அரோராவோட எல்லா வீடியோவும் பார்த்திருக்கேன்.. எனக்கு ஒரு வயசு தான் ஆகுது.. அகோரி கலையரசன் ஓபன் டாக்!
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சி வெற்றிகரமாக முதல் வாரத்தின் முடிவுக்கு வரவுள்ள நிலையில், இந்த வாரத்தின் வொர்ஸ்ட் பர்ஃபார்மார்களை தேர்ந்தெடுக்கும் டாஸ்க் நடைபெற்றது. அதில், போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் வந்து இந்த 2 பேர் ஏன் இந்த பிக் பாஸ் வீட்டில் இருக்காங்க என்றே தெரியவில்லை என நெத்தியடியாக பேசினர்.
ஆனால், நம்ம அகோரி கலையரசன் அரோரா என்னிடம் பேசுவதே இல்லை என்றும் அவங்களோட எல்லா வீடியோவும் நான் பார்த்து இருக்கேன் என அசடு வலிந்து பேசியது ரசிகர்களை கடுப்பில் ஆழ்த்தியுள்ளது. மேலும், தனக்கு 1 வயது தான் ஆகிறது என்றும் இனிமேல் தான் அகோரி அல்ல வெறும் கலையரசன் தான் என்றும் முன்னதாக அவர் பேசியதையும் சேர்த்து ஷேர் செய்து ட்ரோல் செய்து வருகின்றனர்.

விஜய் டிவி மற்றும் ஜியோ ஹாட்ஸ்டாரில் பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி ஓடிக் கொண்டிருக்கிறது. இதில் வாட்டர் மெலன் ஸ்டார் திவாகர் பேசும் போது இயக்குநர் பிரவீன் காந்தி நாகார்ஜுனாவை எல்லாம் வைத்து படம் பண்ணிவிட்டு இங்கே சிறு பிள்ளைத்தனமாக நடந்துக் கொள்வது தனக்கு பிடிக்கவில்லை என்று பேசியதும் ரசிகர்களை ஷாக் ஆக்கியுள்ளது.
பிக் பாஸ் செலக்ஷனை மக்கள் கேள்வி கேட்பாங்க: வாட்டர்மெலான் திவாகர் பேசும் போது ஹாலிவுட் ஸ்டாராக போகிறேன் என அலப்பறை செய்து கொண்டிருக்கும் பிரவீனை எதுக்கு பிக் பாஸ் வீட்டில் விட்டார்கள் என மக்கள் நிச்சயம் கேள்வி கேட்பாங்க. பிக் பாஸ் செலக்ஷன் மீதே மக்களுக்கு சந்தேகம் வரும் என்றார். மேலும், இயக்குநர் பிரவீன் காந்தியை உயர்ந்த இடத்தில் வைத்திருக்கிறேன். ஆனால், அவர் கெமியுடன் சண்டை நடக்கும் போது சாதாரண ஆடியன்ஸ் போல பிஹேவ் செய்தார் என்றார். ஏற்கனவே திவாகர், அரோரா உள்ளிட்ட பல போட்டியாளர்களை எதுக்கு உள்ளே விட்டார்கள் என மக்கள் ட்ரோல் செய்து கொண்டு தான் இருக்கும் நிலையில், திவாகர் இப்படி பேசியுள்ளார்.
ஒரு வயசு தான் ஆகுது: 25 வயசுக்குள்ள எல்லா தப்பையும் பண்ணி தொலைச்சிட்டேன். காசிக்குப் போய் எல்லா கருமத்தையும் கழிச்சிட்டேன். இப்போ எனக்கு ஒரு வயசு தான் ஆகுது. இனிமேல் நான் அகோரி கலையரசன் கிடையாது. வெறும் கலையரசன் தான். அகோரி எனக்குள்ளே தான் எப்போதுமே இருக்கும். என் குழந்தையை ஸ்கூல்ல சேர்க்கப் போனாக் கூட அகோரி புள்ளைன்னு சொல்லி சேர்க்க மறுக்கிறாங்க, அதுக்குத்தான் பிக் பாஸ் வந்துள்ளேன் என கலையரசன் பேசியுள்ளார்.
அரோரா பேச மாட்றா: இந்நிலையில், இன்று வீட்டில் இவங்க ஏன் இருக்காங்க என வொர்ஸ்ட் போட்டியாளரை தேர்வு செய்து ஜெயிலுக்கு அனுப்பும் டாஸ்க்கின் போது, அரோராவின் பெயரை சொன்ன கலையரசன், இவங்க வீடியோ எல்லாத்தையும் நான் பார்த்து இருக்கேன். பிக் பாஸ் வீட்ல இவங்களான்னு முதலில் பார்த்த உடனே ஷாக் ஆனேன். ஆனால், என் கூட பேசவே மாட்றாங்க, அதனால இவங்கள நான் சொல்றேன் என அசடு வலிந்துள்ளார். அதை பார்த்த ரசிகர்கள் உள்ளுக்குள்ள அகோரி வெளியே வருகிறான் பாருங்க டா என கலாய்த்து வருகின்றனர். பலூன் அக்கா என ஏகப்பட்ட ஆபாச கன்டென்ட்டுகளை வெளியிட்டு வைரலானவர் தான் அரோரா என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான்.


Click it and Unblock the Notifications











