என்றும் தவெகவினர் ஓபனாகவே குற்றச்சாட்டுக்களை முன் வைத்தனர்.

ஜெயா டிவியிலும் இல்லை: குருவி, சுறா, சர்க்கார் என திமுக தொடர்புடைய தயாரிப்பு நிறுவனங்களில் ஏகப்பட்ட படங்களில் நடித்து முன்னணி நடிகராக விஜய் மாறினார். ஒவ்வொரு படத்தையும் சன் டிவி பெரிய தொகைக்கு வாங்கி ஒளிபரப்பி வந்தது. விஜய்யின் ஆடியோ லான்ச் எல்லாம் சன் டிவியில் ஒளிபரப்பானது. ஆனால், அரசியல் களத்தில் விஜய் குதித்து திமுகவுக்கு எதிராக பேசி வரும் நிலையில், சன் டிவியில் அவரது படங்கள், பாடல்கள் எல்லாம் சமீப காலமாக போடுவதை நிறுத்தி வைத்துள்ளனர். இந்நிலையில், அதிமுகவையும் விஜய் பகைத்துக் கொண்டதால், ஜெயா டிவியிலும் விஜய் படங்களை போடமாட்டாங்களேன்னு மீம்ஸ் போட்டு வருகின்றனர்.

எங்க கிட்ட வாங்க: விஜய் டிவியும் ஜீ தமிழ் டிவியும் எங்க கிட்ட வாங்க இனிமே விஜய் படங்களை நாங்க போடுறோம் என சிவாஜி படத்தில் சாலமன் பாப்பையா பேசும் காட்சி மீம் டெம்பிளேட்டை எல்லாம் போட்டு பங்கம் பண்ணி வருகின்றனர். நிஜமாகவே ஜெயா டிவியில் எல்லாம் விஜய் படத்தை பார்ப்பீங்களா என தளபதி ரசிகர்கள் பதில் ட்ரோலும் செய்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X