Agni natchathiram serial: டிவியிலும் அக்னி நட்சத்திரம் இப்படித் தாக்குதே!
சென்னை: சன் டிவியின் அக்னி நட்சத்திரம் சீரியலில் ஒருத்தருக்கு ஒருத்தர் கோவத்தில் உரசிக் கொள்வது ரொம்ப சூடா இருக்கு.
அப்பாவும், நண்பனும் இவ்ளோ அன்யோன்யமா இருக்கறது பொண்ணு அகிலாவுக்கும், மனைவி நளினிக்கும் பிடிக்கலை.
இதில் நண்பர்கள் மட்டுமில்லை இவர்கள், நளினியின் புருஷனுக்கு நண்பன் டிரைவர். புருஷனோ பெரும் தொழிலதிபர். இங்கதான் டிரைவர் குடுமப்த்தின் மேல் கோவம் வருது நளினிக்கும் ,அவங்க பொண்ணு அகிலாவுக்கும்.

மீரா அப்பா
டிரைவர் பொண்ணுதான் மீரா,மீராவும் அகிலாவும் ரெட்டை குழந்தைகள். ஆனால், இரு குடும்பத்திலும் கணவன் மார்களுக்கு மட்டுமே இந்த உண்மை தெரியும்.காரணம் நளினியின் குழந்தை பிறந்ததும் இறந்துவிட்டது. கர்பப்பையையும் எடுக்க வேண்டிய சூழல்.அதனால்தான் டிரைவர் நண்பன் தனக்கு பிறந்த இரட்டை குழந்தைகளில் ஒரு குழந்தையை நண்பனுக்கு குடுத்திடறார். இவர்கள் வளர்ந்து மீராவும், அகிலாவும் ஒரே கல்லூரியில் படிக்கறாங்க.

பிடிச்ச ஸ்ரீதர்
ரெண்டு பேரும் ஒரே கல்லூரியில் படிப்பதையே பணக்கார அகிலாவால் சகிச்சுக்க முடியலை, நான் நல்லா படிச்சு மார்க் வாங்கிட்டா இந்த காலேஜை விட்டு நீ போயிடணும்னு சவால் வேற விட்டுகிட்டு இருக்கா. மீராவின் அம்மாவை வீட்டு வேலைக்கு கூப்பிட்டு,அவங்களை ரொம்ப அவமானப் படுத்தி வேற விட்டிருக்கா.கடைசியில் திருட்டு பழியும் போட்டுடா போலீஸ் வந்து பிடிச்சுக்கிட்டு போயிடறாங்க. கூடவே இருந்து மீராவின் அம்மாவைப் பார்த்துக்க முன்பே அறிமுகமான ஸ்ரீதர் மீரா கூடவே இருக்கான்.

அகிலா ஸ்ரீதர்
ஸ்ரீதர் அகிலா அப்பா கம்பெனியில் வேலைப் பார்க்கிறான். அவன்பணக்கார பையன். அப்பா அடி மட்டத்திலிருந்து எல்லாத்தையும் கத்துக்கிட்டு கம்பெனியில் பொறுப்பு ஏத்துக்கிட்டா நல்லருக்கும்னு ஸ்ரீதரை நண்பன் கம்பெனிக்கு வேலைக்கு அனுப்பி வைக்கிறார். அப்போது ஸ்ரீதரை அகிலாவுக்கு பிடிச்சு போகுது. அவுட்டிங் போலாம்னு கூப்பிடறா அகிலா.அதே நேரம் உதவி செய்ததற்கு நன்றி சொல்ல அவுட்டிங் கூப்பிடறா மீரா. மீராவுக்கு ஓகே சொல்லிட்டு அகிலாவை பிளாக் பண்றான் ஸ்ரீதர். காத்திருந்துவிட்டு கோவமாகப் போகிறாள் அகிலா.

ரெண்டு பொண்ணு
ஒரு பையனுக்கு ரெண்டு பொண்ணுங்க ஆசைப்படும் கதையை எப்போதுதான் மாத்துவீங்க. வேற பசங்களா இல்லை... யார் மனசுல யார் இருக்காங்களோ அவங்களுக்கு டீசண்டா வழிவிட இன்னுமா கதை தயார் பண்ண முடியலை?


Click it and Unblock the Notifications