புதிய தலைமுறை தொலைக்காட்சியின் உழவுக்கு உயிரூட்டு
புதிய தலைமுறை தொலைக்காட்சில் வாரந்தோறும் சனிக்கிழமை மாலை 4.30 மணி முதல் 5.00 மணிவரையிலும், ஞாயிறு இரவு 9.30 மணி முதல் இரவு 10.00 மணிவரை ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி புதிய உழவுக்கு உயிரூட்டு.
தமிழ் தொலைக்காட்சிகளில் விவசாயம் தொடர்பான நிகழ்ச்சிகள் மிகக் குறைவே. விவசாயம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் தொலைக்காட்சிகளின் வரிசையில் புதிய கோணத்தில் விவசாயத்தை அணுகும் நிகழ்ச்சி உழவுக்கு உயிரூட்டு.
விவசாயம் செய்து வருபவர்களின் எண்ணிக்கை குறைந்து வருவது,வேளாண்மை செய்து லாபம் ஈட்ட முடியாத சூழல், விவசாயதொழிலாளர்கள் கிடைப்பது அரிதாகி வருவது, விளை நிலங்களின் பரப்பளவு குறைந்து வருவது போன்ற காரணங்களால் விவசாயம்பற்றி எதிர்மறையான எண்ணங்களே சமூகத்தில் பரவி வருகிறது.

இளையதலைமுறைக்கு விவசாயம்
இந்த சூழலில் இளை தலைமுறையினருக்கும், விவசாயத்துடன்தொடர்பு இல்லாதவர்களுக்கும் கூட விவசாயத்தின் மீதுமரியாதையையும், ஆர்வத்தையும் ஏற்படுத்தும் புதியதலைமுறையின் முயற்சியே உழவுக்கு உயிரூட்டு....

விவசாயிகளின் அனுபவங்கள்
வெற்றிகரமாக விவசாயம் செய்து லாபம் ஈட்டும் விவசாயிகளின்அனுபவங்கள், விவசாயத்தில் புதிய தொழில்நுட்பங்கள், மாற்றுமுறையில் விவசாயம் செய்வது எப்படி?

விவசாயத் தொழில்கள்
புதிய ரக பயிர்கள்,விவசாயம் சார்ந்த தொழில்கள், கால்நடை வளர்ப்பு முதல் மீன்வளர்ப்பு வரை கூடுதல் லாபம் தரும் தொழில்கள் குறித்த தகவல்கள்...அத்தனையையும் தாங்கி வருகிறது உழவுக்கு உயிரூட்டு நிகழ்ச்சி....

விவசாயிகளுக்குத் தகவல்கள்
விவசாயிகளுக்கு தகவல்களை கொண்டு சேர்த்தல், விவசாயிகளுக்குகூடுதல் லாபம் ஈட்ட வழிகளைச் சொல்லுதல், விவசாயம் தொடர்பான அரசின் திட்டங்கள், அறிவிப்புகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துதல் உள்ளிட்ட அம்சங்களுடன் வாரந்தோறும் ஒளிபரப்பாகிவருகிறது உழவுக்கு உயிரூட்டு....

நெல்லிக்காய் சாகுபடி
இந்த வார நிகழ்ச்சியில் நெல்லிக்காய் சாகுபடியில் புதிய தொழில்நுட்பம் பற்றிய தகவல்களும், கடுமையான வறட்சியின் போது பயிர்கள் கருகிவிடாமல் பாதுகாக்கும்.

விவசாய தொழில் நுட்பம்
தொழில்நுட்பம் குறித்த விவரங்களும் இடம் பெறுகிறது. அத்துடன், நெல் அறுவடையின் போது வீணாகும் வைகோலை சேதாரமின்றி கட்டும் இயந்திரம் பற்றிய பயனுள்ள தகவல்களும் இந்த வார நிகழ்ச்சியில் இடம் பெறுகிறது.


Click it and Unblock the Notifications