அக்னிப் பறவையில் அதிரடித் திருப்பங்கள்
புதுயுகம் தொலைக்காட்சியில் பெண்களின் அபிமானத் தொடராக திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 8.30 மணிக்கு ஓளிபரப்பாகிறது, 'அக்னி பறவை' மெகா தொடர்.
இரு துருவங்களாக பிரிந்துவாழும் ரிஷி - அம்மு இருவரும் ஒரே அலுவலகத்தில் வேலை செய்யும் சூழல் ஏற்பட்டுள்ளதால், அடுத்து என்ன நடக்கப்போகிறதோ என்று இதயத்தை எகிறவைக்கும் அளவுக்கு காட்சிகள் வரும் வாரங்களில் நகர்கின்றன.

குடும்பத்தில் தகராறு
கோபமும் பிடிவாதமும் கொண்ட அம்முவுக்கும் கணவன் ரிஷிக்கும் இடையே அடிக்கடி சண்டை நடக்கிறது.

பூஜாவின் வருகை
வெறுப்புடன் இணைந்துவாழும் இந்தத் தம்பதிக்கு இடையே இளம்பெண் பூஜா வருகிறாள். அதனால் பெரும் மோதல் வெடிக்கவே இருவரும் பிரிந்து வாழ்கிறார்கள்.

யாருக்கு குழந்தை
இவர்களது ஒரே குழந்தையான மாதவியை, தங்கள் பக்கம் இழுப்பதில் அவ்வப்போது மோதல் நடக்கிறது. இந்த நேரத்தில் மீண்டும் பூஜா இவர்களது வாழ்க்கைக்கு நடுவே, மாதவியின் ஆசிரியையாக நுழைகிறாள்.

அம்முவின் சந்தேகம்
கண் தெரியாத பள்ளியின் நிர்வாகியை திருமணம் முடித்திருக்கும் பூஜாவுக்கும் ரிஷிக்கும் இடையே இன்னமும் உறவு தொடர்வதாக அம்மு சந்தேகப்படுகிறாள்.

ஒரே அலுவலகத்தில் வேலை
அதனால் இவர்களுக்குள் மோதல் அதிகரிக்கிறது. இந்த நேரத்தில் எதிர்பாராதவிதமாக அம்முவும் ரிஷியும் ஒரே அலுவலகத்தில் எதிரெதிரே அமர்ந்து வேலை செய்யவேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது.

பரபரப்பான திருப்பங்கள்
அலுவலகத்தில் இருவரும் சேர்ந்து வேலை செய்வார்களா
அல்லது எப்போதும்போல் சண்டை நடக்குமா என்பதை வரும் வாரங்களில் காணலாம்.

பிரபல நட்சத்திரங்கள்
இந்தத் தொடரில் மனுஷ், வெங்கட், மதுமிலா, ரிந்துரவி, சுசித்ரா, உஷா சாய், தீபா ஷங்கர் ஆகியோர் நடிக்கிறார்கள். கிராங்க் மீடியா ஒர்க்ஸ் சார்பில் ரமேஷ்கிருஷ்ணன் தயாரிக்க, தேவேந்திரன் இயக்குகிறார். காதல், மோதல் நிறைந்த "அக்னி பறவை" தொடரை இரவு 8.30 மணிக்குக் காணத் தவறாதீர்கள்.


Click it and Unblock the Notifications











